Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸஃப்ஃபு வசனம் ௬

Qur'an Surah As-Saf Verse 6

ஸூரத்துஸ் ஸஃப்ஃபு [௬௧]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذْ قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ يٰبَنِيْٓ اِسْرَاۤءِيْلَ اِنِّيْ رَسُوْلُ اللّٰهِ اِلَيْكُمْ مُّصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرٰىةِ وَمُبَشِّرًاۢ بِرَسُوْلٍ يَّأْتِيْ مِنْۢ بَعْدِى اسْمُهٗٓ اَحْمَدُۗ فَلَمَّا جَاۤءَهُمْ بِالْبَيِّنٰتِ قَالُوْا هٰذَا سِحْرٌ مُّبِيْنٌ (الصف : ٦١)

wa-idh qāla
وَإِذْ قَالَ
And when said
கூறியதை நினைவு கூர்வீராக!
ʿīsā
عِيسَى
Isa
ஈஸா
ub'nu maryama
ٱبْنُ مَرْيَمَ
son (of) Maryam
மர்யமுடைய மகன்
yābanī is'rāīla
يَٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ
"O Children! "(of) Israel!
இஸ்ரவேலர்களே!
innī
إِنِّى
Indeed, I am
நிச்சயமாக நான்
rasūlu
رَسُولُ
(the) Messenger
தூதர்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
ilaykum
إِلَيْكُم
to you
உங்களுக்கு
muṣaddiqan
مُّصَدِّقًا
confirming
நான் உண்மைப்படுத்துகின்றேன்
limā bayna yadayya
لِّمَا بَيْنَ يَدَىَّ
that which (was) between my hands
எனக்கு முன்னுள்ளதை
mina l-tawrāti
مِنَ ٱلتَّوْرَىٰةِ
of the Taurat
தவ்றாத்தை
wamubashiran
وَمُبَشِّرًۢا
and bringing glad tidings
இன்னும் நற்செய்தி கூறுகின்றேன்
birasūlin
بِرَسُولٍ
(of) a Messenger
ஒரு தூதரை
yatī
يَأْتِى
to come
வருகின்றார்
min baʿdī
مِنۢ بَعْدِى
from after me
எனக்குப் பின்
us'muhu
ٱسْمُهُۥٓ
whose name (will be)
அவரது பெயர்
aḥmadu
أَحْمَدُۖ
Ahmad"
அஹ்மத்
falammā
فَلَمَّا
But when
அவர் வந்த போது
jāahum
جَآءَهُم
he came to them
அவர்களிடம்
bil-bayināti
بِٱلْبَيِّنَٰتِ
with clear proofs
அத்தாட்சிகளுடன்
qālū
قَالُوا۟
they said
கூறினார்கள்
hādhā
هَٰذَا
"This
இது
siḥ'run
سِحْرٌ
(is) a magic
சூனியமாகும்
mubīnun
مُّبِينٌ
clear"
தெளிவான

Transliteration:

Wa iz qaala 'Eesab-nu-Mayama yaa Banee Israaa'eela innee Rasoolul laahi ilaikum musaddiqal limaa baina yadayya minat Tawraati wa mubashshiram bi Rasooliny yaatee mim ba'dis muhooo Ahmad; falammaa jaaa'ahum bil baiyinaati qaaloo haazaa sihrum mubeen (QS. aṣ-Ṣaff:6)

English Sahih International:

And [mention] when Jesus, the son of Mary, said, "O Children of Israel, indeed I am the messenger of Allah to you confirming what came before me of the Torah and bringing good tidings of a messenger to come after me, whose name is Ahmad." But when he came to them with clear evidences, they said, "This is obvious magic." (QS. As-Saf, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

மர்யமுடைய மகன் ஈஸா (இஸ்ராயீலின் சந்ததிகளை நோக்கி) "இஸ்ராயீலின் சந்ததிகளே! மெய்யாகவே நான் உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வுடைய ஒரு தூதர். நான் எனக்கு முன்னுள்ள தவ்றாத்தையும் உண்மைப்படுத்துகின்றேன். எனக்குப் பின்னர் "அஹ்மது" என்னும் பெயர் கொண்ட ஒரு தூதர் வருவதைப் பற்றியும் நான் உங்களுக்கு நற்செய்தி கூறுகின்றேன்" என்று கூறியதை (நபியே! நீங்கள் அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள். (அவர் அறிவித்தவாறு அத்தூதர்) தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் வந்த (இச்)சமயத்தில் (அவரை நம்பிக்கை கொள்ளாது,) இது தெளிவான சூனியமென்று அவர்கள் கூறுகின்றனர். (ஸூரத்துஸ் ஸஃப்ஃபு, வசனம் ௬)

Jan Trust Foundation

மேலும், மர்யமின் குமாரர் ஈஸா| “இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் “அஹமது” என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் “இது தெளிவான சூனியமாகும்” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மர்யமின் மகன் ஈசா கூறியதை நினைவு கூர்வீராக! இஸ்ரவேலர்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர் ஆவேன். எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை நான் உண்மைப்படுத்துகின்றேன். எனக்குப் பின் வருகின்ற ஒரு தூதரை நான் (உங்களுக்கு) நற்செய்தி கூறுகின்றேன். அவரது பெயர் அஹ்மத் ஆகும். அவர் (-அந்த தூதர் தெளிவான) அத்தாட்சிகளுடன் அவர்களிடம் வந்த போது, “இது (-இவர் கொண்டு வந்தது) தெளிவான சூனியமாகும்”என்று அவர்கள் (-இஸ்ரவேலர்கள்) கூறினார்கள்.