Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மும்தஹினா வசனம் ௪

Qur'an Surah Al-Mumtahanah Verse 4

ஸூரத்துல் மும்தஹினா [௬௦]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَدْ كَانَتْ لَكُمْ اُسْوَةٌ حَسَنَةٌ فِيْٓ اِبْرٰهِيْمَ وَالَّذِيْنَ مَعَهٗۚ اِذْ قَالُوْا لِقَوْمِهِمْ اِنَّا بُرَءٰۤؤُا مِنْكُمْ وَمِمَّا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ۖ كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَيْنَنَا وَبَيْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَاۤءُ اَبَدًا حَتّٰى تُؤْمِنُوْا بِاللّٰهِ وَحْدَهٗٓ اِلَّا قَوْلَ اِبْرٰهِيْمَ لِاَبِيْهِ لَاَسْتَغْفِرَنَّ لَكَ وَمَآ اَمْلِكُ لَكَ مِنَ اللّٰهِ مِنْ شَيْءٍۗ رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَاِلَيْكَ اَنَبْنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ (الممتحنة : ٦٠)

qad
قَدْ
Indeed
திட்டமாக
kānat
كَانَتْ
(there) is
இருக்கிறது
lakum
لَكُمْ
for you
உங்களுக்கு
us'watun
أُسْوَةٌ
an example
முன்மாதிரி
ḥasanatun
حَسَنَةٌ
good
அழகிய
fī ib'rāhīma
فِىٓ إِبْرَٰهِيمَ
in Ibrahim
இப்ராஹீமிடத்திலும்
wa-alladhīna
وَٱلَّذِينَ
and those
எவர்கள்
maʿahu
مَعَهُۥٓ
with him
அவர்களுடன்
idh qālū
إِذْ قَالُوا۟
when they said
அவர்கள் கூறிய சமயத்தை
liqawmihim
لِقَوْمِهِمْ
to their people
தங்கள் மக்களுக்கு
innā
إِنَّا
"Indeed, we
நிச்சயமாக நாங்கள்
buraāu
بُرَءَٰٓؤُا۟
(are) disassociated
விலகியவர்கள்
minkum
مِنكُمْ
from you
உங்களை விட்டும்
wamimmā taʿbudūna
وَمِمَّا تَعْبُدُونَ
and from what you worship
நீங்கள் வணங்குகின்றவற்றை விட்டும்
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
from besides Allah
அல்லாஹ்வையன்றி
kafarnā
كَفَرْنَا
We have denied
நாங்கள் மறுத்துவிட்டோம்
bikum
بِكُمْ
you
உங்களை
wabadā
وَبَدَا
and has appeared
வெளிப்பட்டுவிட்டன
baynanā
بَيْنَنَا
between us
எங்களுக்கு மத்தியிலும்
wabaynakumu
وَبَيْنَكُمُ
and between you
உங்களுக்கு மத்தியிலும்
l-ʿadāwatu
ٱلْعَدَٰوَةُ
enmity
பகைமையும்
wal-baghḍāu
وَٱلْبَغْضَآءُ
and hatred
குரோதமும்
abadan
أَبَدًا
forever
எப்போதும்
ḥattā tu'minū
حَتَّىٰ تُؤْمِنُوا۟
until you believe
நீங்கள் நம்பிக்கை கொள்கின்ற வரை
bil-lahi
بِٱللَّهِ
in Allah
அல்லாஹ்
waḥdahu
وَحْدَهُۥٓ
Alone"
ஒருவனை மட்டும்
illā
إِلَّا
Except
எனினும்
qawla
قَوْلَ
(the) saying
கூறியதை
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
(of) Ibrahim
இப்ராஹீம்
li-abīhi
لِأَبِيهِ
to his father
தனது தந்தைக்கு
la-astaghfiranna
لَأَسْتَغْفِرَنَّ
"Surely I ask forgiveness
நிச்சயமாக நான் பாவமன்னிப்பு கேட்பேன்
laka
لَكَ
for you
உமக்காக
wamā amliku
وَمَآ أَمْلِكُ
but not I have power
நான் உரிமை பெறமாட்டேன்
laka
لَكَ
for you
உமக்கு
mina l-lahi
مِنَ ٱللَّهِ
from Allah
அல்லாஹ்விடம்
min shayin
مِن شَىْءٍۖ
of anything
எதையும்
rabbanā
رَّبَّنَا
Our Lord
எங்கள் இறைவா!
ʿalayka
عَلَيْكَ
upon You
உம்மீது
tawakkalnā
تَوَكَّلْنَا
we put our trust
நாங்கள் நம்பிக்கை வைத்தோம்
wa-ilayka
وَإِلَيْكَ
and to You
உன் பக்கமே
anabnā
أَنَبْنَا
we turn
பணிவுடன் திரும்பிவிட்டோம்
wa-ilayka l-maṣīru
وَإِلَيْكَ ٱلْمَصِيرُ
and to You (is) the final return
உன் பக்கமே மீளுமிடம்

