Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௯௧

Qur'an Surah Al-An'am Verse 91

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௯௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدْرِهٖٓ اِذْ قَالُوْا مَآ اَنْزَلَ اللّٰهُ عَلٰى بَشَرٍ مِّنْ شَيْءٍۗ قُلْ مَنْ اَنْزَلَ الْكِتٰبَ الَّذِيْ جَاۤءَ بِهٖ مُوْسٰى نُوْرًا وَّهُدًى لِّلنَّاسِ تَجْعَلُوْنَهٗ قَرَاطِيْسَ تُبْدُوْنَهَا وَتُخْفُوْنَ كَثِيْرًاۚ وَعُلِّمْتُمْ مَّا لَمْ تَعْلَمُوْٓا اَنْتُمْ وَلَآ اٰبَاۤؤُكُمْ ۗقُلِ اللّٰهُ ۙثُمَّ ذَرْهُمْ فِيْ خَوْضِهِمْ يَلْعَبُوْنَ (الأنعام : ٦)

wamā qadarū
وَمَا قَدَرُوا۟
And (did) not they appraise
அவர்கள் அறியவில்லை
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
ḥaqqa
حَقَّ
(with) true
தகுந்தாற்போல்
qadrihi
قَدْرِهِۦٓ
[of his] appraisal
அவனுடைய தகுதி
idh qālū
إِذْ قَالُوا۟
when they said
போது/கூறினர்
mā anzala
مَآ أَنزَلَ
"Not "revealed
இறக்கவில்லை
l-lahu
ٱللَّهُ
"(by) Allah
அல்லாஹ்
ʿalā
عَلَىٰ
on
மீது
basharin
بَشَرٍ
a human being
மனிதர்கள்
min shayin
مِّن شَىْءٍۗ
[of] anything"
எதையும்
qul
قُلْ
Say
கூறுவீராக
man
مَنْ
"Who
யார்?
anzala
أَنزَلَ
revealed
இறக்கினான்
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Book
வேதத்தை
alladhī jāa
ٱلَّذِى جَآءَ
which brought
எது/வந்தார்
bihi
بِهِۦ
[it]
அதைக் கொண்டு
mūsā
مُوسَىٰ
Musa
மூஸா
nūran
نُورًا
(as) a light
ஒளியாக
wahudan
وَهُدًى
and guidance
இன்னும் நேர்வழியாக
lilnnāsi
لِّلنَّاسِۖ
for the people?
மக்களுக்கு
tajʿalūnahu
تَجْعَلُونَهُۥ
You make it
ஆக்குகிறீர்கள்/அதை
qarāṭīsa
قَرَاطِيسَ
(into) parchments
பல ஏடுகளாக
tub'dūnahā
تُبْدُونَهَا
you disclose (some of) it
வெளிப்படுத்தினீர்கள்/அவற்றை
watukh'fūna
وَتُخْفُونَ
and you conceal
இன்னும் மறைத்து விடுகிறீர்கள்
kathīran
كَثِيرًاۖ
much (of it)
அதிகமானதை
waʿullim'tum
وَعُلِّمْتُم
And you were taught
இன்னும் கற்பிக்கப்பட்டீர்கள்
mā lam taʿlamū
مَّا لَمْ تَعْلَمُوٓا۟
what not knew
எதை/நீங்கள்அறியவில்லை
antum
أَنتُمْ
you
நீங்கள்
walā
وَلَآ
and not
இன்னும் இல்லை
ābāukum
ءَابَآؤُكُمْۖ
your forefathers"
மூதாதைகள்/உங்கள்
quli
قُلِ
Say
கூறுவீராக
l-lahu
ٱللَّهُۖ
"Allah (revealed it)"
அல்லாஹ்
thumma
ثُمَّ
Then
பிறகு
dharhum
ذَرْهُمْ
leave them
விடுவீராக/அவர்களை
fī khawḍihim
فِى خَوْضِهِمْ
in their discourse
அவர்கள் மூழ்குவதில்
yalʿabūna
يَلْعَبُونَ
playing
விளையாடியவர்களாக

Transliteration:

Wa maa qadarul laaha haqqa qadriheee iz qaaloo maaa anzalal laahu 'alaa basharim min shai'; qul man anzalal Kitaabal lazee jaaa'a bihee Moosaa nooranw wa hudal linnaasi taj'aloonahoo qaraateesa tubdoonahaa wa tukhfoona kaseeranw wa 'ullimtum maa lam ta'lamooo antum wa laaa aabaaa'ukum qulil laahu summa zarhum fee khawdihim yal'aboon (QS. al-ʾAnʿām:91)

