Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முனாஃபிஃகூன் வசனம் ௨

Qur'an Surah Al-Munafiqun Verse 2

ஸூரத்துல் முனாஃபிஃகூன் [௬௩]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِتَّخَذُوْٓا اَيْمَانَهُمْ جُنَّةً فَصَدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ ۗاِنَّهُمْ سَاۤءَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ (المنافقون : ٦٣)

ittakhadhū
ٱتَّخَذُوٓا۟
They take
ஆக்கிக் கொண்டனர்
aymānahum
أَيْمَٰنَهُمْ
their oaths
தங்கள் சத்தியங்களை
junnatan
جُنَّةً
(as) a cover
கேடயமாக
faṣaddū
فَصَدُّوا۟
so they turn away
தடுத்தனர்
ʿan sabīli
عَن سَبِيلِ
from (the) Way
பாதையை விட்டு
l-lahi
ٱللَّهِۚ
(of) Allah
அல்லாஹ்வின்
innahum
إِنَّهُمْ
Indeed
நிச்சயமாக அவர்கள்
sāa
سَآءَ
evil is
மிகக் கெட்டுவிட்டன
mā kānū yaʿmalūna
مَا كَانُوا۟ يَعْمَلُونَ
what they used (to) do
அவர்கள் செய்துகொண்டிருந்தவை

Transliteration:

Ittakhazoo aymaanahum junnatan fasaddoo 'an sabeelil laah; innahum saaa'a maa kaanoo ya'maloon (QS. al-Munāfiq̈ūn:2)

English Sahih International:

They have taken their oaths as a cover, so they averted [people] from the way of Allah. Indeed, it was evil that they were doing. (QS. Al-Munafiqun, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

(தவிர, இவர்கள்) தங்களுடைய (பொய்ச்) சத்தியங்களை ஒரு கேடயமாக வைத்துக் கொண்டு (மக்களை) அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து தடுக்கின்றனர். நிச்சயமாக இவர்கள் செய்து கொண்டிருக்கும் காரியம் மகாகெட்டது. (ஸூரத்துல் முனாஃபிஃகூன், வசனம் ௨)

Jan Trust Foundation

இவர்கள் தங்களுடைய (பொய்ச்)சத்தியங்களைக் கேடயமாக வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களைத்) தடுத்தும் வருகின்றனர்; நிச்சயமாக இவர்கள் செய்து கொண்டிருப்பது மிகவும் கெட்டது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் தங்கள் (பொய்) சத்தியங்களை (அல்லாஹ்வின் உலக தண்டனையில் இருந்து தப்பிப்பதற்கு) கேடயமாக ஆக்கிக்கொண்டனர். அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களை) தடுத்தனர். நிச்சயமாக அவர்கள் செய்துகொண்டிருந்தவை மிகக் கெட்டுவிட்டன.