Skip to content

ஸூரா ஸூரத்துஸ் ஸஃப்ஃபு - Page: 2

As-Saf

(aṣ-Ṣaff)

௧௧

تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَتُجَاهِدُوْنَ فِيْ سَبِيْلِ اللّٰهِ بِاَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْۗ ذٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَۙ ١١

tu'minūna
تُؤْمِنُونَ
நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வையும்
warasūlihi
وَرَسُولِهِۦ
அவனது தூதரையும்
watujāhidūna
وَتُجَٰهِدُونَ
இன்னும் ஜிஹாது செய்யுங்கள்!
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
bi-amwālikum
بِأَمْوَٰلِكُمْ
உங்கள் செல்வங்களாலும்
wa-anfusikum
وَأَنفُسِكُمْۚ
உங்கள் உயிர்களாலும்
dhālikum
ذَٰلِكُمْ
அதுதான்
khayrun
خَيْرٌ
சிறந்தது
lakum
لَّكُمْ
உங்களுக்கு
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
taʿlamūna
تَعْلَمُونَ
அறிபவர்களாக
(அதாவது:) அல்லாஹ்வையும், அவனுடைய (இத்)தூதரையும் நம்பிக்கை கொண்டு, உங்களுடைய பொருள்களையும், உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியுங்கள். நீங்கள் அறிவுடையவர்களானால் இதுவே உங்களுக்கு மிக மேலானதாக இருக்கும் (என்பதை அறிந்து கொள்வீர்கள்). ([௬௧] ஸூரத்துஸ் ஸஃப்ஃபு: ௧௧)
Tafseer
௧௨

يَغْفِرْ لَكُمْ ذُنُوْبَكُمْ وَيُدْخِلْكُمْ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ وَمَسٰكِنَ طَيِّبَةً فِيْ جَنّٰتِ عَدْنٍۗ ذٰلِكَ الْفَوْزُ الْعَظِيْمُۙ ١٢

yaghfir
يَغْفِرْ
அவன் மன்னிப்பான்
lakum
لَكُمْ
உங்களுக்கு
dhunūbakum
ذُنُوبَكُمْ
உங்கள் பாவங்களை
wayud'khil'kum
وَيُدْخِلْكُمْ
இன்னும் உங்களை நுழைப்பான்
jannātin
جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
tajrī
تَجْرِى
ஓடும்
min taḥtihā
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
wamasākina
وَمَسَٰكِنَ
இன்னும் தங்குமிடங்களில்
ṭayyibatan
طَيِّبَةً
உயர்ந்த
fī jannāti
فِى جَنَّٰتِ
சொர்க்கங்களில்
ʿadnin
عَدْنٍۚ
அத்ன்
dhālika
ذَٰلِكَ
இதுதான்
l-fawzu l-ʿaẓīmu
ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ
மகத்தான வெற்றி
(அவ்வாறு செய்தால்) உங்களுடைய பாவங்களை மன்னித்து, சுவனபதியிலும் உங்களைப் புகுத்துவான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அன்றி, நிலையான சுவனபதியிலுள்ள மேலான இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு. இதுதான் மகத்தான பெரும் வெற்றியாகும். ([௬௧] ஸூரத்துஸ் ஸஃப்ஃபு: ௧௨)
Tafseer
௧௩

وَاُخْرٰى تُحِبُّوْنَهَاۗ نَصْرٌ مِّنَ اللّٰهِ وَفَتْحٌ قَرِيْبٌۗ وَبَشِّرِ الْمُؤْمِنِيْنَ ١٣

wa-ukh'rā
وَأُخْرَىٰ
வேறு ஒன்றும்
tuḥibbūnahā
تُحِبُّونَهَاۖ
அதை நீங்கள் விரும்புவீர்கள்
naṣrun
نَصْرٌ
உதவியும்
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வின் புறத்தில் இருந்து
wafatḥun
وَفَتْحٌ
வெற்றியும்
qarībun
قَرِيبٌۗ
வெகு விரைவில்
wabashiri
وَبَشِّرِ
இன்னும் நற்செய்தி கூறுவீராக
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு
நீங்கள் விரும்பக்கூடிய மற்றொன்றும் உண்டு. அது அல்லாஹ்வுடைய உதவியும், சமீபத்தில் கிடைக்கக்கூடிய ஒரு வெற்றியும். (ஆகவே, நபியே! இதனைக் கொண்டு) நம்பிக்கை யாளர்களுக்கு நற்செய்தி கூறுங்கள். ([௬௧] ஸூரத்துஸ் ஸஃப்ஃபு: ௧௩)
Tafseer
௧௪

