குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முனாஃபிஃகூன் வசனம் ௧௦
Qur'an Surah Al-Munafiqun Verse 10
ஸூரத்துல் முனாஃபிஃகூன் [௬௩]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّأْتِيَ اَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُوْلَ رَبِّ لَوْلَآ اَخَّرْتَنِيْٓ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۚ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِيْنَ (المنافقون : ٦٣)
- wa-anfiqū
- وَأَنفِقُوا۟
- And spend
- தர்மம் செய்யுங்கள்
- min mā razaqnākum
- مِن مَّا رَزَقْنَٰكُم
- from what We have provided you
- நாம் உங்களுக்கு கொடுத்தவற்றில் இருந்து
- min qabli
- مِّن قَبْلِ
- from before
- முன்னர்
- an yatiya
- أَن يَأْتِىَ
- [that] comes
- வருவதற்கு
- aḥadakumu
- أَحَدَكُمُ
- (to) one of you
- உங்களில் ஒருவருக்கு
- l-mawtu
- ٱلْمَوْتُ
- the death
- மரணம்
- fayaqūla
- فَيَقُولَ
- and he says
- அவர் கூறுவார்
- rabbi
- رَبِّ
- "My Lord!
- என் இறைவா!
- lawlā akhartanī
- لَوْلَآ أَخَّرْتَنِىٓ
- Why not You delay me
- நீ என்னை பிற்படுத்தி வைக்கமாட்டாயா!
- ilā ajalin
- إِلَىٰٓ أَجَلٍ
- for a term
- தவணை வரை
- qarībin
- قَرِيبٍ
- near
- கொஞ்சம் சமீபமான
- fa-aṣṣaddaqa
- فَأَصَّدَّقَ
- so I would give charity
- நான் தர்மம் செய்வேனே
- wa-akun
- وَأَكُن
- and be
- இன்னும் ஆகிவிடுவேனே
- mina l-ṣāliḥīna
- مِّنَ ٱلصَّٰلِحِينَ
- among the righteous"
- நல்லவர்களில்
Transliteration:
Wa anifqoo mim maa razaqnaakum min qabli any-yaatiya ahadakumul mawtu fa yaqoola rabbi law laaa akhkhartaneee ilaaa ajalin qareebin fa assaddaqa wa akum minassaaliheen(QS. al-Munāfiq̈ūn:10)
English Sahih International:
And spend [in the way of Allah] from what We have provided you before death approaches one of you and he says, "My Lord, if only You would delay me for a brief term so I would give charity and be of the righteous." (QS. Al-Munafiqun, Ayah ௧௦)
Abdul Hameed Baqavi:
உங்களுக்கு மரணம் வருவதற்கு முன்பாகவே, நாம் உங்களுக்குக் கொடுத்தவைகளிலிருந்து தானம் செய்யுங்கள். (அவ்வாறு செய்யாதவன் மரணிக்கும் சமயத்தில்,) "என் இறைவனே! ஒரு சொற்ப காலத்திற்கு என்னை விட்டுவைக்க வேண்டாமா? (அவ்வாறு விட்டால்,) நான் தானமும் செய்வேன்; (நன்மைகளைச் செய்து) நல்லோர்களிலும் ஆகிவிடுவேன்" என்று கூறுவான். (ஸூரத்துல் முனாஃபிஃகூன், வசனம் ௧௦)
Jan Trust Foundation
உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்களில் ஒருவருக்கு மரணம் வருவதற்கு முன்னர் நாம் உங்களுக்கு கொடுத்தவற்றில் இருந்து (நல்ல வழிகளில்) தர்மம் செய்யுங்கள். (ஒருவருக்கு மரணம் வந்துவிட்டால்) அவர் கூறுவார்: “என் இறைவா! நீ என்னை (என் மரணத்தை) கொஞ்சம் சமீபமான தவணை வரை (இவ்வுலகில்) பிற்படுத்தி வைக்கமாட்டாயா! (இன்னும் சிறிது காலம் வாழவைக்க மாட்டாயா!). நான் தர்மம் செய்வேனே, நல்லவர்களில் ஆகிவிடுவேனே.”