Skip to content

ஸூரா ஸூரத்துல் முனாஃபிஃகூன் - Word by Word

Al-Munafiqun

(al-Munāfiq̈ūn)

bismillaahirrahmaanirrahiim

اِذَا جَاۤءَكَ الْمُنٰفِقُوْنَ قَالُوْا نَشْهَدُ اِنَّكَ لَرَسُوْلُ اللّٰهِ ۘوَاللّٰهُ يَعْلَمُ اِنَّكَ لَرَسُوْلُهٗ ۗوَاللّٰهُ يَشْهَدُ اِنَّ الْمُنٰفِقِيْنَ لَكٰذِبُوْنَۚ ١

idhā jāaka
إِذَا جَآءَكَ
உம்மிடம் வந்தால்
l-munāfiqūna
ٱلْمُنَٰفِقُونَ
நயவஞ்சகர்கள்
qālū
قَالُوا۟
கூறுவார்கள்
nashhadu
نَشْهَدُ
நாங்கள் சாட்சி பகருகிறோம்
innaka
إِنَّكَ
நிச்சயமாக நீர்
larasūlu
لَرَسُولُ
தூதர்தான் என்று
l-lahi
ٱللَّهِۗ
அல்லாஹ்வின்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
yaʿlamu
يَعْلَمُ
நன்கறிவான்
innaka
إِنَّكَ
நிச்சயமாக நீர்
larasūluhu
لَرَسُولُهُۥ
அவனது தூதர்தான் என்று
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
yashhadu
يَشْهَدُ
சாட்சி பகருகின்றான்
inna
إِنَّ
நிச்சயமாக
l-munāfiqīna
ٱلْمُنَٰفِقِينَ
நயவஞ்சகர்கள்
lakādhibūna
لَكَٰذِبُونَ
பொய்யர்கள்தான்
(நபியே! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்) நயவஞ்சகர்கள் உங்களிடம் வந்து, "நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுடைய தூதர்தான் என்று நாங்கள் சாட்சி கூறுகின்றோம்" என்பதாகக் கூறுகின்றனர். நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுடைய தூதர் என்பதை அல்லாஹ் நன்கறிவான். எனினும், இந்த நயவஞ்சகர்கள் நிச்சயமாகப் பொய்யையே கூறுகின்றனர் என்று அல்லாஹ் சாட்சியம் கூறுகின்றான். ([௬௩] ஸூரத்துல் முனாஃபிஃகூன்: ௧)
Tafseer

اِتَّخَذُوْٓا اَيْمَانَهُمْ جُنَّةً فَصَدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ ۗاِنَّهُمْ سَاۤءَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ ٢

ittakhadhū
ٱتَّخَذُوٓا۟
ஆக்கிக் கொண்டனர்
aymānahum
أَيْمَٰنَهُمْ
தங்கள் சத்தியங்களை
junnatan
جُنَّةً
கேடயமாக
faṣaddū
فَصَدُّوا۟
தடுத்தனர்
ʿan sabīli
عَن سَبِيلِ
பாதையை விட்டு
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
sāa
سَآءَ
மிகக் கெட்டுவிட்டன
mā kānū yaʿmalūna
مَا كَانُوا۟ يَعْمَلُونَ
அவர்கள் செய்துகொண்டிருந்தவை
(தவிர, இவர்கள்) தங்களுடைய (பொய்ச்) சத்தியங்களை ஒரு கேடயமாக வைத்துக் கொண்டு (மக்களை) அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து தடுக்கின்றனர். நிச்சயமாக இவர்கள் செய்து கொண்டிருக்கும் காரியம் மகாகெட்டது. ([௬௩] ஸூரத்துல் முனாஃபிஃகூன்: ௨)
Tafseer

