Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜுமுஆ வசனம் ௨

Qur'an Surah Al-Jumu'ah Verse 2

ஸூரத்துல் ஜுமுஆ [௬௨]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هُوَ الَّذِيْ بَعَثَ فِى الْاُمِّيّٖنَ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِيْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ (الجمعة : ٦٢)

huwa alladhī
هُوَ ٱلَّذِى
He (is) the One Who
அவன்தான்
baʿatha
بَعَثَ
sent
அனுப்பினான்
fī l-umiyīna
فِى ٱلْأُمِّيِّۦنَ
among the unlettered
எழுதப் படிக்கக் கற்காத மக்களில்
rasūlan
رَسُولًا
a Messenger
ஒரு தூதரை
min'hum
مِّنْهُمْ
from themselves
அவர்களில் இருந்தே
yatlū
يَتْلُوا۟
reciting
அவர் ஓதுகிறார்
ʿalayhim
عَلَيْهِمْ
to them
அவர்களுக்கு முன்
āyātihi
ءَايَٰتِهِۦ
His Verses
அவனது வசனங்களை
wayuzakkīhim
وَيُزَكِّيهِمْ
and purifying them
இன்னும் அவர்களை பரிசுத்தப்படுத்துகிறார்
wayuʿallimuhumu
وَيُعَلِّمُهُمُ
and teaching them
அவர்களுக்கு கற்பிக்கிறார்
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Book
வேதத்தை(யும்)
wal-ḥik'mata
وَٱلْحِكْمَةَ
and the wisdom
ஞானத்தையும்
wa-in kānū
وَإِن كَانُوا۟
although they were
நிச்சயமாக அவர்கள் இருந்தனர்
min qablu
مِن قَبْلُ
from before
இதற்கு முன்னர்
lafī ḍalālin mubīnin
لَفِى ضَلَٰلٍ مُّبِينٍ
surely in an error clear
தெளிவான வழிகேட்டில்தான்

Transliteration:

Huwal lazee ba'asa fil ummiyyeena Rasoolam min hum yatloo 'alaihim aayaatihee wa yuzakkeehim wa yu'allimuhumul Kitaaba wal Hikmata wa in kaano min qablu lafee dalaalim mubeen (QS. al-Jumuʿah:2)

English Sahih International:

It is He who has sent among the unlettered [Arabs] a Messenger from themselves reciting to them His verses and purifying them and teaching them the Book [i.e., the Quran] and wisdom [i.e., the sunnah] – although they were before in clear error – (QS. Al-Jumu'ah, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

கல்வி அறிவில்லாத (அரபு) மக்களில் அவர்களில் உள்ள ஒருவரை அவன் (தன்னுடைய) தூதராக அனுப்பி வைத்தான். அவர்கள் இதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலிருந்த போதிலும், அத்தூதர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக்காண்பித்து, அவர்களைப் பரிசுத்தமாக்கி வைத்து, அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். (ஸூரத்துல் ஜுமுஆ, வசனம் ௨)

Jan Trust Foundation

அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன்தான் உம்மி (-எழுதப் படிக்கக் கற்காத அரபு வமிசத்தை சேர்ந்த மக்க)ளில் அவர்களில் இருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர்களுக்கு முன் அவனது வசனங்களை அவர் ஓதுகிறார்; அவர்களை பரிசுத்தப்படுத்துகிறார்; அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கிறார். இதற்கு முன்னர் நிச்சயமாக அவர்கள் தெளிவான வழிகேட்டில்தான் இருந்தனர்.