Skip to content

ஸூரா ஸூரத்துல் மும்தஹினா - Word by Word

Al-Mumtahanah

(al-Mumtaḥanah)

bismillaahirrahmaanirrahiim

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْا عَدُوِّيْ وَعَدُوَّكُمْ اَوْلِيَاۤءَ تُلْقُوْنَ اِلَيْهِمْ بِالْمَوَدَّةِ وَقَدْ كَفَرُوْا بِمَا جَاۤءَكُمْ مِّنَ الْحَقِّۚ يُخْرِجُوْنَ الرَّسُوْلَ وَاِيَّاكُمْ اَنْ تُؤْمِنُوْا بِاللّٰهِ رَبِّكُمْۗ اِنْ كُنْتُمْ خَرَجْتُمْ جِهَادًا فِيْ سَبِيْلِيْ وَابْتِغَاۤءَ مَرْضَاتِيْ تُسِرُّوْنَ اِلَيْهِمْ بِالْمَوَدَّةِ وَاَنَا۠ اَعْلَمُ بِمَآ اَخْفَيْتُمْ وَمَآ اَعْلَنْتُمْۗ وَمَنْ يَّفْعَلْهُ مِنْكُمْ فَقَدْ ضَلَّ سَوَاۤءَ السَّبِيْلِ ١

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே!
lā tattakhidhū
لَا تَتَّخِذُوا۟
எடுத்துக் கொள்ளாதீர்கள்
ʿaduwwī
عَدُوِّى
எனதுஎதிரிகளை(யும்)
waʿaduwwakum
وَعَدُوَّكُمْ
உங்கள் எதிரிகளையும்
awliyāa
أَوْلِيَآءَ
உற்ற நண்பர்களாக
tul'qūna
تُلْقُونَ
வெளிப்படுத்துகின்ற
ilayhim
إِلَيْهِم
அவர்களிடம்
bil-mawadati
بِٱلْمَوَدَّةِ
அன்பை
waqad
وَقَدْ
திட்டமாக
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
bimā jāakum
بِمَا جَآءَكُم
உங்களிடம் வந்ததை
mina l-ḥaqi
مِّنَ ٱلْحَقِّ
சத்தியத்தை
yukh'rijūna
يُخْرِجُونَ
வெளியேற்றுகின்றனர்
l-rasūla
ٱلرَّسُولَ
தூதரை(யும்)
wa-iyyākum
وَإِيَّاكُمْۙ
உங்களையும்
an tu'minū
أَن تُؤْمِنُوا۟
நீங்கள் நம்பிக்கை கொண்டதனால்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
rabbikum
رَبِّكُمْ
உங்கள் இறைவனாகிய
in kuntum kharajtum
إِن كُنتُمْ خَرَجْتُمْ
நீங்கள் வெளியேறிஇருந்தால்
jihādan
جِهَٰدًا
ஜிஹாது செய்வதற்காகவும்
fī sabīlī
فِى سَبِيلِى
எனது பாதையில்
wa-ib'tighāa
وَٱبْتِغَآءَ
தேடியும்
marḍātī
مَرْضَاتِىۚ
என் பொருத்தத்தை
tusirrūna
تُسِرُّونَ
இரகசியமாக காட்டுகின்றீர்களா?
ilayhim
إِلَيْهِم
அவர்களிடம்
bil-mawadati
بِٱلْمَوَدَّةِ
அன்பை
wa-anā
وَأَنَا۠
நான்
aʿlamu
أَعْلَمُ
நன்கறிவேன்
bimā akhfaytum
بِمَآ أَخْفَيْتُمْ
நீங்கள் மறைப்பதையும்
wamā aʿlantum
وَمَآ أَعْلَنتُمْۚ
நீங்கள் பகிரங்கப்படுத்துவதையும்
waman
وَمَن
யார்
yafʿalhu
يَفْعَلْهُ
அதைச் செய்வாரோ
minkum faqad
مِنكُمْ فَقَدْ
உங்களில்/திட்டமாக
ḍalla
ضَلَّ
வழி கெட்டுவிட்டார்
sawāa l-sabīli
سَوَآءَ ٱلسَّبِيلِ
நேரான பாதையை
நம்பிக்கையாளர்களே! எனக்கும் உங்களுக்கும் விரோதமாக இருப்பவர்களை நீங்கள் நேசர்களாக எடுத்துக்கொண்டு, அன்பின் அடிப்படையில் (ரகசியமாகக் கடிதம் எழுதி) அவர்களிடம் உறவாட வேண்டாம். உங்களிடம் வந்த சத்திய (வேத)த்தை நிச்சயமாக அவர்கள் நிராகரித்துவிட்டனர். நீங்கள் உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டீர்கள் என்பதற்காக உங்களையும் (நம்முடைய) தூதரையும் (உங்கள் இல்லங்களிலிருந்து) வெளியேற்றினார்கள். (நம்பிக்கையாளர்களே! நீங்கள்) என்னுடைய திருப்பொருத்தத்தை விரும்பி, என்னுடைய பாதையில் போர்புரிய மெய்யாகவே நீங்கள் (உங்கள் இல்லங்களிலிருந்து) வெளியேறி யிருந்தால், அவர்களுடன் நீங்கள் இரகசியமாக உறவாடிக் கொண்டிருப்பீர்களா? நீங்கள் மறைத்துக் கொள்வதையும், இன்னும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் நான் நன்கறிவேன். (இவ்வாறு) உங்களில் எவரேனும் செய்தால், நிச்சயமாக அவர் நேரான பாதையிலிருந்து தவறிவிட்டார். ([௬௦] ஸூரத்துல் மும்தஹினா: ௧)
Tafseer

