Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மும்தஹினா வசனம் ௧௦

Qur'an Surah Al-Mumtahanah Verse 10

ஸூரத்துல் மும்தஹினா [௬௦]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِذَا جَاۤءَكُمُ الْمُؤْمِنٰتُ مُهٰجِرٰتٍ فَامْتَحِنُوْهُنَّۗ اَللّٰهُ اَعْلَمُ بِاِيْمَانِهِنَّ فَاِنْ عَلِمْتُمُوْهُنَّ مُؤْمِنٰتٍ فَلَا تَرْجِعُوْهُنَّ اِلَى الْكُفَّارِۗ لَا هُنَّ حِلٌّ لَّهُمْ وَلَا هُمْ يَحِلُّوْنَ لَهُنَّۗ وَاٰتُوْهُمْ مَّآ اَنْفَقُوْاۗ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ اَنْ تَنْكِحُوْهُنَّ اِذَآ اٰتَيْتُمُوْهُنَّ اُجُوْرَهُنَّۗ وَلَا تُمْسِكُوْا بِعِصَمِ الْكَوَافِرِ وَسْـَٔلُوْا مَآ اَنْفَقْتُمْ وَلْيَسْـَٔلُوْا مَآ اَنْفَقُوْاۗ ذٰلِكُمْ حُكْمُ اللّٰهِ ۗيَحْكُمُ بَيْنَكُمْۗ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ (الممتحنة : ٦٠)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
O you! who! believe!
நம்பிக்கையாளர்களே!
idhā jāakumu
إِذَا جَآءَكُمُ
When come to you
உங்களிடம் வந்தால்
l-mu'minātu
ٱلْمُؤْمِنَٰتُ
the believing women
முஃமினான பெண்கள்
muhājirātin
مُهَٰجِرَٰتٍ
(as) emigrants
ஹிஜ்ரா செய்தவர்களாக
fa-im'taḥinūhunna
فَٱمْتَحِنُوهُنَّۖ
then examine them
சோதியுங்கள்! அவர்களை
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
aʿlamu
أَعْلَمُ
(is) most knowing
மிக அறிந்தவன்
biīmānihinna
بِإِيمَٰنِهِنَّۖ
of their faith
அவர்களின் ஈமானை
fa-in
فَإِنْ
And if
நீங்கள் அறிந்தால்
ʿalim'tumūhunna
عَلِمْتُمُوهُنَّ
you know them
நீங்கள் அறிந்தால் அவர்களை
mu'minātin
مُؤْمِنَٰتٍ
(to be) believers
முஃமினான பெண்களாக
falā
فَلَا
then (do) not
திரும்ப அனுப்பாதீர்கள்
tarjiʿūhunna
تَرْجِعُوهُنَّ
return them
திரும்ப அனுப்பாதீர்கள் அவர்களை
ilā l-kufāri
إِلَى ٱلْكُفَّارِۖ
to the disbelievers
நிராகரிப்பாளர்களிடம்
lā hunna
لَا هُنَّ
Not they
அல்ல/அவர்கள்
ḥillun
حِلٌّ
(are) lawful
ஆகுமானவர்கள்
lahum
لَّهُمْ
for them
அவர்களுக்கு
walā hum yaḥillūna
وَلَا هُمْ يَحِلُّونَ
and not they are lawful
அவர்கள் ஆகுமாக மாட்டார்கள்
lahunna
لَهُنَّۖ
for them
அவர்களுக்கு
waātūhum
وَءَاتُوهُم
But give them
கொடுத்துவிடுங்கள்! அவர்களுக்கு
mā anfaqū
مَّآ أَنفَقُوا۟ۚ
what they have spent
அவர்கள் செலவு செய்ததை
walā junāḥa
وَلَا جُنَاحَ
And not any blame
அறவே குற்றமில்லை
ʿalaykum
عَلَيْكُمْ
upon you
உங்கள் மீது
an
أَن
if
நீங்கள் மணமுடிப்பது
tankiḥūhunna
تَنكِحُوهُنَّ
you marry them
நீங்கள் மணமுடிப்பது அவர்களை
idhā
إِذَآ
when
நீங்கள் கொடுத்தால்
ātaytumūhunna
ءَاتَيْتُمُوهُنَّ
you have given them
நீங்கள் கொடுத்தால் அவர்களுக்கு
ujūrahunna
أُجُورَهُنَّۚ
their (bridal) dues
அவர்களின் மஹ்ர்களை
walā tum'sikū
وَلَا تُمْسِكُوا۟
And (do) not hold
வைத்துக் கொள்ளாதீர்கள்
biʿiṣami
بِعِصَمِ
to marriage bonds
திருமண உறவை
l-kawāfiri
ٱلْكَوَافِرِ
(with) disbelieving women
நிராகரிக்கின்ற பெண்களின்
wasalū
وَسْـَٔلُوا۟
but ask (for)
கேளுங்கள்!
mā anfaqtum
مَآ أَنفَقْتُمْ
what you have spent
நீங்கள் செலவு செய்ததை
walyasalū
وَلْيَسْـَٔلُوا۟
and let them ask
அவர்கள் கேட்கட்டும்
mā anfaqū
مَآ أَنفَقُوا۟ۚ
what they have spent
அவர்கள் செலவு செய்ததை
dhālikum
ذَٰلِكُمْ
That
இது
ḥuk'mu
حُكْمُ
(is the) Judgment
சட்டமாகும்
l-lahi
ٱللَّهِۖ
(of) Allah
அல்லாஹ்வின்
yaḥkumu
يَحْكُمُ
He judges
தீர்ப்பளிக்கின்றான்
baynakum
بَيْنَكُمْۚ
between you
உங்களுக்கு மத்தியில்
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌ
(is) All-Knowing
நன்கறிந்தவன்
ḥakīmun
حَكِيمٌ
All-Wise
மகா ஞானவான்

