Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மும்தஹினா வசனம் ௨

Qur'an Surah Al-Mumtahanah Verse 2

ஸூரத்துல் மும்தஹினா [௬௦]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنْ يَّثْقَفُوْكُمْ يَكُوْنُوْا لَكُمْ اَعْدَاۤءً وَّيَبْسُطُوْٓا اِلَيْكُمْ اَيْدِيَهُمْ وَاَلْسِنَتَهُمْ بِالسُّوْۤءِ وَوَدُّوْا لَوْ تَكْفُرُوْنَۗ (الممتحنة : ٦٠)

in yathqafūkum
إِن يَثْقَفُوكُمْ
If they gain dominance over you
அவர்கள் உங்களை வசமாகப் பெற்றுக் கொண்டால்
yakūnū
يَكُونُوا۟
they would be
அவர்கள் ஆகிவிடுவார்கள்
lakum
لَكُمْ
to you
உங்களுக்கு
aʿdāan
أَعْدَآءً
enemies
எதிரிகளாக
wayabsuṭū
وَيَبْسُطُوٓا۟
and extend
இன்னும் நீட்டுவார்கள்
ilaykum
إِلَيْكُمْ
against you
உங்கள் பக்கம்
aydiyahum
أَيْدِيَهُمْ
their hands
தங்கள் கரங்களையும்
wa-alsinatahum
وَأَلْسِنَتَهُم
and their tongues
தங்கள் நாவுகளையும்
bil-sūi
بِٱلسُّوٓءِ
with evil
தீங்கிழைக்க
wawaddū
وَوَدُّوا۟
and they desire
இன்னும் விரும்புகிறார்கள்
law takfurūna
لَوْ تَكْفُرُونَ
that you would disbelieve
நீங்கள் நிராகரிக்க வேண்டும் என்பதை

Transliteration:

Iny yasqafookum yakoonoo lakum a'daaa'anw wa yabsutooo ilaikum aydiyahum wa alsinatahum bissooo'i wa waddoo law takfuroon (QS. al-Mumtaḥanah:2)

English Sahih International:

If they gain dominance over you, they would be [i.e., behave] to you as enemies and extend against you their hands and their tongues with evil, and they wish you would disbelieve. (QS. Al-Mumtahanah, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

அவர்களுக்கு சமயம் கிடைத்தால் (பகிரங்கமாகவே) அவர்கள் உங்களுக்கு எதிரியாகி, தங்களுடைய கைகளையும் உங்கள் மீது நீட்டி, தங்கள் நாவாலும் உங்களுக்குத் தீங்கிழைப்பார்கள். அன்றி, நீங்களும் (நம்பிக்கையை விட்டு) நிராகரிப்பவர்களாக ஆகிவிடவேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர். (ஸூரத்துல் மும்தஹினா, வசனம் ௨)

Jan Trust Foundation

அவர்களுக்கு உங்கள் மீது வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் உங்களுக்கு விரோதிகளாகித் தம் கைகளையும், தம் நாவுகளையும் உங்களுக்குத் தீங்கிழைப்பதற்காக உங்கள்பால் நீட்டுவார்கள்; தவிர, நீங்களும் காஃபிர்களாக வேண்டும் என்று பிரியப்படுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் உங்களை வசமாகப் பெற்றுக்கொண்டால் உங்களுக்கு எதிரிகளாக அவர்கள் ஆகிவிடுவார்கள், தங்கள் கரங்களையும் தங்கள் நாவுகளையும் உங்கள் பக்கம் (உங்களுக்கு) தீங்கிழைக்க நீட்டுவார்கள். நீங்கள் நிராகரிக்க வேண்டும் என்பதை அவர்கள் விரும்புகிறார்கள்.