اِنْ يَّثْقَفُوْكُمْ يَكُوْنُوْا لَكُمْ اَعْدَاۤءً وَّيَبْسُطُوْٓا اِلَيْكُمْ اَيْدِيَهُمْ وَاَلْسِنَتَهُمْ بِالسُّوْۤءِ وَوَدُّوْا لَوْ تَكْفُرُوْنَۗ ٢

in yathqafūkum
إِن يَثْقَفُوكُمْ
அவர்கள் உங்களை வசமாகப் பெற்றுக் கொண்டால்
yakūnū
يَكُونُوا۟
அவர்கள் ஆகிவிடுவார்கள்
lakum
لَكُمْ
உங்களுக்கு
aʿdāan
أَعْدَآءً
எதிரிகளாக
wayabsuṭū
وَيَبْسُطُوٓا۟
இன்னும் நீட்டுவார்கள்
ilaykum
إِلَيْكُمْ
உங்கள் பக்கம்
aydiyahum
أَيْدِيَهُمْ
தங்கள் கரங்களையும்
wa-alsinatahum
وَأَلْسِنَتَهُم
தங்கள் நாவுகளையும்
bil-sūi
بِٱلسُّوٓءِ
தீங்கிழைக்க
wawaddū
وَوَدُّوا۟
இன்னும் விரும்புகிறார்கள்
law takfurūna
لَوْ تَكْفُرُونَ
நீங்கள் நிராகரிக்க வேண்டும் என்பதை
அவர்களுக்கு சமயம் கிடைத்தால் (பகிரங்கமாகவே) அவர்கள் உங்களுக்கு எதிரியாகி, தங்களுடைய கைகளையும் உங்கள் மீது நீட்டி, தங்கள் நாவாலும் உங்களுக்குத் தீங்கிழைப்பார்கள். அன்றி, நீங்களும் (நம்பிக்கையை விட்டு) நிராகரிப்பவர்களாக ஆகிவிடவேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர். ([௬௦] ஸூரத்துல் மும்தஹினா: ௨)
Tafseer

لَنْ تَنْفَعَكُمْ اَرْحَامُكُمْ وَلَآ اَوْلَادُكُمْ ۛيَوْمَ الْقِيٰمَةِ ۛيَفْصِلُ بَيْنَكُمْۗ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ ٣

lan tanfaʿakum
لَن تَنفَعَكُمْ
உங்களுக்கு பலன் தரமாட்டார்கள்
arḥāmukum
أَرْحَامُكُمْ
உங்கள் இரத்த உறவுகளும்
walā awlādukum
وَلَآ أَوْلَٰدُكُمْۚ
உங்கள் பிள்ளைகளும்
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
yafṣilu
يَفْصِلُ
பிரித்து விடுவான்
baynakum
بَيْنَكُمْۚ
உங்களுக்கு மத்தியில்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதை
baṣīrun
بَصِيرٌ
உற்று நோக்குபவன்
(அவர்களுடன் இருக்கும்) உங்களுடைய சந்ததிகளும், உங்களுடைய பந்துத்துவமும் மறுமை நாளில் உங்களுக்கு யாதொரு பயனுமளிக்காது. (அந்நாளில் அல்லாஹ்) உங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்திவிடுவான். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் உற்று நோக்கியவனாக இருக்கின்றான். ([௬௦] ஸூரத்துல் மும்தஹினா: ௩)
Tafseer

