Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜுமுஆ வசனம் ௮

Qur'an Surah Al-Jumu'ah Verse 8

ஸூரத்துல் ஜுமுஆ [௬௨]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ اِنَّ الْمَوْتَ الَّذِيْ تَفِرُّوْنَ مِنْهُ فَاِنَّهٗ مُلٰقِيْكُمْ ثُمَّ تُرَدُّوْنَ اِلٰى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ࣖ (الجمعة : ٦٢)

qul
قُلْ
Say
கூறுவீராக!
inna l-mawta
إِنَّ ٱلْمَوْتَ
"Indeed the death
நிச்சயமாக மரணம்
alladhī tafirrūna
ٱلَّذِى تَفِرُّونَ
which you flee
எது/விரண்டு ஓடுகின்றீர்கள்
min'hu fa-innahu
مِنْهُ فَإِنَّهُۥ
from it then surely it
அதை விட்டு/நிச்சயமாகஅது
mulāqīkum
مُلَٰقِيكُمْۖ
(will) meet you
உங்களை சந்திக்கும்
thumma turaddūna
ثُمَّ تُرَدُّونَ
Then you will be sent back
பிறகு/நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
ilā ʿālimi
إِلَىٰ عَٰلِمِ
to (the) All-Knower
அறிந்தவன் பக்கம்
l-ghaybi
ٱلْغَيْبِ
(of) the unseen
மறைவானவற்றையும்
wal-shahādati
وَٱلشَّهَٰدَةِ
and the witnessed
வெளிப்படையானவற்றையும்
fayunabbi-ukum
فَيُنَبِّئُكُم
and He will inform you
அவன் உங்களுக்கு அறிவிப்பான்
bimā kuntum taʿmalūna
بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
of what you used (to) do"
நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை

Transliteration:

Qul innal mawtal lazee tafirroona minhu fa innahoo mulaaqeekum summa turaddoona ilaa 'Aalimil Ghaibi wash shahaadati fa yunabbi'ukum bimaa kuntum ta'maloon (QS. al-Jumuʿah:8)

English Sahih International:

Say, "Indeed, the death from which you flee – indeed, it will meet you. Then you will be returned to the Knower of the unseen and the witnessed, and He will inform you about what you used to do." (QS. Al-Jumu'ah, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

(நபியே! அவர்களை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் வெருண்டோடும் மரணம் உங்களை நிச்சயமாகப் பிடித்துக்கொள்ளும். பின்னர், மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிந்தவனிடம் கொண்டு போகப்பட்டு, நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான். (ஸூரத்துல் ஜுமுஆ, வசனம் ௮)

Jan Trust Foundation

“நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும்; பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் - அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்” (என்று) (நபியே!) நீர் கூறுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக! நிச்சயமாக நீங்கள் அதை விட்டு விரண்டு ஓடுகின்ற அந்த மரணம் நிச்சயமாக அது உங்களை சந்திக்கும். பிறகு, நீங்கள் மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவன் பக்கம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு (அப்போது) அறிவிப்பான்.