Skip to content

ஸூரா ஸூரத்துஸ் ஸஃப்ஃபு - Word by Word

As-Saf

(aṣ-Ṣaff)

bismillaahirrahmaanirrahiim

سَبَّحَ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۚ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ١

sabbaḥa
سَبَّحَ
துதிக்கின்றார்கள்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்வை
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ளவர்களும்
wamā fī l-arḍi
وَمَا فِى ٱلْأَرْضِۖ
பூமியில் உள்ளவர்களும்
wahuwa
وَهُوَ
அவன்தான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்
வானங்களில் உள்ளவைகளும், பூமியில் உள்ளவைகளும் அல்லாஹ்வைத் துதி செய்து கொண்டிருக்கின்றன. அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௬௧] ஸூரத்துஸ் ஸஃப்ஃபு: ௧)
Tafseer

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لِمَ تَقُوْلُوْنَ مَا لَا تَفْعَلُوْنَ ٢

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே!
lima taqūlūna
لِمَ تَقُولُونَ
ஏன் கூறுகிறீர்கள்?
mā lā tafʿalūna
مَا لَا تَفْعَلُونَ
நீங்கள் செய்யாதவற்றை
நம்பிக்கையாளர்களே! நீங்கள் செய்யாத காரியங்களை(ச் செய்வேன் என்று அல்லது செய்ததாக) ஏன் கூறுகின்றீர்கள்? ([௬௧] ஸூரத்துஸ் ஸஃப்ஃபு: ௨)
Tafseer

كَبُرَ مَقْتًا عِنْدَ اللّٰهِ اَنْ تَقُوْلُوْا مَا لَا تَفْعَلُوْنَ ٣

kabura maqtan
كَبُرَ مَقْتًا
பெரும் கோபத்திற்குரியது
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
an taqūlū
أَن تَقُولُوا۟
நீங்கள் கூறுவது
mā lā tafʿalūna
مَا لَا تَفْعَلُونَ
நீங்கள் செய்யாதவற்றை
நீங்கள் செய்யாத காரியங்களைச் (செய்வேன் என்று அல்லது) செய்ததாகக் கூறுவது அல்லாஹ்விடத்தில் பெரும் பாவமாக இருக்கின்றது. ([௬௧] ஸூரத்துஸ் ஸஃப்ஃபு: ௩)
Tafseer

اِنَّ اللّٰهَ يُحِبُّ الَّذِيْنَ يُقَاتِلُوْنَ فِيْ سَبِيْلِهٖ صَفًّا كَاَنَّهُمْ بُنْيَانٌ مَّرْصُوْصٌ ٤

inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
yuḥibbu
يُحِبُّ
விரும்புகின்றான்
alladhīna yuqātilūna
ٱلَّذِينَ يُقَٰتِلُونَ
போர் புரிபவர்களை
fī sabīlihi
فِى سَبِيلِهِۦ
அவனுடைய பாதையில்
ṣaffan
صَفًّا
வரிசையாக நின்று
ka-annahum bun'yānun
كَأَنَّهُم بُنْيَٰنٌ
அவர்களோ கட்டிடத்தைப் போல்
marṣūṣun
مَّرْصُوصٌ
உறுதியான(து)
(நம்பிக்கையாளர்களே!) எவர்கள் ஈயத்தால் உருக்கி வார்க்கப்பட்ட பலமான அரணைப்போல அணியில் (இருந்து பின்வாங்காது) நின்று, அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிகிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கின்றான். ([௬௧] ஸூரத்துஸ் ஸஃப்ஃபு: ௪)
Tafseer

وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهٖ يٰقَوْمِ لِمَ تُؤْذُوْنَنِيْ وَقَدْ تَّعْلَمُوْنَ اَنِّيْ رَسُوْلُ اللّٰهِ اِلَيْكُمْۗ فَلَمَّا زَاغُوْٓا اَزَاغَ اللّٰهُ قُلُوْبَهُمْۗ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ ٥