قَدْ كَانَتْ لَكُمْ اُسْوَةٌ حَسَنَةٌ فِيْٓ اِبْرٰهِيْمَ وَالَّذِيْنَ مَعَهٗۚ اِذْ قَالُوْا لِقَوْمِهِمْ اِنَّا بُرَءٰۤؤُا مِنْكُمْ وَمِمَّا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ۖ كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَيْنَنَا وَبَيْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَاۤءُ اَبَدًا حَتّٰى تُؤْمِنُوْا بِاللّٰهِ وَحْدَهٗٓ اِلَّا قَوْلَ اِبْرٰهِيْمَ لِاَبِيْهِ لَاَسْتَغْفِرَنَّ لَكَ وَمَآ اَمْلِكُ لَكَ مِنَ اللّٰهِ مِنْ شَيْءٍۗ رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَاِلَيْكَ اَنَبْنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ ٤

qad
قَدْ
திட்டமாக
kānat
كَانَتْ
இருக்கிறது
lakum
لَكُمْ
உங்களுக்கு
us'watun
أُسْوَةٌ
முன்மாதிரி
ḥasanatun
حَسَنَةٌ
அழகிய
fī ib'rāhīma
فِىٓ إِبْرَٰهِيمَ
இப்ராஹீமிடத்திலும்
wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
maʿahu
مَعَهُۥٓ
அவர்களுடன்
idh qālū
إِذْ قَالُوا۟
அவர்கள் கூறிய சமயத்தை
liqawmihim
لِقَوْمِهِمْ
தங்கள் மக்களுக்கு
innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
buraāu
بُرَءَٰٓؤُا۟
விலகியவர்கள்
minkum
مِنكُمْ
உங்களை விட்டும்
wamimmā taʿbudūna
وَمِمَّا تَعْبُدُونَ
நீங்கள் வணங்குகின்றவற்றை விட்டும்
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
kafarnā
كَفَرْنَا
நாங்கள் மறுத்துவிட்டோம்
bikum
بِكُمْ
உங்களை
wabadā
وَبَدَا
வெளிப்பட்டுவிட்டன
baynanā
بَيْنَنَا
எங்களுக்கு மத்தியிலும்
wabaynakumu
وَبَيْنَكُمُ
உங்களுக்கு மத்தியிலும்
l-ʿadāwatu
ٱلْعَدَٰوَةُ
பகைமையும்
wal-baghḍāu
وَٱلْبَغْضَآءُ
குரோதமும்
abadan
أَبَدًا
எப்போதும்
ḥattā tu'minū
حَتَّىٰ تُؤْمِنُوا۟
நீங்கள் நம்பிக்கை கொள்கின்ற வரை
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்
waḥdahu
وَحْدَهُۥٓ
ஒருவனை மட்டும்
illā
إِلَّا
எனினும்
qawla
قَوْلَ
கூறியதை
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
இப்ராஹீம்
li-abīhi
لِأَبِيهِ
தனது தந்தைக்கு
la-astaghfiranna
لَأَسْتَغْفِرَنَّ
நிச்சயமாக நான் பாவமன்னிப்பு கேட்பேன்
laka
لَكَ
உமக்காக
wamā amliku
وَمَآ أَمْلِكُ
நான் உரிமை பெறமாட்டேன்
laka
لَكَ
உமக்கு
mina l-lahi
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
min shayin
مِن شَىْءٍۖ
எதையும்
rabbanā
رَّبَّنَا
எங்கள் இறைவா!
ʿalayka
عَلَيْكَ
உம்மீது
tawakkalnā
تَوَكَّلْنَا
நாங்கள் நம்பிக்கை வைத்தோம்
wa-ilayka
وَإِلَيْكَ
உன் பக்கமே
anabnā
أَنَبْنَا
பணிவுடன் திரும்பிவிட்டோம்
wa-ilayka l-maṣīru
وَإِلَيْكَ ٱلْمَصِيرُ
உன் பக்கமே மீளுமிடம்
இப்ராஹீமிடத்திலும், அவருடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு ஒரு நல்ல உதாரணம் நிச்சயமாக இருக்கின்றது. அவர்கள் தம் மக்களை நோக்கி "நிச்சயமாக நாங்கள் உங்களில் இருந்தும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப் பவைகளிலிருந்தும் விலகிவிட்டோம். உங்களையும் (அவை களையும்) நிராகரித்துவிட்டோம். அல்லாஹ் ஒருவனையே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரையில் எங்களுக்கும் உங்களுக்கு மிடையில் விரோதமும், குரோதமும் ஏற்பட்டுவிட்டது" என்று கூறினார்கள். அன்றி, இப்ராஹீம் தன் (சொல்லைக் கேளாத) தந்தையை நோக்கி "அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையில்) யாதொன்றையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது. ஆயினும், உங்களுக்காக அவனிடத்தில் பின்னர் நான் மன்னிப்பைக் கோருவேன்" என்று கூறி, "எங்கள் இறைவனே! உன்னையே நாங்கள் நம்பினோம். உன்னையே நாங்கள் நோக்கினோம். உன்னிடமே (நாங்கள் அனைவரும்) வர வேண்டியதிருக்கின்றது" (என்றும்), ([௬௦] ஸூரத்துல் மும்தஹினா: ௪)
Tafseer

رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِيْنَ كَفَرُوْا وَاغْفِرْ لَنَا رَبَّنَاۚ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ٥

rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா
lā tajʿalnā
لَا تَجْعَلْنَا
எங்களை ஆக்கிவிடாதே
fit'natan
فِتْنَةً
ஒரு சோதனையாக
lilladhīna kafarū
لِّلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்களுக்கு
wa-igh'fir
وَٱغْفِرْ
மன்னிப்பாயாக!
lanā
لَنَا
எங்களை
rabbanā
رَبَّنَآۖ
எங்கள் இறைவா
innaka anta
إِنَّكَ أَنتَ
நிச்சயமாக நீதான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்
"எங்கள் இறைவனே! எங்களை நீ நிராகரிப்பவர்களின் துன்பத்திற்குள்ளாக்கி விடாதே! எங்களை நீ மன்னிப்பாயாக! நிச்சயமாக நீதான் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும்" (என்றும் பிரார்த்தித்தார்). ([௬௦] ஸூரத்துல் மும்தஹினா: ௫)
Tafseer

لَقَدْ كَانَ لَكُمْ فِيْهِمْ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُو اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَۗ وَمَنْ يَّتَوَلَّ فَاِنَّ اللّٰهَ هُوَ الْغَنِيُّ الْحَمِيْدُ ࣖ ٦

laqad
لَقَدْ
திட்டவட்டமாக
kāna
كَانَ
இருக்கிறது
lakum
لَكُمْ
உங்களுக்கு
fīhim
فِيهِمْ
அவர்களிடம்
us'watun
أُسْوَةٌ
முன்மாதிரி
ḥasanatun
حَسَنَةٌ
அழகிய
liman kāna
لِّمَن كَانَ
இருப்பவருக்கு
yarjū
يَرْجُوا۟
ஆதரவு வைப்பவராக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வையும்
wal-yawma l-ākhira
وَٱلْيَوْمَ ٱلْءَاخِرَۚ
மறுமை நாளையும்
waman yatawalla
وَمَن يَتَوَلَّ
யார்/விலகுவாரோ
fa-inna l-laha
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
huwa
هُوَ
அவன்
l-ghaniyu
ٱلْغَنِىُّ
முற்றிலும் தேவையற்றவன்
l-ḥamīdu
ٱلْحَمِيدُ
மகா புகழுக்குரியவன்
நிச்சயமாக இவர்களில் உங்களுக்கு அழகான உதாரணம் இருக்கின்றது. எவர் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் மெய்யாகவே நம்புகின்றாரோ (அவர் அவ்வுதாரணத்தையே பின்பற்றுவார்.) எவர் புறக்கணிக்கின்றாரோ, நிச்சயமாக அல்லாஹ் (அத்தகையவர்களின்) தேவையற்றவனும், மிக புகழுடையவனுமாக இருக்கின்றான். ([௬௦] ஸூரத்துல் மும்தஹினா: ௬)
Tafseer

۞ عَسَى اللّٰهُ اَنْ يَّجْعَلَ بَيْنَكُمْ وَبَيْنَ الَّذِيْنَ عَادَيْتُمْ مِّنْهُمْ مَّوَدَّةًۗ وَاللّٰهُ قَدِيْرٌۗ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ ٧