Transliteration:

Yaa ayyuhal lazeena aamanoo izaa jaaa'akumul mu'minaatu muhaajiraatin famtah inoohunna Allaahu a'lamu bieemaanihinna fa in 'alimtumoohunna mu'minaatin falaa tarji'oohunna ilal kuffaar; laa hunna hillul lahum wa laa hum uahilloona lahunna wa aatoohum maa anfaqoo wa laa junaaha 'alaikum an tankihoohunna izaaa aataitumoohunna ujoorahunn; wa laa tumsikoo bi 'isamil kawaafiri was'aloo maaa anfaqtum walyas'aloo maaa anfaqoo zaalikum hukmul laahi yahkumu bainakum wallaahu 'aleemun hakeem (QS. al-Mumtaḥanah:10)

English Sahih International:

O you who have believed, when the believing women come to you as emigrants, examine [i.e., test] them. Allah is most knowing as to their faith. And if you know them to be believers, then do not return them to the disbelievers; they are not lawful [wives] for them, nor are they lawful [husbands] for them. But give them [i.e., the disbelievers] what they have spent. And there is no blame upon you if you marry them when you have given them their due compensation [i.e., mahr]. And hold not to marriage bonds with disbelieving women, but ask for what you have spent and let them [i.e., the disbelievers] ask for what they have spent. That is the judgement of Allah; He judges between you. And Allah is Knowing and Wise. (QS. Al-Mumtahanah, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! (நிராகரிப்பவர்களில் உள்ள) பெண்கள் நம்பிக்கை கொண்டு (தம் கணவர்களை வெறுத்து) வெளியேறி உங்களிடம் வந்தால், அவர்களைச் சோதித்துப் பாருங்கள். அவர்களுடைய உண்மை நம்பிக்கையை அல்லாஹ்தான் நன்கறிவான். எனினும், (நீங்கள் சோதித்ததில்) அவர்கள் நம்பிக்கையாளர்கள்தாம் என்று உங்களுக்குத் தெரிந்தால், அந்த பெண்களை (அவர்களின் கணவர்களாகிய) நிராகரிப்பவர்களிடம் திரும்ப அனுப்பிவிடாதீர்கள். (ஏனென்றால் முஸ்லிமான) இப்பெண்கள் அவர்களுக்கு (மனைவிகளாக இருப்பதும்) ஆகுமானதல்ல; அவர்கள் இவர்களுக்கு (கணவர்களாக இருப்பதும்) ஆகுமானதல்ல. (எனினும், இப்பெண்களுக்காக அவர்கள்) செலவு செய்திருந்த பொருளை அவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள். நீங்கள் அந்தப் பெண்களுக்கு மஹரைக் கொடுத்து, அவர்களை திருமணம் செய்துகொள்வது உங்கள் மீது குற்றமாகாது. தவிர, (உங்களுடைய பெண்களில் எவரும் நம்பிக்கைக் கொள்ளாதிருந்தால்) நம்பிக்கைக் கொள்ளாத அந்தப் பெண்களின் திருமண உறவை (நீக்கிவிடாது) நீங்கள் பிடித்துக் கொண்டிருக்க வேண்டாம். (அவர்களை நீக்கி, அவர்களுக்காக) நீங்கள் செலவு செய்ததை (அப்பெண்கள் சென்றிருக்கும் நிராகரிப்பவர்களிடம்) கேளுங்கள். (அவ்வாறே நம்பிக்கைக் கொண்டு உங்களிடம் வந்துவிட்ட அவர்களுடைய மனைவிகளுக்குத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் (உங்களிடம் கேட்கலாம்.) இது அல்லாஹ்வினுடைய கட்டளை. உங்களுக்கிடையில் (நீதமாகவே) தீர்ப்பளிக்கின்றான். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் மும்தஹினா, வசனம் ௧௦)