ذٰلِكَ بِاَنَّهُمْ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا فَطُبِعَ عَلٰى قُلُوْبِهِمْ فَهُمْ لَا يَفْقَهُوْنَ ٣

dhālika
ذَٰلِكَ
அதற்கு காரணம்
bi-annahum
بِأَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
thumma
ثُمَّ
பிறகு
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
faṭubiʿa
فَطُبِعَ
ஆகவே, முத்திரை இடப்பட்டுவிட்டது
ʿalā qulūbihim
عَلَىٰ قُلُوبِهِمْ
அவர்களின் உள்ளங்கள் மீது
fahum
فَهُمْ
ஆகவே, அவர்கள்
lā yafqahūna
لَا يَفْقَهُونَ
புரிய மாட்டார்கள்
(இதற்குரிய) காரணமாவது: இவர்கள் "நம்பிக்கைக் கொண்டோம்" என்று (வாயினால்) கூறிப் பின்னர் அதனை நிராகரித்துவிட்டதுதான் (காரணம்). ஆகவே, அவர்களுடைய உள்ளங்களில் முத்திரையிடப்பட்டுவிட்டது. (எதையும்) அவர்கள் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.. ([௬௩] ஸூரத்துல் முனாஃபிஃகூன்: ௩)
Tafseer

۞ وَاِذَا رَاَيْتَهُمْ تُعْجِبُكَ اَجْسَامُهُمْۗ وَاِنْ يَّقُوْلُوْا تَسْمَعْ لِقَوْلِهِمْۗ كَاَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ ۗيَحْسَبُوْنَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْۗ هُمُ الْعَدُوُّ فَاحْذَرْهُمْۗ قَاتَلَهُمُ اللّٰهُ ۖاَنّٰى يُؤْفَكُوْنَ ٤

wa-idhā ra-aytahum
وَإِذَا رَأَيْتَهُمْ
நீர் அவர்களைப் பார்த்தால்
tuʿ'jibuka
تُعْجِبُكَ
உம்மைக் கவரும்
ajsāmuhum
أَجْسَامُهُمْۖ
அவர்களின் உடல்கள்
wa-in yaqūlū
وَإِن يَقُولُوا۟
அவர்கள் கூறினால்
tasmaʿ
تَسْمَعْ
நீர் செவியுறுவீர்
liqawlihim
لِقَوْلِهِمْۖ
அவர்களின் கூற்றை
ka-annahum khushubun
كَأَنَّهُمْ خُشُبٌ
அவர்கள் மரப்பலகைகளைப் போல்
musannadatun
مُّسَنَّدَةٌۖ
சாய்த்து வைக்கப்பட்ட
yaḥsabūna
يَحْسَبُونَ
எண்ணுவார்கள்
kulla
كُلَّ
ஒவ்வொரு
ṣayḥatin
صَيْحَةٍ
சப்தத்தையும்
ʿalayhim
عَلَيْهِمْۚ
தங்களுக்கு பாதகமாகவே
humu
هُمُ
அவர்கள்தான்
l-ʿaduwu
ٱلْعَدُوُّ
எதிரிகள்
fa-iḥ'dharhum
فَٱحْذَرْهُمْۚ
ஆகவே அவர்களிடம் கவனமாக இருப்பீராக!
qātalahumu
قَٰتَلَهُمُ
அவர்களை அழிப்பான்
l-lahu
ٱللَّهُۖ
அல்லாஹ்
annā
أَنَّىٰ
எவ்வாறு
yu'fakūna
يُؤْفَكُونَ
அவர்கள் திருப்பப்படுகின்றார்கள்
(நபியே!) அவர்களை நீங்கள் பார்த்தால், அவர்களுடைய தேகங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும். அவர்கள் பேச ஆரம்பித்தால், அவர்களுடைய வார்த்தையையே நீங்கள் கேட்கும்படி ஏற்படும். (நீங்கள் பேசுவதற்கு வாய்ப்பளிக்காது பேசுவார்கள்.) சுவற்றில் சாய்ந்த மரங்களைப்போல் அவர்கள் (அசையாது) இருப்பார்கள். (அவர்கள் செவியுறும்) எந்தச் சப்தத்தையும் தங்களுக்கு விரோதமாகப் பேசுவதாகவே எண்ணிக்கொள்வார்கள். (நபியே!) இவர்கள்தாம் (உங்களுடைய உண்மையான) எதிரிகள். ஆகவே, இவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். அல்லாஹ் அவர்களை அழித்துவிடுவான். (சத்தியத்திலிருந்து) அவர்கள் எங்கு செல்கின்றனர்? ([௬௩] ஸூரத்துல் முனாஃபிஃகூன்: ௪)
Tafseer