ʿasā l-lahu an yajʿala
عَسَى ٱللَّهُ أَن يَجْعَلَ
அல்லாஹ் ஏற்படுத்தலாம்
baynakum
بَيْنَكُمْ
உங்களுக்கு மத்தியிலும்
wabayna
وَبَيْنَ
மத்தியிலும்
alladhīna ʿādaytum
ٱلَّذِينَ عَادَيْتُم
நீங்கள் பகைத்துக் கொண்டவர்களுக்கு
min'hum
مِّنْهُم
அவர்களில்
mawaddatan wal-lahu
مَّوَدَّةًۚ وَٱللَّهُ
அன்பை/அல்லாஹ்
qadīrun
قَدِيرٌۚ
பேராற்றலுடையவன்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
மகா கருணையாளன்
உங்களுக்கும், அவர்களுள் உள்ள உங்களுடைய எதிரிகளுக்கும் இடையில், அல்லாஹ் நேசத்தை ஏற்படுத்தி விடக்கூடும். (இதற்கும்) அல்லாஹ் ஆற்றலுடையவனே! அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். ([௬௦] ஸூரத்துல் மும்தஹினா: ௭)
Tafseer

لَا يَنْهٰىكُمُ اللّٰهُ عَنِ الَّذِيْنَ لَمْ يُقَاتِلُوْكُمْ فِى الدِّيْنِ وَلَمْ يُخْرِجُوْكُمْ مِّنْ دِيَارِكُمْ اَنْ تَبَرُّوْهُمْ وَتُقْسِطُوْٓا اِلَيْهِمْۗ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ ٨

lā yanhākumu
لَّا يَنْهَىٰكُمُ
உங்களை தடுக்க மாட்டான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿani alladhīna
عَنِ ٱلَّذِينَ
எவர்களை விட்டும்
lam yuqātilūkum fī l-dīni
لَمْ يُقَٰتِلُوكُمْ فِى ٱلدِّينِ
உங்களுடன் போர் செய்யவில்லையோ/மார்க்கத்தில்
walam yukh'rijūkum
وَلَمْ يُخْرِجُوكُم
உங்களை வெளியேற்றவில்லையோ
min diyārikum
مِّن دِيَٰرِكُمْ
உங்கள் இல்லங்களில் இருந்து
an tabarrūhum
أَن تَبَرُّوهُمْ
அவர்களுக்கு நீங்கள் நல்லது செய்வதை விட்டும்
watuq'siṭū
وَتُقْسِطُوٓا۟
இன்னும் நீங்கள் நீதமாக நடப்பதை
ilayhim
إِلَيْهِمْۚ
அவர்களுடன்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yuḥibbu
يُحِبُّ
நேசிக்கின்றான்
l-muq'siṭīna
ٱلْمُقْسِطِينَ
நீதவான்களை
(நம்பிக்கையாளர்களே!) மார்க்க விஷயத்தில் உங்களுடன் எதிர்த்து போர் புரியாதவர்களுக்கும், உங்கள் இல்லத்திலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும், நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுடன் நீங்கள் நீதமாக நடந்து கொள்வதையும் அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதிவான்களை நேசிப்பவனாகவே இருக்கின்றான். ([௬௦] ஸூரத்துல் மும்தஹினா: ௮)
Tafseer

اِنَّمَا يَنْهٰىكُمُ اللّٰهُ عَنِ الَّذِيْنَ قَاتَلُوْكُمْ فِى الدِّيْنِ وَاَخْرَجُوْكُمْ مِّنْ دِيَارِكُمْ وَظَاهَرُوْا عَلٰٓى اِخْرَاجِكُمْ اَنْ تَوَلَّوْهُمْۚ وَمَنْ يَّتَوَلَّهُمْ فَاُولٰۤىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ٩

