يُسَبِّحُ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ الْمَلِكِ الْقُدُّوْسِ الْعَزِيْزِ الْحَكِيْمِ ١
- yusabbiḥu
- يُسَبِّحُ
- துதிக்கின்றன
- lillahi
- لِلَّهِ
- அல்லாஹ்வை
- mā fī l-samāwāti
- مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களில் உள்ளவர்களும்
- wamā fī l-arḍi
- وَمَا فِى ٱلْأَرْضِ
- பூமியில் உள்ளவர்களும்
- l-maliki
- ٱلْمَلِكِ
- பேரரசனாகிய
- l-qudūsi
- ٱلْقُدُّوسِ
- பரிசுத்தவனாகிய
- l-ʿazīzi
- ٱلْعَزِيزِ
- மிகைத்தவனாகிய
- l-ḥakīmi
- ٱلْحَكِيمِ
- மகா ஞானவானாகிய
வானங்களில் உள்ளவைகளும், பூமியில் உள்ளவைகளும் அல்லாஹ்வை புகழ்ந்து கொண்டிருக்கின்றன. (அவன்தான்) மெய்யான அரசன்; பரிசுத்தமானவன்; (அனைவரையும்) மிகைத்தவன்; ஞானமுடையவன். ([௬௨] ஸூரத்துல் ஜுமுஆ: ௧)Tafseer
هُوَ الَّذِيْ بَعَثَ فِى الْاُمِّيّٖنَ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِيْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ ٢
- huwa alladhī
- هُوَ ٱلَّذِى
- அவன்தான்
- baʿatha
- بَعَثَ
- அனுப்பினான்
- fī l-umiyīna
- فِى ٱلْأُمِّيِّۦنَ
- எழுதப் படிக்கக் கற்காத மக்களில்
- rasūlan
- رَسُولًا
- ஒரு தூதரை
- min'hum
- مِّنْهُمْ
- அவர்களில் இருந்தே
- yatlū
- يَتْلُوا۟
- அவர் ஓதுகிறார்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்களுக்கு முன்
- āyātihi
- ءَايَٰتِهِۦ
- அவனது வசனங்களை
- wayuzakkīhim
- وَيُزَكِّيهِمْ
- இன்னும் அவர்களை பரிசுத்தப்படுத்துகிறார்
- wayuʿallimuhumu
- وَيُعَلِّمُهُمُ
- அவர்களுக்கு கற்பிக்கிறார்
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- வேதத்தை(யும்)
- wal-ḥik'mata
- وَٱلْحِكْمَةَ
- ஞானத்தையும்
- wa-in kānū
- وَإِن كَانُوا۟
- நிச்சயமாக அவர்கள் இருந்தனர்
- min qablu
- مِن قَبْلُ
- இதற்கு முன்னர்
- lafī ḍalālin mubīnin
- لَفِى ضَلَٰلٍ مُّبِينٍ
- தெளிவான வழிகேட்டில்தான்
கல்வி அறிவில்லாத (அரபு) மக்களில் அவர்களில் உள்ள ஒருவரை அவன் (தன்னுடைய) தூதராக அனுப்பி வைத்தான். அவர்கள் இதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலிருந்த போதிலும், அத்தூதர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக்காண்பித்து, அவர்களைப் பரிசுத்தமாக்கி வைத்து, அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். ([௬௨] ஸூரத்துல் ஜுமுஆ: ௨)Tafseer
وَّاٰخَرِيْنَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوْا بِهِمْۗ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُۙ ٣
- waākharīna min'hum
- وَءَاخَرِينَ مِنْهُمْ
- இன்னும் வேறு மக்களுக்காக/அவர்களில்
- lammā yalḥaqū
- لَمَّا يَلْحَقُوا۟
- அவர்கள் வந்து சேரவில்லை
- bihim
- بِهِمْۚ
- இவர்களுடன்
- wahuwa
- وَهُوَ
- அவன்தான்
- l-ʿazīzu
- ٱلْعَزِيزُ
- மிகைத்தவன்
- l-ḥakīmu
- ٱلْحَكِيمُ
- மகா ஞானவான்
(தற்காலமுள்ள இவர்களுக்காகவும்) இதுவரையில் இவர்களுடன் சேராத இவர்கள் இனத்தில் (பிற்காலத்தில் வரும்) மற்றவர்களுக்காகவும் (அத்தூதரை அனுப்பி வைத்தான்.) அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௬௨] ஸூரத்துல் ஜுமுஆ: ௩)Tafseer
ذٰلِكَ فَضْلُ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَاۤءُۗ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ ٤
- dhālika
- ذَٰلِكَ
- இது
- faḍlu
- فَضْلُ
- சிறப்பாகும்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- yu'tīhi
- يُؤْتِيهِ
- அதை கொடுக்கின்றான்
- man yashāu wal-lahu
- مَن يَشَآءُۚ وَٱللَّهُ
- தான் நாடுகின்றவர்களுக்கு/அல்லாஹ்
- dhū l-faḍli
- ذُو ٱلْفَضْلِ
- சிறப்புடையவன்
- l-ʿaẓīmi
- ٱلْعَظِيمِ
- மகத்தான
இது அல்லாஹ்வுடைய அருளாகும். அவன் விரும்பிய வர்களுக்கே இதனைக் கொடுக்கின்றான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன். ([௬௨] ஸூரத்துல் ஜுமுஆ: ௪)Tafseer
