குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௮௭
Qur'an Surah Al-An'am Verse 87
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௮௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمِنْ اٰبَاۤىِٕهِمْ وَذُرِّيّٰتِهِمْ وَاِخْوَانِهِمْ ۚوَاجْتَبَيْنٰهُمْ وَهَدَيْنٰهُمْ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ (الأنعام : ٦)
- wamin ābāihim
- وَمِنْ ءَابَآئِهِمْ
- And from their fathers
- இன்னும் இவர்களுடைய மூதாதைகளிலும்
- wadhurriyyātihim
- وَذُرِّيَّٰتِهِمْ
- and their descendents
- இன்னும் இவர்களுடைய சந்ததிகளிலும்
- wa-ikh'wānihim
- وَإِخْوَٰنِهِمْۖ
- and their brothers
- இன்னும் இவர்களுடைய சகோதரர்களிலும்
- wa-ij'tabaynāhum
- وَٱجْتَبَيْنَٰهُمْ
- and We chose them
- இன்னும் அவர்களை தேர்ந்தெடுத்தோம்
- wahadaynāhum
- وَهَدَيْنَٰهُمْ
- and We guided them
- இன்னும் அவர்களுக்கு நேர்வழி காட்டினோம்
- ilā
- إِلَىٰ
- to
- பக்கம்
- ṣirāṭin mus'taqīmin
- صِرَٰطٍ مُّسْتَقِيمٍ
- a path straight
- நேரான பாதை
Transliteration:
Wa min aabaaa'ihim wa zurriyyaatihim wa ikhwaanihim wajtabainaahum wa hadainaahum ilaa Siraatim Mustaqeem(QS. al-ʾAnʿām:87)
English Sahih International:
And [some] among their fathers and their descendants and their brothers – and We chose them and We guided them to a straight path. (QS. Al-An'am, Ayah ௮௭)
Abdul Hameed Baqavi:
இவர்களுடைய மூதாதைகளிலும், இவர்களுடைய சந்ததிகளிலும், இவர்களுடைய சகோதரர்களிலும் (பலரை) மேன்மையாக்கி வைத்ததுடன் இவர்கள் அனைவரையும் தேர்ந்தெடுத்து நேரான வழியிலும் செலுத்தினோம். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௮௭)
Jan Trust Foundation
இவர்களுடைய மூதாதையர்களிலிருந்தும், இவர்களுடைய சந்ததிகளிலிருந்தும், இவர்களுடைய சகோதரர்களிலிருந்தும் (பலரை) நாம் தேர்ந்தெடுத்து, அவர்களை நேர் வழியில் செலுத்தினோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவர்களுடைய மூதாதைகளிலும், இவர்களுடைய சந்ததிகளிலும், இவர்களுடைய சகோதரர்களிலும் (பலரை மேன்மைப்படுத்தினோம்). இன்னும் அவர்களை தேர்ந்தெடுத்தோம், இன்னும் அவர்களுக்கு நேரான பாதையின் பக்கம் நேர்வழி காட்டினோம்.