innamā yanhākumu
إِنَّمَا يَنْهَىٰكُمُ
நிச்சயமாக உங்களை தடுப்பதெல்லாம்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿani alladhīna
عَنِ ٱلَّذِينَ
எவர்களை விட்டும்
qātalūkum fī l-dīni
قَٰتَلُوكُمْ فِى ٱلدِّينِ
உங்களிடம் போர் செய்தார்களோ/ மார்க்கத்தில்
wa-akhrajūkum
وَأَخْرَجُوكُم
இன்னும் உங்களை வெளியேற்றினார்களோ
min diyārikum
مِّن دِيَٰرِكُمْ
உங்கள் இல்லங்களில் இருந்து
waẓāharū
وَظَٰهَرُوا۟
இன்னும் உதவினார்களோ
ʿalā ikh'rājikum
عَلَىٰٓ إِخْرَاجِكُمْ
உங்களை வெளியேற்றுவதற்கு
an tawallawhum
أَن تَوَلَّوْهُمْۚ
அவர்களை நீங்கள் நேசிப்பதை
waman
وَمَن
யார்
yatawallahum
يَتَوَلَّهُمْ
அவர்களை நேசிக்கின்றார்களோ
fa-ulāika humu
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
l-ẓālimūna
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்
அல்லாஹ் உங்களைத் தடுப்பதெல்லாம், மார்க்க விஷயத்தில் உங்களுடன் போர் புரிந்தவர்களையும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியவர்களையும், வெளியேற்றுவதில் (எதிரிகளுக்கு) உதவி செய்தவர்களையும் நீங்கள் நண்பர்களாக ஆக்கிக்கொள்வதைத்தான். (ஆகவே,) எவர்கள் அவர்களுடன் நட்பு பாராட்டுகின்றார்களோ, அவர்கள் அநியாயக்காரர்கள்தாம். ([௬௦] ஸூரத்துல் மும்தஹினா: ௯)
Tafseer
௧௦

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِذَا جَاۤءَكُمُ الْمُؤْمِنٰتُ مُهٰجِرٰتٍ فَامْتَحِنُوْهُنَّۗ اَللّٰهُ اَعْلَمُ بِاِيْمَانِهِنَّ فَاِنْ عَلِمْتُمُوْهُنَّ مُؤْمِنٰتٍ فَلَا تَرْجِعُوْهُنَّ اِلَى الْكُفَّارِۗ لَا هُنَّ حِلٌّ لَّهُمْ وَلَا هُمْ يَحِلُّوْنَ لَهُنَّۗ وَاٰتُوْهُمْ مَّآ اَنْفَقُوْاۗ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ اَنْ تَنْكِحُوْهُنَّ اِذَآ اٰتَيْتُمُوْهُنَّ اُجُوْرَهُنَّۗ وَلَا تُمْسِكُوْا بِعِصَمِ الْكَوَافِرِ وَسْـَٔلُوْا مَآ اَنْفَقْتُمْ وَلْيَسْـَٔلُوْا مَآ اَنْفَقُوْاۗ ذٰلِكُمْ حُكْمُ اللّٰهِ ۗيَحْكُمُ بَيْنَكُمْۗ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ ١٠

