Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மும்தஹினா வசனம் ௧௨

Qur'an Surah Al-Mumtahanah Verse 12

ஸூரத்துல் மும்தஹினா [௬௦]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا النَّبِيُّ اِذَا جَاۤءَكَ الْمُؤْمِنٰتُ يُبَايِعْنَكَ عَلٰٓى اَنْ لَّا يُشْرِكْنَ بِاللّٰهِ شَيْـًٔا وَّلَا يَسْرِقْنَ وَلَا يَزْنِيْنَ وَلَا يَقْتُلْنَ اَوْلَادَهُنَّ وَلَا يَأْتِيْنَ بِبُهْتَانٍ يَّفْتَرِيْنَهٗ بَيْنَ اَيْدِيْهِنَّ وَاَرْجُلِهِنَّ وَلَا يَعْصِيْنَكَ فِيْ مَعْرُوْفٍ فَبَايِعْهُنَّ وَاسْتَغْفِرْ لَهُنَّ اللّٰهَ ۗاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ (الممتحنة : ٦٠)

yāayyuhā l-nabiyu
يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ
O! Prophet!
நபியே!
idhā jāaka
إِذَا جَآءَكَ
When come to you
உம்மிடம் வந்தால்
l-mu'minātu
ٱلْمُؤْمِنَٰتُ
the believing women
முஃமினான பெண்கள்
yubāyiʿ'naka
يُبَايِعْنَكَ
pledging to you
உம்மிடம் அவர்கள் வாக்குறுதி கொடுப்பவர்களாக
ʿalā an lā yush'rik'na
عَلَىٰٓ أَن لَّا يُشْرِكْنَ
[on] that not they will associate
அவர்கள் இணைவைக்க மாட்டார்கள்
bil-lahi
بِٱللَّهِ
with Allah
அல்லாஹ்விற்கு
shayan
شَيْـًٔا
anything
எதையும்
walā yasriq'na
وَلَا يَسْرِقْنَ
and not they will steal
இன்னும் திருட மாட்டார்கள்
walā yaznīna
وَلَا يَزْنِينَ
and not they will commit adultery
இன்னும் விபச்சாரம் செய்ய மாட்டார்கள்
walā yaqtul'na
وَلَا يَقْتُلْنَ
and not they will kill
இன்னும் கொலை செய்ய மாட்டார்கள்
awlādahunna
أَوْلَٰدَهُنَّ
their children
தங்கள் குழந்தைகளை
walā yatīna
وَلَا يَأْتِينَ
and not they bring
இன்னும் கொண்டுவர மாட்டார்கள்
bibuh'tānin
بِبُهْتَٰنٍ
slander
ஒரு பொய்யை
yaftarīnahu
يَفْتَرِينَهُۥ
they invent it
அதை தாங்கள் இட்டுக்கட்டுகின்றனர்
bayna
بَيْنَ
between
முன்னர்
aydīhinna
أَيْدِيهِنَّ
their hands
தங்கள் கைகள்
wa-arjulihinna
وَأَرْجُلِهِنَّ
and their feet
இன்னும் தங்கள் கால்களுக்கு
walā yaʿṣīnaka
وَلَا يَعْصِينَكَ
and not they will disobey you
இன்னும் உமக்கு அவர்கள் மாறுசெய்ய மாட்டார்கள்
fī maʿrūfin
فِى مَعْرُوفٍۙ
in (the) right
நல்ல காரியங்களில்
fabāyiʿ'hunna
فَبَايِعْهُنَّ
then accept their pledge
அவர்களிடம் வாக்குறுதி வாங்குவீராக!
wa-is'taghfir
وَٱسْتَغْفِرْ
and ask forgiveness
பாவமன்னிப்புக் கோருவீராக!
lahunna
لَهُنَّ
for them
அவர்களுக்காக
l-laha
ٱللَّهَۖ
(from) Allah
அல்லாஹ்விடம்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
(is) Oft-Forgiving
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
Most Merciful
மகா கருணையாளன்

