குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மும்தஹினா வசனம் ௧௧
Qur'an Surah Al-Mumtahanah Verse 11
ஸூரத்துல் மும்தஹினா [௬௦]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنْ فَاتَكُمْ شَيْءٌ مِّنْ اَزْوَاجِكُمْ اِلَى الْكُفَّارِ فَعَاقَبْتُمْ فَاٰتُوا الَّذِيْنَ ذَهَبَتْ اَزْوَاجُهُمْ مِّثْلَ مَآ اَنْفَقُوْاۗ وَاتَّقُوا اللّٰهَ الَّذِيْٓ اَنْتُمْ بِهٖ مُؤْمِنُوْنَ (الممتحنة : ٦٠)
- wa-in fātakum
- وَإِن فَاتَكُمْ
- And if have gone from you
- தப்பிச் சென்று விட்டால்
- shayon
- شَىْءٌ
- any
- யாராவது
- min azwājikum
- مِّنْ أَزْوَٰجِكُمْ
- of your wives
- உங்கள் மனைவிமார்களில்
- ilā l-kufāri
- إِلَى ٱلْكُفَّارِ
- to the disbelievers
- நிராகரிப்பாளர்களிடம்
- faʿāqabtum
- فَعَاقَبْتُمْ
- then your turn comes
- நீங்கள் தண்டித்தால்
- faātū
- فَـَٔاتُوا۟
- then give
- கொடுத்து விடுங்கள்
- alladhīna
- ٱلَّذِينَ
- (to) those who
- எவர்கள்
- dhahabat
- ذَهَبَتْ
- have gone
- சென்றுவிட்டார்களோ
- azwājuhum
- أَزْوَٰجُهُم
- their wives
- அவர்களுடைய மனைவிமார்கள்
- mith'la
- مِّثْلَ
- (the) like
- போன்று
- mā anfaqū
- مَآ أَنفَقُوا۟ۚ
- (of) what they had spent
- அவர்கள் செலவு செய்ததை
- wa-ittaqū
- وَٱتَّقُوا۟
- And fear
- அஞ்சிக் கொள்ளுங்கள்!
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்வை
- alladhī
- ٱلَّذِىٓ
- (in) Whom
- எவன்
- antum
- أَنتُم
- you
- நீங்கள்
- bihi
- بِهِۦ
- [in Him]
- அவனை
- mu'minūna
- مُؤْمِنُونَ
- (are) believers
- நம்பிக்கை கொள்கிறீர்கள்
Transliteration:
Wa in faatakum shai'um min azwaajikum ilal kuffaari fa'aaqabtum fa aatul lazeena zahabat azwaajuhum misla maaa anfaqoo; wattaqul laahal lazeee antum bihee mu'minoon(QS. al-Mumtaḥanah:11)
English Sahih International:
And if you have lost any of your wives to the disbelievers and you subsequently obtain [something], then give those whose wives have gone the equivalent of what they had spent. And fear Allah, in whom you are believers. (QS. Al-Mumtahanah, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
உங்கள் மனைவிகளில் எவளும் உங்களைவிட்டுப் பிரிந்து, நிராகரிப்பவர்களிடம் சென்று (அவளுக்குச் செலவு செய்த பொருள் அவர்களிடமிருந்து கிடைக்காமலும்) இருந்து அதற்காக (அவர்களுடைய நம்பிக்கை கொண்ட மனைவிகளுக்காகக் கொடுக்க வேண்டியதை) நீங்கள் நிறுத்திக் கொண்டுமிருந்தால் (அல்லது நிராகரிப்பவர்களுடன் போர் ஏற்பட்டு அவர்களுடைய பொருளை நீங்கள் அடைந்தாலும்) அதிலிருந்து (உங்களில்) எவருடைய மனைவி நிராகரிப்பவர்களிடம் சென்றுவிட்டாளோ அவளுக்காக, (அவளுடைய கணவன்) செலவு செய்தது போன்றதைக் கொடுத்துவிடுங்கள். நீங்கள் (இவ்விஷயத்தில்) அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். அவனையே நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்கள். (ஸூரத்துல் மும்தஹினா, வசனம் ௧௧)
Jan Trust Foundation
மேலும் உங்கள் மனைவியரிலிருந்து எவரேனும் உங்களைவிட்டுத் தப்பி, காஃபிர்களிடம் சென்ற பின்னர், நீங்கள் போர்ப்பொருள்களை அடைந்தால், எவர்கள் மனைவியர் சென்று விட்டனரோ, அவர்களுக்கு அவர்கள் செலவு செய்தது போன்றதை நீங்கள் கொடுங்கள்; அன்றியும், நீங்கள் எவன் மீது நம்பிக்கை கொண்டு முஃமின்களாக இருக்கிறீர்களோ அந்த அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்கள் மனைவிமார்களில் யாராவது (மதம்மாறி) நிராகரிப்பாளர்களிடம் தப்பிச் சென்றுவிட்டால், (அந்த நிராகரிப்பாளர்களை) நீங்கள் (போரில்) தண்டித்தால் (-அவர்கள் மீது நீங்கள் வெற்றி பெற்றால்) எவர்களுடைய மனைவிமார்கள் சென்றுவிட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் (தங்கள் அந்த மனைவிமார்களின் மஹ்ர் விஷயத்தில்) செலவு செய்ததைப் போன்று (கனீமத்தில் இருந்து) கொடுத்து விடுங்கள்! நீங்கள் நம்பிக்கைகொள்கின்ற அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!