Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௭௩

Qur'an Surah Al-An'am Verse 73

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௭௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَهُوَ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّۗ وَيَوْمَ يَقُوْلُ كُنْ فَيَكُوْنُۚ قَوْلُهُ الْحَقُّۗ وَلَهُ الْمُلْكُ يَوْمَ يُنْفَخُ فِى الصُّوْرِۗ عٰلِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ وَهُوَ الْحَكِيْمُ الْخَبِيْرُ (الأنعام : ٦)

wahuwa
وَهُوَ
And (it is) He
அவன்தான்
alladhī
ٱلَّذِى
Who
எவன்
khalaqa
خَلَقَ
created
படைத்தான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
the heavens
வானங்களை
wal-arḍa
وَٱلْأَرْضَ
and the earth
இன்னும் பூமியை
bil-ḥaqi
بِٱلْحَقِّۖ
in truth
உண்மையில்
wayawma
وَيَوْمَ
And (the) Day
இன்னும் நாள்
yaqūlu
يَقُولُ
He says
கூறுவான்
kun
كُن
"Be"
ஆகுக!
fayakūnu
فَيَكُونُۚ
and it is
உடனே ஆகிவிடும்
qawluhu
قَوْلُهُ
His word
அவனுடைய சொல்தான்
l-ḥaqu
ٱلْحَقُّۚ
(is) the truth
உண்மை
walahu
وَلَهُ
And for Him
இன்னும் அவனுக்கே
l-mul'ku
ٱلْمُلْكُ
(is) the Dominion
ஆட்சி
yawma
يَوْمَ
(on the) Day
நாளில்
yunfakhu
يُنفَخُ
will be blown
ஊதப்படும்
fī l-ṣūri
فِى ٱلصُّورِۚ
in the trumpet
சூரில்
ʿālimu
عَٰلِمُ
(He is) All-Knower
அறிந்தவன்
l-ghaybi
ٱلْغَيْبِ
(of) the unseen
மறைவானதை
wal-shahādati
وَٱلشَّهَٰدَةِۚ
and the seen
வெளிப்படையானதை
wahuwa
وَهُوَ
And He
அவன்தான்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
(is) the All-Wise
ஞானவான்
l-khabīru
ٱلْخَبِيرُ
the All-Aware
ஆழ்ந்தறிபவன்

Transliteration:

Wa an Huwal lazee khalaqas samaawaati wal arda bilhaqq; wa Yawma yaqoolu kun fa yakoon; Qawluhul haqq; wa lahul mulku Yawma yunfakhu fis Soor; 'Aalimul Ghaibi wash shahaadah; wa Huwal Hakeemul Khabeer (QS. al-ʾAnʿām:73)

English Sahih International:

And it is He who created the heavens and earth in truth. And the day [i.e., whenever] He says, "Be," and it is, His word is the truth. And His is the dominion [on] the Day the Horn is blown. [He is] Knower of the unseen and the witnessed; and He is the Wise, the Aware. (QS. Al-An'am, Ayah ௭௩)

Abdul Hameed Baqavi:

வானங்களையும், பூமியையும் படைத்தவன் உண்மையாகவே அவன்தான். (அவன் யாதொன்றை படைக்கக் கருதும்போது) "ஆகுக!" என அவன் கூறுவதுதான் (தாமதம்.) உடனே (அது) ஆகிவிடும். அவனுடைய சொல்தான் உண்மை. சூர் (எக்காளம்) ஊதப்படும் நாளில், அதிகாரம் அவன் ஒருவனுடையதாகவே இருக்கும். மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் அவன் நன்கறிவான். அவன் ஞானமுடையவனாகவும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௭௩)

Jan Trust Foundation

அவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான்; அவன் “ஆகுக!” என்று சொல்லும் நாளில், அது (உடனே) ஆகிவிடும். அவனுடைய வாக்கு உண்மையானது; எக்காளம் (ஸூர்) ஊதப்படும் நாளில், ஆட்சி (அதிகாரம்) அவனுடையதாகவே இருக்கும்; அவன் மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான்; அவனே பூரண ஞானமுடையோன்; (யாவற்றையும்) நன்கறிந்தோன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன்தான் உண்மையில் வானங்களையும், பூமியையும் படைத்தான். ‘ஆகுக!' என அவன் கூறும் நாளில் உடனே (அது) ஆகிவிடும். அவனுடைய சொல்தான் உண்மை. சூரில் ஊதப்படும் நாளில், அவனுக்கே ஆட்சி இருக்கும். மறைவானதையும், வெளிப்படையானதையும் அவன் அறிந்தவன். அவன்தான் ஞானவான், ஆழ்ந்தறிபவன்.