مَثَلُ الَّذِيْنَ حُمِّلُوا التَّوْرٰىةَ ثُمَّ لَمْ يَحْمِلُوْهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ اَسْفَارًاۗ بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِ اللّٰهِ ۗوَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ ٥
- mathalu
- مَثَلُ
- உதாரணம்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- ḥummilū
- حُمِّلُوا۟
- பணிக்கப்பட்டார்கள்
- l-tawrāta
- ٱلتَّوْرَىٰةَ
- தவ்றாத்தின் படி
- thumma lam yaḥmilūhā
- ثُمَّ لَمْ يَحْمِلُوهَا
- பிறகு/அதன்படி அவர்கள் அமல் செய்யவில்லை
- kamathali
- كَمَثَلِ
- உதாரணத்தைப் போல்
- l-ḥimāri
- ٱلْحِمَارِ
- கழுதையின்
- yaḥmilu
- يَحْمِلُ
- சுமக்கிறது
- asfāran
- أَسْفَارًۢاۚ
- பல நூல்களை
- bi'sa
- بِئْسَ
- மிகக் கெட்டது
- mathalu
- مَثَلُ
- உதாரணம்
- l-qawmi
- ٱلْقَوْمِ
- மக்களின்
- alladhīna kadhabū
- ٱلَّذِينَ كَذَّبُوا۟
- பொய்ப்பித்தவர்கள்
- biāyāti
- بِـَٔايَٰتِ
- வசனங்களை
- l-lahi
- ٱللَّهِۚ
- அல்லாஹ்வின்
- wal-lahu lā yahdī
- وَٱللَّهُ لَا يَهْدِى
- அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான்
- l-qawma l-ẓālimīna
- ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ
- அநியாயக்கார மக்களை
"தவ்றாத்" என்னும் வேதத்தைச் சுமந்து கொண்டு, அதிலுள்ளபடி நடக்காதவர்களின் உதாரணம்: புத்தகங்களைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கும் மக்களின் இவ்வுதாரணம் மகாகெட்டது. அல்லாஹ் இத்தகைய அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்தமாட்டான். ([௬௨] ஸூரத்துல் ஜுமுஆ: ௫)Tafseer
قُلْ يٰٓاَيُّهَا الَّذِيْنَ هَادُوْٓا اِنْ زَعَمْتُمْ اَنَّكُمْ اَوْلِيَاۤءُ لِلّٰهِ مِنْ دُوْنِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ٦
- qul
- قُلْ
- கூறுவீராக!
- yāayyuhā alladhīna hādū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ هَادُوٓا۟
- யூதர்களே!
- in zaʿamtum
- إِن زَعَمْتُمْ
- நீங்கள் பிதற்றினால்
- annakum
- أَنَّكُمْ
- நிச்சயமாக நீங்கள்தான்
- awliyāu
- أَوْلِيَآءُ
- நண்பர்கள்
- lillahi
- لِلَّهِ
- அல்லாஹ்வின்
- min dūni l-nāsi
- مِن دُونِ ٱلنَّاسِ
- மற்ற மக்கள் அல்ல
- fatamannawū
- فَتَمَنَّوُا۟
- ஆசைப்படுங்கள்!
- l-mawta
- ٱلْمَوْتَ
- மரணத்தை
- in kuntum ṣādiqīna
- إِن كُنتُمْ صَٰدِقِينَ
- நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்
"யூதர்களே! நீங்கள் மற்ற மனிதர்களைவிட அல்லாஹ்வுக்குச் சொந்தமானவர்களென்று மெய்யாகவே நீங்கள் எண்ணிக் கொண்டிருந்து, அந்த எண்ணத்தில் நீங்கள் உண்மையானவர் களாகவும் இருந்தால், நீங்கள் மரணத்தை விரும்புங்கள்" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள். ([௬௨] ஸூரத்துல் ஜுமுஆ: ௬)Tafseer
وَلَا يَتَمَنَّوْنَهٗٓ اَبَدًاۢ بِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْۗ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِالظّٰلِمِيْنَ ٧
- walā yatamannawnahu
- وَلَا يَتَمَنَّوْنَهُۥٓ
- அதை அவர்கள் ஆசைப்பட மாட்டார்கள்
- abadan bimā qaddamat
- أَبَدًۢا بِمَا قَدَّمَتْ
- ஒரு போதும்/முற்படுத்தியவற்றின் காரணமாக
- aydīhim
- أَيْدِيهِمْۚ
- அவர்களின் கரங்கள்
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- ʿalīmun
- عَلِيمٌۢ
- நன்கறிந்தவன்
- bil-ẓālimīna
- بِٱلظَّٰلِمِينَ
- அநியாயக்காரர்களை
இவர்களின் கரங்கள் தேடிக்கொண்ட (பாவத்)தின் காரணமாக, எக்காலத்திலும் இவர்கள் மரணத்தை விரும்பவே மாட்டார்கள். அல்லாஹ் இந்த அநியாயக்காரர்களை நன்கறிந்தே இருக்கின்றான். ([௬௨] ஸூரத்துல் ஜுமுஆ: ௭)Tafseer
قُلْ اِنَّ الْمَوْتَ الَّذِيْ تَفِرُّوْنَ مِنْهُ فَاِنَّهٗ مُلٰقِيْكُمْ ثُمَّ تُرَدُّوْنَ اِلٰى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ࣖ ٨
- qul
- قُلْ
- கூறுவீராக!