Transliteration:

Qad kaanat lakum uswatun basanatun feee Ibraaheema wallazeena ma'ahoo iz qaaloo liqawmihim innaa bura'aaa'u minkum wa mimmaa ta'budoona min doonil laahi kafarnaa bikum wa badaa bainanaa wa bainakumul 'adaawatu wal baghdaaa'u abadan hattaa tu'minoo billaahi wahdahooo illaa qawla Ibraheema li abeehi la astaghfiranna laka wa maaa amliku laka minal laahi min shai; rabbanaa 'alaika tawakkalnaa wa ilaika anabnaa wa ilaikal maseer (QS. al-Mumtaḥanah:4)

English Sahih International:

There has already been for you an excellent pattern in Abraham and those with him, when they said to their people, "Indeed, we are disassociated from you and from whatever you worship other than Allah. We have denied you, and there has appeared between us and you animosity and hatred forever until you believe in Allah alone" – except for the saying of Abraham to his father, "I will surely ask forgiveness for you, but I have not [power to do] for you anything against Allah. Our Lord, upon You we have relied, and to You we have returned, and to You is the destination. (QS. Al-Mumtahanah, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

இப்ராஹீமிடத்திலும், அவருடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு ஒரு நல்ல உதாரணம் நிச்சயமாக இருக்கின்றது. அவர்கள் தம் மக்களை நோக்கி "நிச்சயமாக நாங்கள் உங்களில் இருந்தும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப் பவைகளிலிருந்தும் விலகிவிட்டோம். உங்களையும் (அவை களையும்) நிராகரித்துவிட்டோம். அல்லாஹ் ஒருவனையே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரையில் எங்களுக்கும் உங்களுக்கு மிடையில் விரோதமும், குரோதமும் ஏற்பட்டுவிட்டது" என்று கூறினார்கள். அன்றி, இப்ராஹீம் தன் (சொல்லைக் கேளாத) தந்தையை நோக்கி "அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையில்) யாதொன்றையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது. ஆயினும், உங்களுக்காக அவனிடத்தில் பின்னர் நான் மன்னிப்பைக் கோருவேன்" என்று கூறி, "எங்கள் இறைவனே! உன்னையே நாங்கள் நம்பினோம். உன்னையே நாங்கள் நோக்கினோம். உன்னிடமே (நாங்கள் அனைவரும்) வர வேண்டியதிருக்கின்றது" (என்றும்), (ஸூரத்துல் மும்தஹினா, வசனம் ௪)

Jan Trust Foundation

இப்ராஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது; தம் சமூகத்தாரிடம் அவர்கள், “உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம்; அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன” என்றார்கள். ஆனால் இப்ராஹீம் தம் தந்தையை நோக்கி| “அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது; ஆயினும் உங்களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்” எனக் கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன் மாதிரியிருக்கிறது, அன்றியும், அவர் கூறினார்)| “எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

திட்டமாக இப்ராஹீமிடத்திலும் அவர்களுடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. “நிச்சயமாக நாங்கள் உங்களை விட்டும் அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குகின்றவற்றை விட்டும் விலகியவர்கள் ஆவோம். உங்களை(யும் நீங்கள் செய்கின்ற செயல்களையும்) நாங்கள் மறுத்துவிட்டோம். எங்களுக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் பகைமையும் குரோதமும் எப்போதும் வெளிப்பட்டுவிட்டன, நீங்கள் அல்லாஹ் ஒருவனை மட்டும் நம்பிக்கை கொள்கின்ற வரை (நாங்கள் உங்களுடன் சேர முடியாது)” என்று அவர்கள் தங்கள் மக்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்! எனினும் இப்ராஹீம் தனது தந்தைக்கு, “நிச்சயமாக நான் உமக்காக பாவமன்னிப்பு கேட்பேன், ஆனால், அல்லாஹ்விடம் உமக்கு நான் எதையும் செய்ய உரிமை பெறமாட்டேன்” என்று கூறியதை தவிர. (இது அவர் இறைவனின் சட்டம் தெரிவதற்கு முன்னர் கூறியதாகும். இணைவைப்பவர்களுக்கு பாவமன்னிப்பு கேட்கக்கூடாது என்று தெரிந்தவுடன் அவர் தந்தைக்கு மன்னிப்பு கேட்பதை விட்டு விலகிவிட்டார். எனவே, இதுதவிர மற்ற எல்லா விஷயங்களிலும் இப்ராஹீமிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. மேலும் இப்ராஹீம் கூறினார்:) “எங்கள் இறைவா! உன் மீது நாங்கள் நம்பிக்கை வைத்தோம். உன் பக்கமே நாங்கள் பணிவுடன் திரும்பிவிட்டோம். உன் பக்கமே (எங்கள் அனைவரின்) மீளுமிடம் இருக்கின்றது.