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْٓا اَنْصَارَ اللّٰهِ كَمَا قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ لِلْحَوَارِيّٖنَ مَنْ اَنْصَارِيْٓ اِلَى اللّٰهِ ۗقَالَ الْحَوَارِيُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ فَاٰمَنَتْ طَّاۤىِٕفَةٌ مِّنْۢ بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ وَكَفَرَتْ طَّاۤىِٕفَةٌ ۚفَاَيَّدْنَا الَّذِيْنَ اٰمَنُوْا عَلٰى عَدُوِّهِمْ فَاَصْبَحُوْا ظَاهِرِيْنَ ࣖ ١٤

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே!
kūnū
كُونُوٓا۟
நீங்கள் ஆகிவிடுங்கள்
anṣāra
أَنصَارَ
உதவியாளர்களாக
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
kamā qāla
كَمَا قَالَ
கூறியதைப் போன்று
ʿīsā
عِيسَى
ஈஸா
ub'nu maryama
ٱبْنُ مَرْيَمَ
மர்யமுடைய மகன்
lil'ḥawāriyyīna
لِلْحَوَارِيِّۦنَ
உற்ற தோழர்களை நோக்கி
man
مَنْ
யார்
anṣārī
أَنصَارِىٓ
எனது உதவியாளர்கள்
ilā l-lahi
إِلَى ٱللَّهِۖ
அல்லாஹ்விற்காக
qāla
قَالَ
கூறினார்(கள்)
l-ḥawāriyūna
ٱلْحَوَارِيُّونَ
உற்றதோழர்கள்
naḥnu
نَحْنُ
நாங்கள்
anṣāru
أَنصَارُ
உதவி செய்பவர்கள்
l-lahi
ٱللَّهِۖ
அல்லாஹ்விற்கு
faāmanat
فَـَٔامَنَت
ஆகவே நம்பிக்கை கொண்டது
ṭāifatun
طَّآئِفَةٌ
ஒரு பிரிவு
min banī is'rāīla
مِّنۢ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களில்
wakafarat
وَكَفَرَت
இன்னும் நிராகரித்தது
ṭāifatun
طَّآئِفَةٌۖ
ஒரு பிரிவு
fa-ayyadnā
فَأَيَّدْنَا
ஆகவே, நாம் பலப்படுத்தினோம்
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களை
ʿalā ʿaduwwihim
عَلَىٰ عَدُوِّهِمْ
அவர்களின் பகைவர்களுக்கு எதிராக
fa-aṣbaḥū
فَأَصْبَحُوا۟
ஆகவே ஆகிவிட்டார்கள்
ẓāhirīna
ظَٰهِرِينَ
வெற்றியாளர்களாக
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி புரிபவராகி விடுங்கள். மர்யமுடைய மகன் ஈஸா, தன்னுடைய தோழர்களை நோக்கி "அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்பவர் யார்?" என்று கேட்ட சமயத்தில், "நாங்கள் அல்லாஹ்வுக்காக உதவி செய்வோம்" என்று அந்த சிஷ்யர்கள் கூறியவாறே, (நம்பிக்கை யாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்கு உதவி செய்பவர்களாகி விடுங்கள்.) எனினும், இஸ்ராயீலின் சந்ததிகளில் ஒரு கூட்டத்தினர் தான் (அவரை) நம்பிக்கை கொண்டனர். மற்றொரு கூட்டத்தினர் (அவரை) நிராகரித்தனர். ஆகவே, நம்பிக்கை கொண்ட அவர் களுக்கு, அவர்களுடைய எதிரியின் மீது (வெற்றி பெற) உதவி புரிந்தோம். ஆகவே, அவர்கள் வெற்றிபெற்றவர்களாகி விட்டார்கள். ([௬௧] ஸூரத்துஸ் ஸஃப்ஃபு: ௧௪)
Tafseer