- inna l-mawta
- إِنَّ ٱلْمَوْتَ
- நிச்சயமாக மரணம்
- alladhī tafirrūna
- ٱلَّذِى تَفِرُّونَ
- எது/விரண்டு ஓடுகின்றீர்கள்
- min'hu fa-innahu
- مِنْهُ فَإِنَّهُۥ
- அதை விட்டு/நிச்சயமாகஅது
- mulāqīkum
- مُلَٰقِيكُمْۖ
- உங்களை சந்திக்கும்
- thumma turaddūna
- ثُمَّ تُرَدُّونَ
- பிறகு/நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
- ilā ʿālimi
- إِلَىٰ عَٰلِمِ
- அறிந்தவன் பக்கம்
- l-ghaybi
- ٱلْغَيْبِ
- மறைவானவற்றையும்
- wal-shahādati
- وَٱلشَّهَٰدَةِ
- வெளிப்படையானவற்றையும்
- fayunabbi-ukum
- فَيُنَبِّئُكُم
- அவன் உங்களுக்கு அறிவிப்பான்
- bimā kuntum taʿmalūna
- بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
- நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை
(நபியே! அவர்களை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் வெருண்டோடும் மரணம் உங்களை நிச்சயமாகப் பிடித்துக்கொள்ளும். பின்னர், மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிந்தவனிடம் கொண்டு போகப்பட்டு, நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான். ([௬௨] ஸூரத்துல் ஜுமுஆ: ௮)Tafseer
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِذَا نُوْدِيَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَۗ ذٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ٩
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
- நம்பிக்கையாளர்களே!
- idhā nūdiya
- إِذَا نُودِىَ
- அழைக்கப்பட்டால்
- lilṣṣalati
- لِلصَّلَوٰةِ
- தொழுகைக்காக
- min yawmi l-jumuʿati
- مِن يَوْمِ ٱلْجُمُعَةِ
- ஜுமுஆ தினத்தன்று
- fa-is'ʿaw
- فَٱسْعَوْا۟
- நீங்கள் விரையுங்கள்!
- ilā dhik'ri
- إِلَىٰ ذِكْرِ
- நினைவின் பக்கம்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- wadharū
- وَذَرُوا۟
- இன்னும் விட்டு விடுங்கள்!
- l-bayʿa
- ٱلْبَيْعَۚ
- வியாபாரத்தை
- dhālikum
- ذَٰلِكُمْ
- அதுதான்
- khayrun
- خَيْرٌ
- மிகச் சிறந்ததாகும்
- lakum
- لَّكُمْ
- உங்களுக்கு
- in kuntum
- إِن كُنتُمْ
- நீங்கள் இருந்தால்
- taʿlamūna
- تَعْلَمُونَ
- அறிகின்றவர்களாக
நம்பிக்கையாளர்களே! வெள்ளிக்கிழமையன்று ஜுமுஆ தொழுகைக்காக (பாங்கு சொல்லி) நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வை நினைவுகூர நீங்கள் விரைந்து செல்லுங்கள். அறிவுடையவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று. (இதனை நீங்கள் அறிந்து கொள்வீர்களாக! ([௬௨] ஸூரத்துல் ஜுமுஆ: ௯)Tafseer
فَاِذَا قُضِيَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوْا فِى الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللّٰهِ وَاذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ ١٠
- fa-idhā quḍiyati
- فَإِذَا قُضِيَتِ
- முடிந்துவிட்டால்
- l-ṣalatu
- ٱلصَّلَوٰةُ
- தொழுகை
- fa-intashirū
- فَٱنتَشِرُوا۟
- பரவிச் செல்லுங்கள்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- wa-ib'taghū
- وَٱبْتَغُوا۟
- இன்னும் தேடுங்கள்
- min faḍli
- مِن فَضْلِ
- அருளை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- wa-udh'kurū
- وَٱذْكُرُوا۟
- இன்னும் நீங்கள் நினைவு கூருங்கள்!
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- kathīran
- كَثِيرًا
- அதிகம்
- laʿallakum tuf'liḥūna
- لَّعَلَّكُمْ تُفْلِحُونَ
- நீங்கள் வெற்றி அடைவீர்கள்
(ஜுமுஆ) தொழுகை முடிவு பெற்றால், (பள்ளியிலிருந்து புறப்பட்டுப்) பூமியில் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக்கொள்ளுங்கள். நீங்கள் வெற்றி அடைவதற்காக அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவுகூருங்கள். ([௬௨] ஸூரத்துல் ஜுமுஆ: ௧௦)Tafseer