Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸஃப்ஃபு வசனம் ௧௪

Qur'an Surah As-Saf Verse 14

ஸூரத்துஸ் ஸஃப்ஃபு [௬௧]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْٓا اَنْصَارَ اللّٰهِ كَمَا قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ لِلْحَوَارِيّٖنَ مَنْ اَنْصَارِيْٓ اِلَى اللّٰهِ ۗقَالَ الْحَوَارِيُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ فَاٰمَنَتْ طَّاۤىِٕفَةٌ مِّنْۢ بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ وَكَفَرَتْ طَّاۤىِٕفَةٌ ۚفَاَيَّدْنَا الَّذِيْنَ اٰمَنُوْا عَلٰى عَدُوِّهِمْ فَاَصْبَحُوْا ظَاهِرِيْنَ ࣖ (الصف : ٦١)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
O you! who! believe!
நம்பிக்கையாளர்களே!
kūnū
كُونُوٓا۟
Be
நீங்கள் ஆகிவிடுங்கள்
anṣāra
أَنصَارَ
helpers
உதவியாளர்களாக
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
kamā qāla
كَمَا قَالَ
as said
கூறியதைப் போன்று
ʿīsā
عِيسَى
Isa
ஈஸா
ub'nu maryama
ٱبْنُ مَرْيَمَ
son (of) Maryam
மர்யமுடைய மகன்
lil'ḥawāriyyīna
لِلْحَوَارِيِّۦنَ
to the disciples
உற்ற தோழர்களை நோக்கி
man
مَنْ
"Who
யார்
anṣārī
أَنصَارِىٓ
(are) my helpers
எனது உதவியாளர்கள்
ilā l-lahi
إِلَى ٱللَّهِۖ
for Allah?"
அல்லாஹ்விற்காக
qāla
قَالَ
Said
கூறினார்(கள்)
l-ḥawāriyūna
ٱلْحَوَارِيُّونَ
the disciples
உற்றதோழர்கள்
naḥnu
نَحْنُ
"We
நாங்கள்
anṣāru
أَنصَارُ
(are) the helpers
உதவி செய்பவர்கள்
l-lahi
ٱللَّهِۖ
(of) Allah"
அல்லாஹ்விற்கு
faāmanat
فَـَٔامَنَت
Then believed
ஆகவே நம்பிக்கை கொண்டது
ṭāifatun
طَّآئِفَةٌ
a group
ஒரு பிரிவு
min banī is'rāīla
مِّنۢ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
of Children (of) Israel
இஸ்ரவேலர்களில்
wakafarat
وَكَفَرَت
and disbelieved
இன்னும் நிராகரித்தது
ṭāifatun
طَّآئِفَةٌۖ
a group
ஒரு பிரிவு
fa-ayyadnā
فَأَيَّدْنَا
So We supported
ஆகவே, நாம் பலப்படுத்தினோம்
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
those who believed
நம்பிக்கை கொண்டவர்களை
ʿalā ʿaduwwihim
عَلَىٰ عَدُوِّهِمْ
against their enemy
அவர்களின் பகைவர்களுக்கு எதிராக
fa-aṣbaḥū
فَأَصْبَحُوا۟
and they became
ஆகவே ஆகிவிட்டார்கள்
ẓāhirīna
ظَٰهِرِينَ
dominant
வெற்றியாளர்களாக

Transliteration:

Yaaa ayyuhal lazeena aamaanoo koonooo ansaaral laahi kamaa qaala 'Eesab-nu-Maryama lil Hawaariyyeena man ansaareee ilal laah; qaalal Hawaariyyoona nahnu ansaa rul laahi fa aamanat taaa'ifatum mim Bannee Israaa'eela wa kafarat taaa'ifatun fa ayyadnal lazeena aammanoo 'alaa 'aduwwihim fa asbahoo zaahireen (QS. aṣ-Ṣaff:14)

English Sahih International:

O you who have believed, be supporters of Allah, as when Jesus, the son of Mary, said to the disciples, "Who are my supporters for Allah?" The disciples said, "We are supporters of Allah." And a faction of the Children of Israel believed and a faction disbelieved. So We supported those who believed against their enemy, and they became dominant. (QS. As-Saf, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி புரிபவராகி விடுங்கள். மர்யமுடைய மகன் ஈஸா, தன்னுடைய தோழர்களை நோக்கி "அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்பவர் யார்?" என்று கேட்ட சமயத்தில், "நாங்கள் அல்லாஹ்வுக்காக உதவி செய்வோம்" என்று அந்த சிஷ்யர்கள் கூறியவாறே, (நம்பிக்கை யாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்கு உதவி செய்பவர்களாகி விடுங்கள்.) எனினும், இஸ்ராயீலின் சந்ததிகளில் ஒரு கூட்டத்தினர் தான் (அவரை) நம்பிக்கை கொண்டனர். மற்றொரு கூட்டத்தினர் (அவரை) நிராகரித்தனர். ஆகவே, நம்பிக்கை கொண்ட அவர் களுக்கு, அவர்களுடைய எதிரியின் மீது (வெற்றி பெற) உதவி புரிந்தோம். ஆகவே, அவர்கள் வெற்றிபெற்றவர்களாகி விட்டார்கள். (ஸூரத்துஸ் ஸஃப்ஃபு, வசனம் ௧௪)

Jan Trust Foundation

ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?” எனக் கேட்க, சீடர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்” என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் - எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது; பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது; ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் - அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் உதவியாளர்களாக நீங்கள் ஆகிவிடுங்கள், மர்யமின் மகன் ஈசா, (தனது) உற்ற தோழர்களை நோக்கி அல்லாஹ்விற்காக எனது உதவியாளர்கள் யார் என்று கூறியபோது அந்த உற்ற தோழர்கள் கூறினார்கள்: “நாங்கள் அல்லாஹ்விற்(காக உமக்)கு உதவி செய்பவர்கள் ஆவோம்.” ஆகவே, இஸ்ரவேலர்களில் ஒரு பிரிவு நம்பிக்கை கொண்டது. ஒரு பிரிவு நிராகரித்தது. ஆகவே, நம்பிக்கை கொண்டவர்களை அவர்களின் பகைவர்களுக்கு எதிராக நாம் பலப்படுத்தினோம். ஆகவே, அவர்கள் வெற்றியாளர்களாக -ஓங்கியவர்களாக ஆகிவிட்டார்கள்.