Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முனாஃபிஃகூன் வசனம் ௩

Qur'an Surah Al-Munafiqun Verse 3

ஸூரத்துல் முனாஃபிஃகூன் [௬௩]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ذٰلِكَ بِاَنَّهُمْ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا فَطُبِعَ عَلٰى قُلُوْبِهِمْ فَهُمْ لَا يَفْقَهُوْنَ (المنافقون : ٦٣)

dhālika
ذَٰلِكَ
That
அதற்கு காரணம்
bi-annahum
بِأَنَّهُمْ
(is) because
நிச்சயமாக அவர்கள்
āmanū
ءَامَنُوا۟
they believed
நம்பிக்கை கொண்டனர்
thumma
ثُمَّ
then
பிறகு
kafarū
كَفَرُوا۟
they disbelieved;
நிராகரித்தனர்
faṭubiʿa
فَطُبِعَ
so were sealed
ஆகவே, முத்திரை இடப்பட்டுவிட்டது
ʿalā qulūbihim
عَلَىٰ قُلُوبِهِمْ
[upon] their hearts
அவர்களின் உள்ளங்கள் மீது
fahum
فَهُمْ
so they
ஆகவே, அவர்கள்
lā yafqahūna
لَا يَفْقَهُونَ
(do) not understand
புரிய மாட்டார்கள்

Transliteration:

Zaalika bi annahum aamanoo summa kafaroo fatubi'a 'alaa quloobihim fahum laa yafqahoon (QS. al-Munāfiq̈ūn:3)

English Sahih International:

That is because they believed, and then they disbelieved; so their hearts were sealed over, and they do not understand. (QS. Al-Munafiqun, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

(இதற்குரிய) காரணமாவது: இவர்கள் "நம்பிக்கைக் கொண்டோம்" என்று (வாயினால்) கூறிப் பின்னர் அதனை நிராகரித்துவிட்டதுதான் (காரணம்). ஆகவே, அவர்களுடைய உள்ளங்களில் முத்திரையிடப்பட்டுவிட்டது. (எதையும்) அவர்கள் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.. (ஸூரத்துல் முனாஃபிஃகூன், வசனம் ௩)

Jan Trust Foundation

இது நிச்சயமாக இவர்கள் ஈமான் கொண்டு பின் காஃபிர் ஆகி விட்டதனாலேயாகும்; ஆகவே இவர்களின் இதயங்கள் மீது முத்திரையிடப்பட்டு விட்டது; எனவே, அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதற்கு காரணம், நிச்சயமாக அவர்கள் (முதலில் வெளிப்படையாக) நம்பிக்கை கொண்டனர், (ஆனால்) பிறகு, (உள்ளுக்குள்) நிராகரித்தனர். ஆகவே, அவர்களின் உள்ளங்கள் மீது முத்திரை இடப்பட்டுவிட்டது. ஆகவே, அவர்கள் (தங்களுக்குரிய சீர்திருத்தத்தை) புரிய மாட்டார்கள்.