Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜுமுஆ வசனம் ௧௧

Qur'an Surah Al-Jumu'ah Verse 11

ஸூரத்துல் ஜுமுஆ [௬௨]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا رَاَوْا تِجَارَةً اَوْ لَهْوًا ۨانْفَضُّوْٓا اِلَيْهَا وَتَرَكُوْكَ قَاۤىِٕمًاۗ قُلْ مَا عِنْدَ اللّٰهِ خَيْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِۗ وَاللّٰهُ خَيْرُ الرّٰزِقِيْنَ ࣖ (الجمعة : ٦٢)

wa-idhā ra-aw
وَإِذَا رَأَوْا۟
And when they saw
அவர்கள் பார்த்தால்
tijāratan
تِجَٰرَةً
a transaction
ஒரு வர்த்தகத்தையோ
aw
أَوْ
or
அல்லது
lahwan
لَهْوًا
a sport
ஒரு வேடிக்கையையோ
infaḍḍū
ٱنفَضُّوٓا۟
they rushed
அவர்கள் பிரிந்து சென்று விடுவார்கள்
ilayhā
إِلَيْهَا
to it
அதன் பக்கம்
watarakūka
وَتَرَكُوكَ
and left you
இன்னும் உம்மை விட்டு விடுவார்கள்
qāiman
قَآئِمًاۚ
standing
நின்றவராக
qul
قُلْ
Say
கூறுவீராக!
mā ʿinda l-lahi
مَا عِندَ ٱللَّهِ
"What (is) with Allah
அல்லாஹ்விடம் உள்ளதுதான்
khayrun
خَيْرٌ
(is) better
மிகச் சிறந்ததாகும்
mina l-lahwi
مِّنَ ٱللَّهْوِ
than the sport
வேடிக்கையை விடவும்
wamina l-tijārati
وَمِنَ ٱلتِّجَٰرَةِۚ
and from (any) transaction
வர்த்தகத்தை விடவும்
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்தான்
khayru
خَيْرُ
(is the) Best
மிகச் சிறந்தவன்
l-rāziqīna
ٱلرَّٰزِقِينَ
(of) the Providers"
உணவளிப்பவர்களில்

Transliteration:

Wa izaa ra'aw tijaaratan aw lahwanin faddooo ilaihaa wa tarakooka qaaa'imaa; qul maa 'indal laahi khairum minal lahwi wa minat tijaarah; wallaahu khayrur raaziqeen (QS. al-Jumuʿah:11)

English Sahih International:

But [on one occasion] when they saw a transaction or a diversion, [O Muhammad], they rushed to it and left you standing. Say, "What is with Allah is better than diversion and than a transaction, and Allah is the best of providers." (QS. Al-Jumu'ah, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

(நபியே! சிலர் இருக்கின்றனர்;) அவர்கள் யாதொரு வியாபாரத்தையோ, அல்லது வேடிக்கையையோ கண்டால், (குத்பா ஓதும்) உங்களை நின்ற வண்ணமாக விட்டுவிட்டு அதனளவில் சென்று விடுகின்றனர். (ஆகவே, நபியே! அவர்களை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ்விடத்தில் உள்ளது, இந்த வியாபாரத்தையும் வேடிக்கையையும்விட மிக மேலானதாகும், அன்றி, உணவு அளிப்பவர்களிலும் அல்லாஹ் மிக மேலானவன். (ஸூரத்துல் ஜுமுஆ, வசனம் ௧௧)

Jan Trust Foundation

இன்னும், (நபியே!) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர்; “அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும்; மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(முஸ்லிம்களில் சிலர் இருக்கின்றனர்) அவர்கள் ஒரு வர்த்தகத்தையோ ஒரு வேடிக்கையையோ பார்த்தால் அதன் பக்கம் அவர்கள் பிரிந்து சென்று விடுவார்கள், உம்மை (நீர் மிம்பரில்) நின்றவராக (இருந்து பிரசங்கம் நிகழ்த்துகின்ற நிலையிலேயே) விட்டு(விட்டு ஓடி) விடுவார்கள். (நபியே!) கூறுவீராக! அல்லாஹ்விடம் உள்ளதுதான் வேடிக்கையை விடவும் வர்த்தகத்தை விடவும் மிகச் சிறந்ததாகும். அல்லாஹ்தான் உணவளிப்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.