Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸஃப்ஃபு வசனம் ௧௩

Qur'an Surah As-Saf Verse 13

ஸூரத்துஸ் ஸஃப்ஃபு [௬௧]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاُخْرٰى تُحِبُّوْنَهَاۗ نَصْرٌ مِّنَ اللّٰهِ وَفَتْحٌ قَرِيْبٌۗ وَبَشِّرِ الْمُؤْمِنِيْنَ (الصف : ٦١)

wa-ukh'rā
وَأُخْرَىٰ
And another
வேறு ஒன்றும்
tuḥibbūnahā
تُحِبُّونَهَاۖ
that you love -
அதை நீங்கள் விரும்புவீர்கள்
naṣrun
نَصْرٌ
a help
உதவியும்
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
from Allah
அல்லாஹ்வின் புறத்தில் இருந்து
wafatḥun
وَفَتْحٌ
and a victory
வெற்றியும்
qarībun
قَرِيبٌۗ
near;
வெகு விரைவில்
wabashiri
وَبَشِّرِ
and give glad tidings
இன்னும் நற்செய்தி கூறுவீராக
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
(to) the believers
நம்பிக்கையாளர்களுக்கு

Transliteration:

Wa ukhraa tuhibboonahaa nasrum minal laahi wa fat hun qaree; wa bashshiril mu 'mineen (QS. aṣ-Ṣaff:13)

English Sahih International:

And [you will obtain] another [favor] that you love – victory from Allah and an imminent conquest; and give good tidings to the believers. (QS. As-Saf, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

நீங்கள் விரும்பக்கூடிய மற்றொன்றும் உண்டு. அது அல்லாஹ்வுடைய உதவியும், சமீபத்தில் கிடைக்கக்கூடிய ஒரு வெற்றியும். (ஆகவே, நபியே! இதனைக் கொண்டு) நம்பிக்கை யாளர்களுக்கு நற்செய்தி கூறுங்கள். (ஸூரத்துஸ் ஸஃப்ஃபு, வசனம் ௧௩)

Jan Trust Foundation

அன்றியும் நீங்கள் நேசிக்கும் வேறொன்றும் உண்டு; (அதுதான்) அல்லாஹ்விடமிருந்து உதவியும், நெருங்கி வரும் வெற்றியுமாகும்; எனவே ஈமான் கொண்டவர்களுக்கு (இதைக் கொண்டு) நன்மாராயம் கூறுவீராக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(இறை அருள்களில்) வேறு ஒன்றும் உண்டு. அதை நீங்கள் விரும்புவீர்கள். (அதுதான்) அல்லாஹ்வின் புறத்தில் இருந்து (உங்களுக்கு) உதவியும் வெகு விரைவில் கிடைக்க இருக்கும் வெற்றியும் ஆகும். (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!