وَاِذَا قِيْلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُوْلُ اللّٰهِ لَوَّوْا رُءُوْسَهُمْ وَرَاَيْتَهُمْ يَصُدُّوْنَ وَهُمْ مُّسْتَكْبِرُوْنَ ٥

wa-idhā qīla
وَإِذَا قِيلَ
கூறப்பட்டால்
lahum
لَهُمْ
அவர்களிடம்
taʿālaw
تَعَالَوْا۟
வாருங்கள்
yastaghfir
يَسْتَغْفِرْ
மன்னிப்புத் தேடுவார்
lakum
لَكُمْ
உங்களுக்காக
rasūlu
رَسُولُ
தூதர்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
lawwaw
لَوَّوْا۟
வேகமாக அசைக்கிறார்கள்
ruūsahum
رُءُوسَهُمْ
தங்கள் தலைகளை
wara-aytahum
وَرَأَيْتَهُمْ
இன்னும் அவர்களை நீர் பார்ப்பீர்
yaṣuddūna
يَصُدُّونَ
புறக்கணிப்பவர்களாகவே
wahum
وَهُم
அவர்கள்
mus'takbirūna
مُّسْتَكْبِرُونَ
கர்வம் கொள்பவர்கள்
அவர்களை நோக்கி, "வாருங்கள்; அல்லாஹ்வுடைய தூதர் உங்களுடைய குற்றங்களை மன்னிக்க, (இறைவனிடம்) கோருவார்" என்று கூறப்பட்டால், அவர்கள் தங்கள் தலைகளை அசைத்துக் கர்வம் கொண்டு (உங்களைப் பார்க்காதவர்களைப் போல்) திரும்பிச் செல்வதை நீங்கள் காண்பீர்கள். ([௬௩] ஸூரத்துல் முனாஃபிஃகூன்: ௫)
Tafseer

سَوَاۤءٌ عَلَيْهِمْ اَسْتَغْفَرْتَ لَهُمْ اَمْ لَمْ تَسْتَغْفِرْ لَهُمْۗ لَنْ يَّغْفِرَ اللّٰهُ لَهُمْۗ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ ٦

sawāon
سَوَآءٌ
சமம்தான்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்களுக்கு
astaghfarta
أَسْتَغْفَرْتَ
நீர் பாவமன்னிப்புத் தேடினாலும்
lahum
لَهُمْ
அவர்களுக்காக
am lam tastaghfir
أَمْ لَمْ تَسْتَغْفِرْ
நீர் பாவமன்னிப்புத் தேடவில்லை என்றாலும்
lahum
لَهُمْ
அவர்களுக்காக
lan yaghfira
لَن يَغْفِرَ
மன்னிக்கவே மாட்டான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lahum
لَهُمْۚ
அவர்களை
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
lā yahdī
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
l-qawma
ٱلْقَوْمَ
மக்களை
l-fāsiqīna
ٱلْفَٰسِقِينَ
பாவிகளான
(நபியே!) நீங்கள் அவர்களுக்குப் பிழைபொறுக்கத் தேடுவதும் அல்லது, அவர்களுக்குப் பிழை பொறுக்கத் தேடாதிருப்பதும் அவர்களுக்குச் சமமே. அல்லாஹ் அவர்களுக்குப் பிழை பொறுக்கவே மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் பாவம் செய்யும் இத்தகைய மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை. ([௬௩] ஸூரத்துல் முனாஃபிஃகூன்: ௬)
Tafseer