Jan Trust Foundation

ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்தவர்களாக) உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள்; அல்லாஹ் அவர்கள் ஈமானை நன்கறிந்தவன்; எனவே அவர்கள் முஃமினான (பெண்கள்) என நீங்கள் அறிந்தால், காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள்; ஏனெனில், அந்த பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. அந்த ஆண்கள் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. (ஆனால், இப் பெண்களுக்காக) அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்; அன்றியும் நீங்கள் அப்பெண்களுக்குரிய மஹரை கொடுத்து அவர்களை விவாகம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை; மேலும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பெண்களின் விவாக பந்தத்தை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டாம்; அன்றியும், நீங்கள் செலவு செய்திருந்ததை (அவர்கள் போய்ச் சேருவோரிடம்) கேளுங்கள்; (அவ்வாறே ஈமான் கொண்டு உங்களிடம் வந்து விட்டோருக்காகத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் (உங்களிடம்) கேட்கலாம் - இதுவே அல்லாஹ்வுடைய கட்டளையாகும்; உங்களிடையே அவன் (இவ்வாறே) தீர்ப்பு வழங்குகிறான் - மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! உங்களிடம் முஃமினான பெண்கள் ஹிஜ்ரா செய்தவர்களாக வந்தால் அவர்களை சோதியுங்கள்! அல்லாஹ் அவர்களின் ஈமானை - இறைநம்பிக்கையை- மிக அறிந்தவன் ஆவான். நீங்கள் அவர்களை முஃமினான பெண்களாக அறிந்தால் அவர்களை (-அந்த பெண்களை) நிராகரிப்பாளர்களிடம் திரும்ப அனுப்பாதீர்கள். அவர்கள் (-அப்பெண்கள்) அவர்களுக்கு (நிராகரிப்பாளர்களுக்கு) ஆகுமானவர்கள் அல்ல. அவர்கள் (-நிராகரிப்பாளர்கள்) அவர்களுக்கு (-அப்பெண்களுக்கு) ஆகுமாக மாட்டார்கள். அவர்கள் (-நிராகரிப்பாளர்கள்) செலவு செய்ததை அவர்களுக்கு கொடுத்துவிடுங்கள்! அவர்களின் (அப்பெண்களின்) மஹ்ர்களை நீங்கள் அவர்களுக்கு கொடுத்தால் நீங்கள் அவர்களை மணமுடிப்பது உங்கள் மீது அறவே குற்றம் இல்லை. (உங்கள் முந்திய மனைவிகளில்) நிராகரிக்கின்ற பெண்களின் திருமண உறவை நீங்கள் (தொடந்து) வைத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் (அப்பெண்களுக்கு மஹ்ர் விஷயத்தில்) செலவு செய்ததை (அவர்களிடம் - அப்பெண்களின் பொறுப்பாளர்களிடம்) கேளுங்கள்! அவர்கள் (அந்த நிராகரிப்பாளர்கள் இஸ்லாமை ஏற்று ஹிஜ்ரா சென்றுவிட்ட தங்கள் மனைவிகளுக்கு மஹ்ர் விஷயத்தில்) செலவு செய்ததை (உங்களிடம்) கேட்கட்டும். இது அல்லாஹ்வின் சட்டமாகும். (அல்லாஹ்) உங்களுக்கு மத்தியில் (தனது நீதமான சட்டங்களைக் கொண்டு) தீர்ப்பளிக்கின்றான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்.