Skip to content

ஸூரா ஸூரத்துல் மும்தஹினா - Page: 2

Al-Mumtahanah

(al-Mumtaḥanah)

௧௧

وَاِنْ فَاتَكُمْ شَيْءٌ مِّنْ اَزْوَاجِكُمْ اِلَى الْكُفَّارِ فَعَاقَبْتُمْ فَاٰتُوا الَّذِيْنَ ذَهَبَتْ اَزْوَاجُهُمْ مِّثْلَ مَآ اَنْفَقُوْاۗ وَاتَّقُوا اللّٰهَ الَّذِيْٓ اَنْتُمْ بِهٖ مُؤْمِنُوْنَ ١١

wa-in fātakum
وَإِن فَاتَكُمْ
தப்பிச் சென்று விட்டால்
shayon
شَىْءٌ
யாராவது
min azwājikum
مِّنْ أَزْوَٰجِكُمْ
உங்கள் மனைவிமார்களில்
ilā l-kufāri
إِلَى ٱلْكُفَّارِ
நிராகரிப்பாளர்களிடம்
faʿāqabtum
فَعَاقَبْتُمْ
நீங்கள் தண்டித்தால்
faātū
فَـَٔاتُوا۟
கொடுத்து விடுங்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
dhahabat
ذَهَبَتْ
சென்றுவிட்டார்களோ
azwājuhum
أَزْوَٰجُهُم
அவர்களுடைய மனைவிமார்கள்
mith'la
مِّثْلَ
போன்று
mā anfaqū
مَآ أَنفَقُوا۟ۚ
அவர்கள் செலவு செய்ததை
wa-ittaqū
وَٱتَّقُوا۟
அஞ்சிக் கொள்ளுங்கள்!
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
alladhī
ٱلَّذِىٓ
எவன்
antum
أَنتُم
நீங்கள்
bihi
بِهِۦ
அவனை
mu'minūna
مُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கிறீர்கள்
உங்கள் மனைவிகளில் எவளும் உங்களைவிட்டுப் பிரிந்து, நிராகரிப்பவர்களிடம் சென்று (அவளுக்குச் செலவு செய்த பொருள் அவர்களிடமிருந்து கிடைக்காமலும்) இருந்து அதற்காக (அவர்களுடைய நம்பிக்கை கொண்ட மனைவிகளுக்காகக் கொடுக்க வேண்டியதை) நீங்கள் நிறுத்திக் கொண்டுமிருந்தால் (அல்லது நிராகரிப்பவர்களுடன் போர் ஏற்பட்டு அவர்களுடைய பொருளை நீங்கள் அடைந்தாலும்) அதிலிருந்து (உங்களில்) எவருடைய மனைவி நிராகரிப்பவர்களிடம் சென்றுவிட்டாளோ அவளுக்காக, (அவளுடைய கணவன்) செலவு செய்தது போன்றதைக் கொடுத்துவிடுங்கள். நீங்கள் (இவ்விஷயத்தில்) அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். அவனையே நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்கள். ([௬௦] ஸூரத்துல் மும்தஹினா: ௧௧)
Tafseer
௧௨

يٰٓاَيُّهَا النَّبِيُّ اِذَا جَاۤءَكَ الْمُؤْمِنٰتُ يُبَايِعْنَكَ عَلٰٓى اَنْ لَّا يُشْرِكْنَ بِاللّٰهِ شَيْـًٔا وَّلَا يَسْرِقْنَ وَلَا يَزْنِيْنَ وَلَا يَقْتُلْنَ اَوْلَادَهُنَّ وَلَا يَأْتِيْنَ بِبُهْتَانٍ يَّفْتَرِيْنَهٗ بَيْنَ اَيْدِيْهِنَّ وَاَرْجُلِهِنَّ وَلَا يَعْصِيْنَكَ فِيْ مَعْرُوْفٍ فَبَايِعْهُنَّ وَاسْتَغْفِرْ لَهُنَّ اللّٰهَ ۗاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ١٢