هُمُ الَّذِيْنَ يَقُوْلُوْنَ لَا تُنْفِقُوْا عَلٰى مَنْ عِنْدَ رَسُوْلِ اللّٰهِ حَتّٰى يَنْفَضُّوْاۗ وَلِلّٰهِ خَزَاۤىِٕنُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۙ وَلٰكِنَّ الْمُنٰفِقِيْنَ لَا يَفْقَهُوْنَ ٧

humu alladhīna
هُمُ ٱلَّذِينَ
இவர்கள்தான்
yaqūlūna
يَقُولُونَ
கூறுகிறார்கள்
lā tunfiqū
لَا تُنفِقُوا۟
தர்மம் செய்யாதீர்கள்
ʿalā
عَلَىٰ
மீது
man ʿinda rasūli l-lahi
مَنْ عِندَ رَسُولِ ٱللَّهِ
அல்லாஹ்வின் தூதரிடம் இருப்பவர்கள்
ḥattā
حَتَّىٰ
இறுதியாக
yanfaḍḍū
يَنفَضُّوا۟ۗ
பிரிந்து விடுவார்கள்
walillahi
وَلِلَّهِ
அல்லாஹ்விற்கே
khazāinu
خَزَآئِنُ
பொக்கிஷங்கள்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِ
இன்னும் பூமியின்
walākinna
وَلَٰكِنَّ
என்றாலும்
l-munāfiqīna
ٱلْمُنَٰفِقِينَ
நயவஞ்சகர்கள்
lā yafqahūna
لَا يَفْقَهُونَ
புரிய மாட்டார்கள்
இவர்கள்தாம் (மற்ற மக்களை நோக்கி,) "அல்லாஹ்வுடைய தூதருடன் இருக்கும் மக்களுக்கு நீங்கள் யாதொரு தானமும் செய்யாதீர்கள். அதனால், அவர்கள் அவர்களை விட்டும் விலகி விடுவார்கள்" என்று கூறுகின்றனர். (நபியே! நீங்கள் கூறுங்கள்:) "வானங்கள் பூமியிலுள்ள பொக்கிஷங்கள் அனைத்தும் அல்லாஹ் வுக்குச் சொந்தமானவையே; எனினும், இந்த நயவஞ்சகர்கள் (இதனை) உணர்ந்து கொள்ள மாட்டார்கள்." ([௬௩] ஸூரத்துல் முனாஃபிஃகூன்: ௭)
Tafseer

يَقُوْلُوْنَ لَىِٕنْ رَّجَعْنَآ اِلَى الْمَدِيْنَةِ لَيُخْرِجَنَّ الْاَعَزُّ مِنْهَا الْاَذَلَّ ۗوَلِلّٰهِ الْعِزَّةُ وَلِرَسُوْلِهٖ وَلِلْمُؤْمِنِيْنَ وَلٰكِنَّ الْمُنٰفِقِيْنَ لَا يَعْلَمُوْنَ ࣖ ٨

yaqūlūna
يَقُولُونَ
கூறுகின்றனர்
la-in rajaʿnā
لَئِن رَّجَعْنَآ
நாம் திரும்பினால்
ilā l-madīnati
إِلَى ٱلْمَدِينَةِ
மதீனாவிற்கு
layukh'rijanna
لَيُخْرِجَنَّ
நிச்சயமாக வெளியேற்றவேண்டும்
l-aʿazu
ٱلْأَعَزُّ
கண்ணியவான்கள்
min'hā
مِنْهَا
அதிலிருந்து
l-adhala
ٱلْأَذَلَّۚ
தாழ்ந்தவர்களை
walillahi
وَلِلَّهِ
அல்லாஹ்விற்கு(ம்)
l-ʿizatu
ٱلْعِزَّةُ
கண்ணியம்
walirasūlihi
وَلِرَسُولِهِۦ
அவனது தூதருக்கும்
walil'mu'minīna
وَلِلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கும்தான்
walākinna
وَلَٰكِنَّ
என்றாலும்
l-munāfiqīna
ٱلْمُنَٰفِقِينَ
நயவஞ்சகர்கள்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்
அன்றி, "நாங்கள் மதீனாவிற்குத் திரும்ப வந்தால், கண்ணியமுள்ள நாங்கள் (நம்பிக்கைக் கொண்ட இந்த) இழிவானவர்களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றி விடுவோம்" என்றும் கூறுகின்றனர். (நபியே! நீங்கள் கூறுங்கள்:) கண்ணிய மெல்லாம், அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் சொந்தமானது. எனினும், இந்த நயவஞ்சகர்கள் (அதனை) அறிந்து கொள்ளவில்லை. ([௬௩] ஸூரத்துல் முனாஃபிஃகூன்: ௮)
Tafseer