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்களே!
idhā jāakumu
إِذَا جَآءَكُمُ
உங்களிடம் வந்தால்
l-mu'minātu
ٱلْمُؤْمِنَٰتُ
முஃமினான பெண்கள்
muhājirātin
مُهَٰجِرَٰتٍ
ஹிஜ்ரா செய்தவர்களாக
fa-im'taḥinūhunna
فَٱمْتَحِنُوهُنَّۖ
சோதியுங்கள்! அவர்களை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவன்
biīmānihinna
بِإِيمَٰنِهِنَّۖ
அவர்களின் ஈமானை
fa-in
فَإِنْ
நீங்கள் அறிந்தால்
ʿalim'tumūhunna
عَلِمْتُمُوهُنَّ
நீங்கள் அறிந்தால் அவர்களை
mu'minātin
مُؤْمِنَٰتٍ
முஃமினான பெண்களாக
falā
فَلَا
திரும்ப அனுப்பாதீர்கள்
tarjiʿūhunna
تَرْجِعُوهُنَّ
திரும்ப அனுப்பாதீர்கள் அவர்களை
ilā l-kufāri
إِلَى ٱلْكُفَّارِۖ
நிராகரிப்பாளர்களிடம்
lā hunna
لَا هُنَّ
அல்ல/அவர்கள்
ḥillun
حِلٌّ
ஆகுமானவர்கள்
lahum
لَّهُمْ
அவர்களுக்கு
walā hum yaḥillūna
وَلَا هُمْ يَحِلُّونَ
அவர்கள் ஆகுமாக மாட்டார்கள்
lahunna
لَهُنَّۖ
அவர்களுக்கு
waātūhum
وَءَاتُوهُم
கொடுத்துவிடுங்கள்! அவர்களுக்கு
mā anfaqū
مَّآ أَنفَقُوا۟ۚ
அவர்கள் செலவு செய்ததை
walā junāḥa
وَلَا جُنَاحَ
அறவே குற்றமில்லை
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
an
أَن
நீங்கள் மணமுடிப்பது
tankiḥūhunna
تَنكِحُوهُنَّ
நீங்கள் மணமுடிப்பது அவர்களை
idhā
إِذَآ
நீங்கள் கொடுத்தால்
ātaytumūhunna
ءَاتَيْتُمُوهُنَّ
நீங்கள் கொடுத்தால் அவர்களுக்கு
ujūrahunna
أُجُورَهُنَّۚ
அவர்களின் மஹ்ர்களை
walā tum'sikū
وَلَا تُمْسِكُوا۟
வைத்துக் கொள்ளாதீர்கள்
biʿiṣami
بِعِصَمِ
திருமண உறவை
l-kawāfiri
ٱلْكَوَافِرِ
நிராகரிக்கின்ற பெண்களின்
wasalū
وَسْـَٔلُوا۟
கேளுங்கள்!
mā anfaqtum
مَآ أَنفَقْتُمْ
நீங்கள் செலவு செய்ததை
walyasalū
وَلْيَسْـَٔلُوا۟
அவர்கள் கேட்கட்டும்
mā anfaqū
مَآ أَنفَقُوا۟ۚ
அவர்கள் செலவு செய்ததை
dhālikum
ذَٰلِكُمْ
இது
ḥuk'mu
حُكْمُ
சட்டமாகும்
l-lahi
ٱللَّهِۖ
அல்லாஹ்வின்
yaḥkumu
يَحْكُمُ
தீர்ப்பளிக்கின்றான்
baynakum
بَيْنَكُمْۚ
உங்களுக்கு மத்தியில்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
ḥakīmun
حَكِيمٌ
மகா ஞானவான்
நம்பிக்கையாளர்களே! (நிராகரிப்பவர்களில் உள்ள) பெண்கள் நம்பிக்கை கொண்டு (தம் கணவர்களை வெறுத்து) வெளியேறி உங்களிடம் வந்தால், அவர்களைச் சோதித்துப் பாருங்கள். அவர்களுடைய உண்மை நம்பிக்கையை அல்லாஹ்தான் நன்கறிவான். எனினும், (நீங்கள் சோதித்ததில்) அவர்கள் நம்பிக்கையாளர்கள்தாம் என்று உங்களுக்குத் தெரிந்தால், அந்த பெண்களை (அவர்களின் கணவர்களாகிய) நிராகரிப்பவர்களிடம் திரும்ப அனுப்பிவிடாதீர்கள். (ஏனென்றால் முஸ்லிமான) இப்பெண்கள் அவர்களுக்கு (மனைவிகளாக இருப்பதும்) ஆகுமானதல்ல; அவர்கள் இவர்களுக்கு (கணவர்களாக இருப்பதும்) ஆகுமானதல்ல. (எனினும், இப்பெண்களுக்காக அவர்கள்) செலவு செய்திருந்த பொருளை அவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள். நீங்கள் அந்தப் பெண்களுக்கு மஹரைக் கொடுத்து, அவர்களை திருமணம் செய்துகொள்வது உங்கள் மீது குற்றமாகாது. தவிர, (உங்களுடைய பெண்களில் எவரும் நம்பிக்கைக் கொள்ளாதிருந்தால்) நம்பிக்கைக் கொள்ளாத அந்தப் பெண்களின் திருமண உறவை (நீக்கிவிடாது) நீங்கள் பிடித்துக் கொண்டிருக்க வேண்டாம். (அவர்களை நீக்கி, அவர்களுக்காக) நீங்கள் செலவு செய்ததை (அப்பெண்கள் சென்றிருக்கும் நிராகரிப்பவர்களிடம்) கேளுங்கள். (அவ்வாறே நம்பிக்கைக் கொண்டு உங்களிடம் வந்துவிட்ட அவர்களுடைய மனைவிகளுக்குத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் (உங்களிடம் கேட்கலாம்.) இது அல்லாஹ்வினுடைய கட்டளை. உங்களுக்கிடையில் (நீதமாகவே) தீர்ப்பளிக்கின்றான். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௬௦] ஸூரத்துல் மும்தஹினா: ௧௦)
Tafseer