wa-idh qāla
وَإِذْ قَالَ
கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!
mūsā
مُوسَىٰ
மூஸா
liqawmihi
لِقَوْمِهِۦ
தனது மக்களுக்கு
yāqawmi
يَٰقَوْمِ
என் மக்களே!
lima tu'dhūnanī
لِمَ تُؤْذُونَنِى
எனக்கு ஏன் தொந்தரவு தருகிறீர்கள்?
waqad
وَقَد
திட்டமாக
taʿlamūna
تَّعْلَمُونَ
நீங்கள் அறிவீர்கள்
annī
أَنِّى
நிச்சயமாக நான்
rasūlu
رَسُولُ
தூதர்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ilaykum
إِلَيْكُمْۖ
உங்களுக்கு
falammā zāghū
فَلَمَّا زَاغُوٓا۟
அவர்கள் சருகிய போது
azāgha
أَزَاغَ
திருப்பிவிட்டான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்(வும்)
qulūbahum
قُلُوبَهُمْۚ
அவர்களின் உள்ளங்களை
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
lā yahdī
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
l-qawma
ٱلْقَوْمَ
மக்களை
l-fāsiqīna
ٱلْفَٰسِقِينَ
பாவிகளான
மூஸா தன் மக்களை நோக்கி "என்னுடைய மக்களே! என்னை ஏன் நீங்கள் துன்புறுத்துகின்றீர்கள். மெய்யாகவே நான் உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வுடைய தூதர் என்பதை நிச்சயமாக நீங்கள் நன்கறிவீர்களே" என்று கூறியதை (நபியே! நீங்கள்) நினைத்துப் பாருங்கள். (நேரான பாதையிலிருந்து) அவர்கள் விலகவே, அல்லாஹ்வும் அவர்களுடைய உள்ளங்களை (நேரான பாதையிலிருந்து) திருப்பிவிட்டான். பாவம் செய்யும் மக்களை அல்லாஹ் நேரான பாதையில் செலுத்துவதில்லை. ([௬௧] ஸூரத்துஸ் ஸஃப்ஃபு: ௫)
Tafseer

وَاِذْ قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ يٰبَنِيْٓ اِسْرَاۤءِيْلَ اِنِّيْ رَسُوْلُ اللّٰهِ اِلَيْكُمْ مُّصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرٰىةِ وَمُبَشِّرًاۢ بِرَسُوْلٍ يَّأْتِيْ مِنْۢ بَعْدِى اسْمُهٗٓ اَحْمَدُۗ فَلَمَّا جَاۤءَهُمْ بِالْبَيِّنٰتِ قَالُوْا هٰذَا سِحْرٌ مُّبِيْنٌ ٦

wa-idh qāla
وَإِذْ قَالَ
கூறியதை நினைவு கூர்வீராக!
ʿīsā
عِيسَى
ஈஸா
ub'nu maryama
ٱبْنُ مَرْيَمَ
மர்யமுடைய மகன்
yābanī is'rāīla
يَٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களே!
innī
إِنِّى
நிச்சயமாக நான்
rasūlu
رَسُولُ
தூதர்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ilaykum
إِلَيْكُم
உங்களுக்கு
muṣaddiqan
مُّصَدِّقًا
நான் உண்மைப்படுத்துகின்றேன்
limā bayna yadayya
لِّمَا بَيْنَ يَدَىَّ
எனக்கு முன்னுள்ளதை
mina l-tawrāti
مِنَ ٱلتَّوْرَىٰةِ
தவ்றாத்தை
wamubashiran
وَمُبَشِّرًۢا
இன்னும் நற்செய்தி கூறுகின்றேன்
birasūlin
بِرَسُولٍ
ஒரு தூதரை
yatī
يَأْتِى
வருகின்றார்
min baʿdī
مِنۢ بَعْدِى
எனக்குப் பின்
us'muhu
ٱسْمُهُۥٓ
அவரது பெயர்
aḥmadu
أَحْمَدُۖ
அஹ்மத்
falammā
فَلَمَّا
அவர் வந்த போது
jāahum
جَآءَهُم
அவர்களிடம்
bil-bayināti
بِٱلْبَيِّنَٰتِ
அத்தாட்சிகளுடன்
qālū
قَالُوا۟
கூறினார்கள்
hādhā
هَٰذَا
இது
siḥ'run
سِحْرٌ
சூனியமாகும்
mubīnun
مُّبِينٌ
தெளிவான
மர்யமுடைய மகன் ஈஸா (இஸ்ராயீலின் சந்ததிகளை நோக்கி) "இஸ்ராயீலின் சந்ததிகளே! மெய்யாகவே நான் உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வுடைய ஒரு தூதர். நான் எனக்கு முன்னுள்ள தவ்றாத்தையும் உண்மைப்படுத்துகின்றேன். எனக்குப் பின்னர் "அஹ்மது" என்னும் பெயர் கொண்ட ஒரு தூதர் வருவதைப் பற்றியும் நான் உங்களுக்கு நற்செய்தி கூறுகின்றேன்" என்று கூறியதை (நபியே! நீங்கள் அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள். (அவர் அறிவித்தவாறு அத்தூதர்) தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் வந்த (இச்)சமயத்தில் (அவரை நம்பிக்கை கொள்ளாது,) இது தெளிவான சூனியமென்று அவர்கள் கூறுகின்றனர். ([௬௧] ஸூரத்துஸ் ஸஃப்ஃபு: ௬)
Tafseer

وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰى عَلَى اللّٰهِ الْكَذِبَ وَهُوَ يُدْعٰىٓ اِلَى الْاِسْلَامِۗ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ ٧

waman aẓlamu
وَمَنْ أَظْلَمُ
யார்?/அநியாயக்காரர்
mimmani if'tarā
مِمَّنِ ٱفْتَرَىٰ
இட்டுக் கட்டுபவரை விட
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
l-kadhiba
ٱلْكَذِبَ
பொய்யை
wahuwa
وَهُوَ
அவரோ
yud'ʿā
يُدْعَىٰٓ
அழைக்கப்படுகிறார்
ilā l-is'lāmi
إِلَى ٱلْإِسْلَٰمِۚ
அல்லாஹ்வின் பக்கம்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
lā yahdī
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
l-qawma
ٱلْقَوْمَ
மக்களை
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்கார(ர்கள்)
அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் சொல்பவனைவிட அநியாயக்காரன் யார்? அவன் (நபி இப்ராஹீமின் மார்க்கமாகிய) இஸ்லாமின் பக்கம் அழைக்கப்ப(ட்)டு(ம் அவன் அதனை நிராகரிக்)கின்றான். இத்தகைய அநியாயக்கார மக்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்தமாட்டான். ([௬௧] ஸூரத்துஸ் ஸஃப்ஃபு: ௭)
Tafseer

يُرِيْدُوْنَ لِيُطْفِـُٔوْا نُوْرَ اللّٰهِ بِاَفْوَاهِهِمْۗ وَاللّٰهُ مُتِمُّ نُوْرِهٖ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ ٨

yurīdūna
يُرِيدُونَ
அவர்கள் நாடுகின்றனர்
liyuṭ'fiū
لِيُطْفِـُٔوا۟
அவர்கள் அணைத்துவிட
nūra
نُورَ
ஒளியை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
bi-afwāhihim
بِأَفْوَٰهِهِمْ
தங்களது வாய்களினால்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
mutimmu
مُتِمُّ
முழுமைப்படுத்துவான்
nūrihi
نُورِهِۦ
தனது ஒளியை
walaw kariha
وَلَوْ كَرِهَ
வெறுத்தாலும் சரியே!
l-kāfirūna
ٱلْكَٰفِرُونَ
நிராகரிப்பாளர்கள்
அல்லாஹ்வுடைய பிரகாசத்தைத் தன் வாயினால் ஊதி அணைத்து விடலாமென்று இவர்கள் கருதுகின்றனர். இந் நிராகரிப்பவர்கள் வெறுத்தபோதிலும் அல்லாஹ் தன்னுடைய பிரகாசத்தை (உலகமெங்கும் ஜொலிக்கும்படி) முழுமையாகவே ஆக்கிவைப்பான். ([௬௧] ஸூரத்துஸ் ஸஃப்ஃபு: ௮)
Tafseer

هُوَ الَّذِيْٓ اَرْسَلَ رَسُوْلَهٗ بِالْهُدٰى وَدِيْنِ الْحَقِّ لِيُظْهِرَهٗ عَلَى الدِّيْنِ كُلِّهٖۙ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُوْنَ ࣖ ٩

huwa alladhī
هُوَ ٱلَّذِىٓ
அவன்தான்
arsala
أَرْسَلَ
அனுப்பினான்
rasūlahu
رَسُولَهُۥ
தனது தூதரை
bil-hudā
بِٱلْهُدَىٰ
நேர்வழியைக் கொண்டும்
wadīni l-ḥaqi
وَدِينِ ٱلْحَقِّ
இன்னும் சத்திய மார்க்கத்தை
liyuẓ'hirahu
لِيُظْهِرَهُۥ
அதை மேலோங்க வைப்பதற்காக
ʿalā l-dīni kullihi
عَلَى ٱلدِّينِ كُلِّهِۦ
எல்லா மார்க்கங்களை விட
walaw kariha
وَلَوْ كَرِهَ
வெறுத்தாலும் சரியே!
l-mush'rikūna
ٱلْمُشْرِكُونَ
இணைவைப்பவர்கள்
அவன்தான் தன்னுடைய (இத்)தூதரை நேரான வழியைக் கொண்டும், உண்மையான மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தான். (ஈஸாவை அல்லாஹ்வுடைய மகனென்று, அவனுக்கு) இணைவைத்து வணங்கும் இவர்கள் வெறுத்தபோதிலும், எல்லா மார்க்கங்களையும் அது வென்றே தீரும். ([௬௧] ஸூரத்துஸ் ஸஃப்ஃபு: ௯)
Tafseer
௧௦

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا هَلْ اَدُلُّكُمْ عَلٰى تِجَارَةٍ تُنْجِيْكُمْ مِّنْ عَذَابٍ اَلِيْمٍ ١٠

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே!
hal adullukum
هَلْ أَدُلُّكُمْ
உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?
ʿalā tijāratin
عَلَىٰ تِجَٰرَةٍ
ஒரு வியாபாரத்தை
tunjīkum
تُنجِيكُم
அது உங்களை பாதுகாக்கும்
min ʿadhābin
مِّنْ عَذَابٍ
தண்டனையை விட்டும்
alīmin
أَلِيمٍ
வலி தரக்கூடிய(து)
நம்பிக்கையாளர்களே! ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கவா? அது துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களை காப்பாற்றும். ([௬௧] ஸூரத்துஸ் ஸஃப்ஃபு: ௧௦)
Tafseer