குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௫௬
Qur'an Surah Al-An'am Verse 56
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௫௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ اِنِّيْ نُهِيْتُ اَنْ اَعْبُدَ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ۗ قُلْ لَّآ اَتَّبِعُ اَهْوَاۤءَكُمْۙ قَدْ ضَلَلْتُ اِذًا وَّمَآ اَنَا۠ مِنَ الْمُهْتَدِيْنَ (الأنعام : ٦)
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக
- innī
- إِنِّى
- "Indeed I
- நிச்சயமாக நான்
- nuhītu
- نُهِيتُ
- [I] am forbidden
- தடுக்கப்பட்டுள்ளேன்
- an aʿbuda
- أَنْ أَعْبُدَ
- that I worship
- நான் வணங்குவதற்கு
- alladhīna tadʿūna
- ٱلَّذِينَ تَدْعُونَ
- those whom you call
- எவற்றை/பிரார்த்திக்கிறீர்கள்
- min dūni
- مِن دُونِ
- from" besides"
- தவிர
- l-lahi
- ٱللَّهِۚ
- Allah"
- அல்லாஹ்வை
- qul
- قُل
- Say
- கூறுவீராக
- lā attabiʿu
- لَّآ أَتَّبِعُ
- "Not I follow
- பின்பற்றமாட்டேன்
- ahwāakum
- أَهْوَآءَكُمْۙ
- your (vain) desires
- உங்கள் ஆசைகளை
- qad ḍalaltu
- قَدْ ضَلَلْتُ
- certainly I would go astray
- வழி தவறிவிடுவேன்
- idhan
- إِذًا
- then
- அவ்வாறாயின்
- wamā anā
- وَمَآ أَنَا۠
- and not I (would be)
- நான் இருக்க மாட்டேன்
- mina l-muh'tadīna
- مِنَ ٱلْمُهْتَدِينَ
- from the guided-ones"
- நேர்வழி பெற்றவர்களில்
Transliteration:
Qul innee nuheetu an a'budal lazeena tad'oona min doonil laah; qul laaa attabi'u ahwaaa'akum qad dalaltu izanw wa maaa ana minal muhtadeen(QS. al-ʾAnʿām:56)
English Sahih International:
Say, "Indeed, I have been forbidden to worship those you invoke besides Allah." Say, "I will not follow your desires, for I would then have gone astray, and I would not be of the [rightly] guided." (QS. Al-An'am, Ayah ௫௬)
Abdul Hameed Baqavi:
(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வையன்றி எவைகளை நீங்கள் (கடவுள்களென) அழைக்கின்றீர்களோ அவைகளை வணங்கக்கூடாதென்று நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன். ஆகவே உங்களுடைய விருப்பங்களை நான் பின்பற்ற மாட்டேன். அவ்வாறாயின், நிச்சயமாக நானும் வழி தவறிவிடுவேன். நேரான வழியை அடைந்தவனாக மாட்டேன்." (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௫௬)
Jan Trust Foundation
“நீங்கள் அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை(க் கடவுளர்களாக) அழைக்கின்றீர்களோ அவர்களை வணங்கக் கூடாதென்று நான் நிச்சயமாக தடுக்கப்பட்டு உள்ளேன்” (என்று நபியே!) நீர் கூறுவீராக| “உங்களுடைய மன இச்சைகளை நான் பின்பற்ற மாட்டேன்; (நான் அப்படிச் செய்தால்) நான் நிச்சயமாக வழி தவறி விடுவேன்; மேலும் நான் நேர்வழி பெற்றவர்களிலும் இருக்கமாட்டேன்” என்றும் (நபியே!) நீர் கூறுவீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக: "அல்லாஹ்வைத் தவிர நீங்கள் பிரார்த்திப்பவற்றை நான் வணங்குவதற்கு நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன்.” (நபியே!) கூறுவீராக: “உங்கள் ஆசைகளை பின்பற்றமாட்டேன். அவ்வாறாயின், வழிதவறிவிடுவேன். இன்னும் நேர்வழி பெற்றவர்களில் நான் இருக்க மாட்டேன்."