குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௭௮
Qur'an Surah Al-An'am Verse 78
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௭௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلَمَّا رَاَ الشَّمْسَ بَازِغَةً قَالَ هٰذَا رَبِّيْ هٰذَآ اَكْبَرُۚ فَلَمَّآ اَفَلَتْ قَالَ يٰقَوْمِ اِنِّيْ بَرِيْۤءٌ مِّمَّا تُشْرِكُوْنَ (الأنعام : ٦)
- falammā
- فَلَمَّا
- When
- போது
- raā
- رَءَا
- he saw
- கண்டார்
- l-shamsa
- ٱلشَّمْسَ
- the sun
- சூரியனை
- bāzighatan
- بَازِغَةً
- rising
- உதயமாகிய
- qāla
- قَالَ
- he said
- கூறினார்
- hādhā rabbī
- هَٰذَا رَبِّى
- "This (is) my Lord
- இது/என் இறைவன்
- hādhā
- هَٰذَآ
- this (is)
- இது
- akbaru
- أَكْبَرُۖ
- greater"
- மிகப் பெரியது
- falammā
- فَلَمَّآ
- But when
- போது
- afalat
- أَفَلَتْ
- it set
- மறைந்தது
- qāla
- قَالَ
- he said
- கூறினார்
- yāqawmi
- يَٰقَوْمِ
- "O my people!
- என் சமுதாயமே
- innī
- إِنِّى
- Indeed I am
- நிச்சயமாக நான்
- barīon
- بَرِىٓءٌ
- free
- விலகியவன்
- mimmā tush'rikūna
- مِّمَّا تُشْرِكُونَ
- of what you associate (with Allah)"
- எவற்றிலிருந்து/இணைவைக்கிறீர்கள்
Transliteration:
Falammmaa ra ashshamsa baazighatan qaala haazaa Rabbee haazaaa akbaru falammaaa afalat qaala yaa qawmi innee bareee'um mimmaa tushrikoon(QS. al-ʾAnʿām:78)
English Sahih International:
And when he saw the sun rising, he said, "This is my lord; this is greater." But when it set, he said, "O my people, indeed I am free from what you associate with Allah. (QS. Al-An'am, Ayah ௭௮)
Abdul Hameed Baqavi:
பின்னர் உதயமான (பளிச்சென்று நன்கு ஒளிரும்) சூரியனைக் கண்டபொழுது "இது மிகப்பெரியதாயிருக்கிறது. இது என்னுடைய இறைவன் (ஆகுமா?)" எனக் கேட்டு, அதுவும் அஸ்தமித்து மறையவே அவர் (தம் மக்களை நோக்கி) "என் மக்களே! நீங்கள் (இறைவனுக்கு) இணையாக்கும் (இவை) ஒவ்வொன்றிலிருந்தும் நிச்சயமாக நான் விலகிக்கொண்டேன்" என்று கூறிவிட்டு, (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௭௮)
Jan Trust Foundation
பின் சூரியன் (மிக்க ஒளியுடன்) உதயமாவதைக் கண்டபோது | “இதுவே என் இறைவன்; இது எல்லாவற்றிலும் பெரியது” என்று அவர் கூறினார். அதுவும் அஸ்தமிக்கவே, அவர், “என் சமூகத்தாரே! நீங்கள் (ஆண்டவனுக்கு) இணைவைக்கும் (ஒவ்வொன்றையும்) விட்டு நிச்சயமாக நான் விலகி விட்டேன்” என்று கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உதயமாகிய சூரியனைக் கண்டபோது, "இது என் இறைவன், இது மிகப் பெரியது" எனக் கூறினார். அது மறைந்தபோது, "என் சமுதாயமே! நீங்கள் (அல்லாஹ்விற்கு) இணைவைப்பவற்றிலிருந்து நிச்சயமாக நான் விலகியவன்" என்று கூறினார்.