English Sahih International:

And they did not appraise Allah with true appraisal when they said, "Allah did not reveal to a human being anything." Say, "Who revealed the Scripture that Moses brought as light and guidance to the people? You [Jews] make it into pages, disclosing [some of] it and concealing much. And you were taught that which you knew not – neither you nor your fathers." Say, "Allah [revealed it]." Then leave them in their [empty] discourse, amusing themselves. (QS. Al-An'am, Ayah ௯௧)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வின் தகுதியை அறிய வேண்டியவாறு அவர்கள் அறியவில்லை. ஏனென்றால் "மனிதர்களில் எவருக்கும் (வேதத்தில்) யாதொன்றையும் அல்லாஹ் அருளவேயில்லை" என்று அவர்கள் கூறுகின்றனர். ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கேளுங்கள்: "மனிதர்களுக்கு ஒளியையும் நேர்வழியையும் தரக்கூடிய ("தவ்றாத்" என்னும்) வேதத்தை நபி மூஸாவுக்கு அருளியது யார்? நீங்கள் அவ்வேதத்தைத் தனித்தனி ஏடுகளாகப் பிரித்து (அவற்றில்) சிலவற்றை வெளிப்படுத்துகிறீர்கள். (உங்கள் நோக்கத்திற்கு மாறான) பெரும்பாலானவற்றை நீங்கள் மறைத்து விடுகிறீர்கள். (அதன் மூலமாகவே) நீங்களும் உங்கள் மூதாதைகளும் அறியாமலிருந்தவைகள் உங்களுக்கு அறிவிக்கப்பட்டன. (இத்தகைய வேதத்தை உங்களுக்கு அருளியது யார்?" இதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன! நீங்களே அவர்களை நோக்கி) "அல்லாஹ்தான் (இறக்கி வைத்தான்)" என்று கூறி அவர்கள் (தங்களுடைய) வீண் தர்க்கத்திலேயே விளையாடிக் கொண்டிருக்கும் படியும் விட்டுவிடுங்கள். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௯௧)

Jan Trust Foundation

இவர்கள் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் மதிக்கவில்லை; ஏனெனில் அவர்கள், “அல்லாஹ் எந்த ஒரு மனிதர் மீதும் எ(ந்த வேதத்)தையும் இறக்கவில்லை” என்று கூறுகின்றனர்; அவர்களிடத்தில் நீர் கூறும்| “பிரகாசமானதாகவும், மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் மூஸா கொண்டுவந்தாரே அந்த வேதத்தை இறக்கியவன் யார்? அதனை நீங்கள் தனித்தனி ஏடுகளாக ஆக்கி, அவற்றில் சிலவற்றை வெளிப்படுத்துகிறீர்கள்; பெரும்பாலானவற்றை மறைத்தும் விடுகிறீர்கள்; (அவ்வேதத்தின் மூலமாகவே) நீங்களும் உங்கள் மூதாதையர்களும் அறியாமல் இருந்தவைகளையெல்லாம் கற்றுக்கொடுக்கப்பட்டீர்கள்.” (நபியே! மேலும்) நீர் கூறுவீராக| “அல்லாஹ்தான் (அதை இறக்கிவைத்தான்)” பின்பு அவர்களைத் தம் வீணான (தர்க்கத்)தில் விளையாடிக்கொண்டிருக்குமாறு விட்டுவிடுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

"மனிதர்கள் மீது (வேதத்தில்) எதையும் அல்லாஹ் இறக்கவில்லை" என்று அவர்கள் கூறியபோது அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கு தகுந்தாற்போல் அவர்கள் அறியவில்லை. (நபியே!) கூறுவீராக: "மக்களுக்கு ஒளியாகவும் நேர்வழியாகவும் மூஸா கொண்டு வந்த வேதத்தை இறக்கியவன் யார்? அதை நீங்கள் பல ஏடுகளாக ஆக்கி அவற்(றில் சிலவற்)றை வெளிப்படுத்தி அதிகமானதை மறைத்தும் விடுகிறீர்கள். நீங்களும் உங்கள் மூதாதைகளும் அறியாதவற்றை (நீங்கள்) கற்பிக்கப்பட்டீர்கள். (நபியே!) "அல்லாஹ் (அதை இறக்கினான்)" என்று கூறி, அவர்களை அவர்கள் மூழ்குவதிலேயே விளையாடியவர்களாக விடுவீராக.