yāayyuhā l-nabiyu
يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ
நபியே!
idhā jāaka
إِذَا جَآءَكَ
உம்மிடம் வந்தால்
l-mu'minātu
ٱلْمُؤْمِنَٰتُ
முஃமினான பெண்கள்
yubāyiʿ'naka
يُبَايِعْنَكَ
உம்மிடம் அவர்கள் வாக்குறுதி கொடுப்பவர்களாக
ʿalā an lā yush'rik'na
عَلَىٰٓ أَن لَّا يُشْرِكْنَ
அவர்கள் இணைவைக்க மாட்டார்கள்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்விற்கு
shayan
شَيْـًٔا
எதையும்
walā yasriq'na
وَلَا يَسْرِقْنَ
இன்னும் திருட மாட்டார்கள்
walā yaznīna
وَلَا يَزْنِينَ
இன்னும் விபச்சாரம் செய்ய மாட்டார்கள்
walā yaqtul'na
وَلَا يَقْتُلْنَ
இன்னும் கொலை செய்ய மாட்டார்கள்
awlādahunna
أَوْلَٰدَهُنَّ
தங்கள் குழந்தைகளை
walā yatīna
وَلَا يَأْتِينَ
இன்னும் கொண்டுவர மாட்டார்கள்
bibuh'tānin
بِبُهْتَٰنٍ
ஒரு பொய்யை
yaftarīnahu
يَفْتَرِينَهُۥ
அதை தாங்கள் இட்டுக்கட்டுகின்றனர்
bayna
بَيْنَ
முன்னர்
aydīhinna
أَيْدِيهِنَّ
தங்கள் கைகள்
wa-arjulihinna
وَأَرْجُلِهِنَّ
இன்னும் தங்கள் கால்களுக்கு
walā yaʿṣīnaka
وَلَا يَعْصِينَكَ
இன்னும் உமக்கு அவர்கள் மாறுசெய்ய மாட்டார்கள்
fī maʿrūfin
فِى مَعْرُوفٍۙ
நல்ல காரியங்களில்
fabāyiʿ'hunna
فَبَايِعْهُنَّ
அவர்களிடம் வாக்குறுதி வாங்குவீராக!
wa-is'taghfir
وَٱسْتَغْفِرْ
பாவமன்னிப்புக் கோருவீராக!
lahunna
لَهُنَّ
அவர்களுக்காக
l-laha
ٱللَّهَۖ
அல்லாஹ்விடம்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
மகா கருணையாளன்
நபியே! நம்பிக்கை கொண்ட பெண்கள் உங்களிடம் வந்து, "அல்லாஹ்வுக்கு யாதொன்றையும் இணைவைப்பதில்லை என்றும், திருடுவதில்லை என்றும், விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் (பெண்) சந்ததிகளைக் கொலை செய்வதில்லை" என்றும், "தங்களுடைய கை கால்கள் அறிய (அதாவது: பொய்யெனத் தெரிந்தே) கற்பனையாக அவதூறு கூறுவது இல்லை" என்றும், நன்மையான (காரியத்)தில் உமக்கு மாறு செய்வதில்லையென்றும், உங்களிடம் (பைஅத்து கொடுத்து) வாக்குறுதி செய்தால், அவர்களுடைய வாக்குறுதியைப் பெற்றுக்கொண்டு, நீங்கள் அவர்களுக்காக (முன்னர் அவர்கள் செய்துவிட்ட குற்றங்களுக்காக) அல்லாஹ்விடத்தில் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். ([௬௦] ஸூரத்துல் மும்தஹினா: ௧௨)
Tafseer
௧௩

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَوَلَّوْا قَوْمًا غَضِبَ اللّٰهُ عَلَيْهِمْ قَدْ يَىِٕسُوْا مِنَ الْاٰخِرَةِ كَمَا يَىِٕسَ الْكُفَّارُ مِنْ اَصْحٰبِ الْقُبُوْرِ ࣖ ١٣

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே!
lā tatawallaw
لَا تَتَوَلَّوْا۟
நீங்கள் நேசிக்காதீர்கள்
qawman ghaḍiba
قَوْمًا غَضِبَ
மக்களை/கோபித்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
qad ya-isū
قَدْ يَئِسُوا۟
திட்டமாக நம்பிக்கை இழந்தார்கள்
mina l-ākhirati
مِنَ ٱلْءَاخِرَةِ
மறுமை விஷயத்தில்
kamā ya-isa
كَمَا يَئِسَ
நம்பிக்கை இழந்ததைப் போல்
l-kufāru
ٱلْكُفَّارُ
நிராகரிப்பாளர்கள்
min aṣḥābi l-qubūri
مِنْ أَصْحَٰبِ ٱلْقُبُورِ
புதைக்குழிகளில் சென்றவர்கள்
நம்பிக்கையாளர்களே! எந்த மக்களின் மீது அல்லாஹ் கோபப்பட்டானோ அவர்களை நீங்கள் நேசிக்காதீர்கள். சமாதிகளில் இருப்பவர்களைப் பற்றி நிராகரிப்பவர்கள் (அவர்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட மாட்டார்கள் என) நம்பிக்கை இழந்தபடியே, மறுமையைப் பற்றி நிச்சயமாக இவர்களும் நம்பிக்கை இழந்து விட்டனர். ([௬௦] ஸூரத்துல் மும்தஹினா: ௧௩)
Tafseer