Transliteration:

Yaaa ayyuhan nabbiyyu izaa jaaa'akal mu'minaau yubaai naka 'alaaa allaa yushrikna billaahi shai 'anw wa laa yasriqna wa laa yazneena wa laa yaqtulna awlaadahunna wa laa yaateena bibuhtaaniny yaftaree nahoo baina aydeehinna wa arjulihinna wa laa ya'seenaka fee ma'roofin fabaayi'hunna wastaghfir lahunnal laaha innnal laaha ghafoorur raheem (QS. al-Mumtaḥanah:12)

English Sahih International:

O Prophet, when the believing women come to you pledging to you that they will not associate anything with Allah, nor will they steal, nor will they commit unlawful sexual intercourse, nor will they kill their children, nor will they bring forth a slander they have invented between their arms and legs, nor will they disobey you in what is right – then accept their pledge and ask forgiveness for them of Allah. Indeed, Allah is Forgiving and Merciful. (QS. Al-Mumtahanah, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

நபியே! நம்பிக்கை கொண்ட பெண்கள் உங்களிடம் வந்து, "அல்லாஹ்வுக்கு யாதொன்றையும் இணைவைப்பதில்லை என்றும், திருடுவதில்லை என்றும், விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் (பெண்) சந்ததிகளைக் கொலை செய்வதில்லை" என்றும், "தங்களுடைய கை கால்கள் அறிய (அதாவது: பொய்யெனத் தெரிந்தே) கற்பனையாக அவதூறு கூறுவது இல்லை" என்றும், நன்மையான (காரியத்)தில் உமக்கு மாறு செய்வதில்லையென்றும், உங்களிடம் (பைஅத்து கொடுத்து) வாக்குறுதி செய்தால், அவர்களுடைய வாக்குறுதியைப் பெற்றுக்கொண்டு, நீங்கள் அவர்களுக்காக (முன்னர் அவர்கள் செய்துவிட்ட குற்றங்களுக்காக) அல்லாஹ்விடத்தில் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் மும்தஹினா, வசனம் ௧௨)

Jan Trust Foundation

நபியே! முஃமினான பெண்கள் உங்களிடம் வந்து; அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணைவைப்பதில்லையென்றும்; திருடுவதில்லை என்றும்; விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் பிள்ளைகளை கொல்வதில்லை என்றும், தங்கள் கைகளுக்கும், தங்கள் கால்களுக்கும் இடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ, அத்தகைய அவதூறை இட்டுக்கட்டிக் கொண்டு வருவதில்லை என்றும், மேலும் நன்மையான (காரியத்)தில் உமக்கு மாறு செய்வதில்லையென்றும் அவர்கள் உம்மிடம் பைஅத்து - வாக்குறுதி செய்தால் அவர்களுடைய வாக்குறுதியை ஏற்றுக் கொள்வீராக; மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுவீராக; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நபியே! முஃமினான பெண்கள், “அவர்கள் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்க மாட்டார்கள், திருட மாட்டார்கள், விபச்சாரம் செய்ய மாட்டார்கள், தங்கள் குழந்தைகளை கொலை செய்ய மாட்டார்கள், தங்கள் கைகள், இன்னும் தங்கள் கால்களுக்கு முன்னர் தாங்கள் இட்டுக்கட்டுகின்ற ஒரு பொய்யை கொண்டுவர மாட்டார்கள். (-அதாவது தங்கள் கணவனுக்கு பிறக்காத குழந்தையை தங்கள் கணவனின் குழந்தையாகக் கூறக்கூடாது), நல்ல காரியங்களில் உமக்கு அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்” என்று உம்மிடம் அவர்கள் வாக்குறுதி கொடுப்பவர்களாக உம்மிடம் அவர்கள் வந்தால் நீங்கள் அவர்களிடம் வாக்குறுதி வாங்குவீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.