குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௩௩
Qur'an Surah Al-An'am Verse 33
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَدْ نَعْلَمُ اِنَّهٗ لَيَحْزُنُكَ الَّذِيْ يَقُوْلُوْنَ فَاِنَّهُمْ لَا يُكَذِّبُوْنَكَ وَلٰكِنَّ الظّٰلِمِيْنَ بِاٰيٰتِ اللّٰهِ يَجْحَدُوْنَ (الأنعام : ٦)
- qad naʿlamu
- قَدْ نَعْلَمُ
- Indeed We know
- திட்டமாக/அறிவோம்
- innahu
- إِنَّهُۥ
- that it
- நிச்சயமாக செய்தி
- layaḥzunuka
- لَيَحْزُنُكَ
- grieves you
- கவலையளிக்கிறது/உமக்கு
- alladhī yaqūlūna
- ٱلَّذِى يَقُولُونَۖ
- what they say
- எது/கூறுவார்கள்
- fa-innahum
- فَإِنَّهُمْ
- And indeed, they
- நிச்சயமாக அவர்கள்
- lā yukadhibūnaka
- لَا يُكَذِّبُونَكَ
- (do) not deny you
- பொய்ப்பிப்பதில்லை/உம்மை
- walākinna
- وَلَٰكِنَّ
- but
- எனினும்
- l-ẓālimīna
- ٱلظَّٰلِمِينَ
- the wrongdoers
- அநியாயக்காரர்கள்
- biāyāti l-lahi
- بِـَٔايَٰتِ ٱللَّهِ
- the Verses (of) Allah
- அல்லாஹ்வின் வசனங்களை
- yajḥadūna
- يَجْحَدُونَ
- they reject
- மறுக்கின்றனர்
Transliteration:
Qad na'lamu innahoo layahzunukal lazee yaqooloona fa innahum laa yukazziboonaka wa laakinnaz zaalimeena bi Aayaatil laahi yajhadoon(QS. al-ʾAnʿām:33)
English Sahih International:
We know that you, [O Muhammad], are saddened by what they say. And indeed, they do not call you untruthful, but it is the verses of Allah that the wrongdoers reject. (QS. Al-An'am, Ayah ௩௩)
Abdul Hameed Baqavi:
(நபியே! உங்களைப் பொய்யரென) அவர்கள் கூறுவது, நிச்சயமாக உங்களுக்குக் கவலையைத் தருகின்றது என்பதை உறுதியாக நாம் அறிவோம். நிச்சயமாக அவர்கள் உங்களைப் பொய்யாக்கவில்லை. ஆனால், இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையே (பொய்யாக்கி) நிராகரிக்கின்றனர். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௩௩)
Jan Trust Foundation
(நபியே!) அவர்கள் (உம்மைப் பொய்யரெனக்) கூறுவது நிச்சயமாக உம்மைக் கவலையில் ஆழ்த்துகிறது என்பதை நாம் அறிவோம்; அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை; ஆனால் இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையல்லவா மறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) அவர்கள் கூறுவது, நிச்சயமாக உமக்கு கவலையளிக்கிறது என்பதை திட்டமாக அறிவோம். நிச்சயமாக அவர்கள் உம்மைப் பொய்ப்பிப்பதில்லை. எனினும், அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களை (பொய்ப்பித்து) மறுக்கின்றனர்.