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُلْهِكُمْ اَمْوَالُكُمْ وَلَآ اَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ ۚوَمَنْ يَّفْعَلْ ذٰلِكَ فَاُولٰۤىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ٩

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே!
lā tul'hikum
لَا تُلْهِكُمْ
உங்களை ஈடுபடுத்தி விடவேண்டாம்
amwālukum
أَمْوَٰلُكُمْ
உங்கள் செல்வங்களும்
walā awlādukum
وَلَآ أَوْلَٰدُكُمْ
உங்கள் பிள்ளைகளும்
ʿan dhik'ri l-lahi
عَن ذِكْرِ ٱللَّهِۚ
அல்லாஹ்வின் நினைவை விட்டும்
waman
وَمَن
யார்
yafʿal
يَفْعَلْ
செய்துவிடுவார்களோ
dhālika
ذَٰلِكَ
அப்படி
fa-ulāika humu
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
l-khāsirūna
ٱلْخَٰسِرُونَ
நஷ்டவாளிகள்
நம்பிக்கையாளர்களே! உங்களுடைய பொருள்களும், உங்களுடைய சந்ததிகளும் அல்லாஹ்வுடைய ஞாபகத்தை உங்களுக்கு மறக்கடித்துவிட வேண்டாம். எவரேனும், இவ்வாறு செய்தால் அத்தகையவர்கள் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள்தாம். ([௬௩] ஸூரத்துல் முனாஃபிஃகூன்: ௯)
Tafseer
௧௦

وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّأْتِيَ اَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُوْلَ رَبِّ لَوْلَآ اَخَّرْتَنِيْٓ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۚ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِيْنَ ١٠

wa-anfiqū
وَأَنفِقُوا۟
தர்மம் செய்யுங்கள்
min mā razaqnākum
مِن مَّا رَزَقْنَٰكُم
நாம் உங்களுக்கு கொடுத்தவற்றில் இருந்து
min qabli
مِّن قَبْلِ
முன்னர்
an yatiya
أَن يَأْتِىَ
வருவதற்கு
aḥadakumu
أَحَدَكُمُ
உங்களில் ஒருவருக்கு
l-mawtu
ٱلْمَوْتُ
மரணம்
fayaqūla
فَيَقُولَ
அவர் கூறுவார்
rabbi
رَبِّ
என் இறைவா!
lawlā akhartanī
لَوْلَآ أَخَّرْتَنِىٓ
நீ என்னை பிற்படுத்தி வைக்கமாட்டாயா!
ilā ajalin
إِلَىٰٓ أَجَلٍ
தவணை வரை
qarībin
قَرِيبٍ
கொஞ்சம் சமீபமான
fa-aṣṣaddaqa
فَأَصَّدَّقَ
நான் தர்மம் செய்வேனே
wa-akun
وَأَكُن
இன்னும் ஆகிவிடுவேனே
mina l-ṣāliḥīna
مِّنَ ٱلصَّٰلِحِينَ
நல்லவர்களில்
உங்களுக்கு மரணம் வருவதற்கு முன்பாகவே, நாம் உங்களுக்குக் கொடுத்தவைகளிலிருந்து தானம் செய்யுங்கள். (அவ்வாறு செய்யாதவன் மரணிக்கும் சமயத்தில்,) "என் இறைவனே! ஒரு சொற்ப காலத்திற்கு என்னை விட்டுவைக்க வேண்டாமா? (அவ்வாறு விட்டால்,) நான் தானமும் செய்வேன்; (நன்மைகளைச் செய்து) நல்லோர்களிலும் ஆகிவிடுவேன்" என்று கூறுவான். ([௬௩] ஸூரத்துல் முனாஃபிஃகூன்: ௧௦)
Tafseer