குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௬௦
Qur'an Surah Al-An'am Verse 60
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௬௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَهُوَ الَّذِيْ يَتَوَفّٰىكُمْ بِالَّيْلِ وَيَعْلَمُ مَا جَرَحْتُمْ بِالنَّهَارِ ثُمَّ يَبْعَثُكُمْ فِيْهِ لِيُقْضٰٓى اَجَلٌ مُّسَمًّىۚ ثُمَّ اِلَيْهِ مَرْجِعُكُمْ ثُمَّ يُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ࣖ (الأنعام : ٦)
- wahuwa alladhī
- وَهُوَ ٱلَّذِى
- And He (is) the One Who
- அவன்/எவன்
- yatawaffākum
- يَتَوَفَّىٰكُم
- takes your (soul)
- கைப்பற்றுகிறான்/உங்களை
- bi-al-layli
- بِٱلَّيْلِ
- by the night
- இரவில்
- wayaʿlamu
- وَيَعْلَمُ
- and He knows
- அறிவான்
- mā jaraḥtum
- مَا جَرَحْتُم
- what you committed
- எதை/செய்தீர்கள்
- bil-nahāri
- بِٱلنَّهَارِ
- by the day
- பகலில்
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- yabʿathukum
- يَبْعَثُكُمْ
- He raises you up
- எழுப்புகிறான்/உங்களை
- fīhi
- فِيهِ
- therein
- அதில்
- liyuq'ḍā
- لِيُقْضَىٰٓ
- so that is fulfilled
- முடிக்கப்படுவதற்காக
- ajalun
- أَجَلٌ
- (the) term
- ஒரு தவணை
- musamman
- مُّسَمًّىۖ
- specified
- குறிப்பிட்ட
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- ilayhi
- إِلَيْهِ
- to Him
- அவன் பக்கமே
- marjiʿukum
- مَرْجِعُكُمْ
- will be your return
- உங்கள் மீளுமிடம்
- thumma
- ثُمَّ
- then
- பிறகு
- yunabbi-ukum
- يُنَبِّئُكُم
- He will inform you
- அறிவிப்பான்/உங்களுக்கு
- bimā
- بِمَا
- about what
- எதை
- kuntum
- كُنتُمْ
- you used to
- இருந்தீர்கள்
- taʿmalūna
- تَعْمَلُونَ
- do
- செய்கிறீர்கள்
Transliteration:
Wa Huwal lazee yatawaf faakum billaili wa ya'lamu maa jarahtum binnahaari summa yab'asukum fee liyuqdaaa ajalum musamman summa ilaihi marji'ukum summa yunabbi 'ukum bimaa kuntum ta'maloon(QS. al-ʾAnʿām:60)
English Sahih International:
And it is He who takes your souls by night and knows what you have committed by day. Then He revives you therein [i.e., by day] that a specified term may be fulfilled. Then to Him will be your return; then He will inform you about what you used to do. (QS. Al-An'am, Ayah ௬௦)
Abdul Hameed Baqavi:
(மனிதர்களே!) இரவில் (நீங்கள் நித்திரை செய்யும்பொழுது) அவன்தான் (உங்கள் உணர்ச்சியை நீக்கி) உங்களை இறந்தவர்களுக்குச் சமமாக்குகின்றான். நீங்கள் பகலில் செய்பவற்றையும் அவன் நன்கறிகின்றான். (உங்களுக்குக்) குறிப்பிட்ட காலம் பூர்த்தி ஆவதற்காக இதற்குப் பின்னர் (உணர்ச்சியை உண்டு பண்ணி) உங்களை எழுப்புகிறான். பின்னர் நீங்கள் அவனிடம்தான் திரும்பப் போவீர்கள். நீங்கள் (இங்கு) செய்து கொண்டிருந்தவைகளை (அங்கு) உங்களுக்கு அறிவிப்பான். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௬௦)
Jan Trust Foundation
அவன் தான் இரவில் உங்களை மரணிக்கச் செய்கிறான்; இன்னும் நீங்கள் பகலில் செய்தவற்றையெல்லாம் அறிகிறான்; மீண்டும் உங்களைக் குறிப்பிட்டதவணை முடிப்பதற்காக பகலில் எழுப்புகிறான்; பின்னர் உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது; அப்பால் நீங்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இரவில் அவன்தான் உங்க(ள் உயிர்க)ளை கைப்பற்றுகிறான். நீங்கள் பகலில் செய்தவற்றை அறிகிறான். பிறகு, குறிப்பிட்ட தவணை (முழுமையாக) முடிக்கப்படுவதற்காக அதில் உங்களை எழுப்புகிறான். பிறகு, அவன் பக்கமே உங்கள் மீளுமிடம் இருக்கிறது. பிறகு, நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை (அவன்) உங்களுக்கு அறிவிப்பான்.