குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜுமுஆ வசனம் ௯
Qur'an Surah Al-Jumu'ah Verse 9
ஸூரத்துல் ஜுமுஆ [௬௨]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِذَا نُوْدِيَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَۗ ذٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ (الجمعة : ٦٢)
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
- O! (you) who! believe!
- நம்பிக்கையாளர்களே!
- idhā nūdiya
- إِذَا نُودِىَ
- When (the) call is made
- அழைக்கப்பட்டால்
- lilṣṣalati
- لِلصَّلَوٰةِ
- for (the) prayer
- தொழுகைக்காக
- min yawmi l-jumuʿati
- مِن يَوْمِ ٱلْجُمُعَةِ
- on (the) day (of) Friday
- ஜுமுஆ தினத்தன்று
- fa-is'ʿaw
- فَٱسْعَوْا۟
- then hasten
- நீங்கள் விரையுங்கள்!
- ilā dhik'ri
- إِلَىٰ ذِكْرِ
- to (the) remembrance
- நினைவின் பக்கம்
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- wadharū
- وَذَرُوا۟
- and leave
- இன்னும் விட்டு விடுங்கள்!
- l-bayʿa
- ٱلْبَيْعَۚ
- the business
- வியாபாரத்தை
- dhālikum
- ذَٰلِكُمْ
- That
- அதுதான்
- khayrun
- خَيْرٌ
- (is) better
- மிகச் சிறந்ததாகும்
- lakum
- لَّكُمْ
- for you
- உங்களுக்கு
- in kuntum
- إِن كُنتُمْ
- if you
- நீங்கள் இருந்தால்
- taʿlamūna
- تَعْلَمُونَ
- know
- அறிகின்றவர்களாக
Transliteration:
Yaaa ayyuhal lazeena aamanoo izaa noodiya lis-Salaati miny yawmil Jumu'ati fas'aw ilaa zikril laahi wa zarul bai'; zaalikum khayrul lakum in kuntum ta'lamoon(QS. al-Jumuʿah:9)
English Sahih International:
O you who have believed, when [the adhan] is called for the prayer on the day of Jumu’ah [Friday], then proceed to the remembrance of Allah and leave trade. That is better for you, if you only knew. (QS. Al-Jumu'ah, Ayah ௯)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கையாளர்களே! வெள்ளிக்கிழமையன்று ஜுமுஆ தொழுகைக்காக (பாங்கு சொல்லி) நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வை நினைவுகூர நீங்கள் விரைந்து செல்லுங்கள். அறிவுடையவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று. (இதனை நீங்கள் அறிந்து கொள்வீர்களாக! (ஸூரத்துல் ஜுமுஆ, வசனம் ௯)
Jan Trust Foundation
ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கையாளர்களே! ஜுமுஆ தினத்தன்று தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வின் நினைவின் பக்கம் நீங்கள் விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் (அதன் நன்மையை) அறிகின்றவர்களாக இருந்தால் அதுதான் உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.