Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௯

Qur'an Surah Al-An'am Verse 19

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ اَيُّ شَيْءٍ اَكْبَرُ شَهَادَةً ۗ قُلِ اللّٰهُ ۗشَهِيْدٌۢ بَيْنِيْ وَبَيْنَكُمْ ۗوَاُوْحِيَ اِلَيَّ هٰذَا الْقُرْاٰنُ لِاُنْذِرَكُمْ بِهٖ وَمَنْۢ بَلَغَ ۗ اَىِٕنَّكُمْ لَتَشْهَدُوْنَ اَنَّ مَعَ اللّٰهِ اٰلِهَةً اُخْرٰىۗ قُلْ لَّآ اَشْهَدُ ۚ قُلْ اِنَّمَا هُوَ اِلٰهٌ وَّاحِدٌ وَّاِنَّنِيْ بَرِيْۤءٌ مِّمَّا تُشْرِكُوْنَ (الأنعام : ٦)

qul
قُلْ
Say
கூறுவீராக
ayyu shayin
أَىُّ شَىْءٍ
"What thing
எந்த/ஒரு பொருள்
akbaru
أَكْبَرُ
(is) greatest
மிகப் பெரியது
shahādatan
شَهَٰدَةًۖ
(as) a testimony?"
சாட்சியால்
quli
قُلِ
Say
கூறுவீராக
l-lahu
ٱللَّهُۖ
"Allah
அல்லாஹ்
shahīdun
شَهِيدٌۢ
(is) Witness
சாட்சியாளன்
baynī
بَيْنِى
between me
எனக்கிடையில்
wabaynakum
وَبَيْنَكُمْۚ
and between you
இன்னும் உங்களுக்கிடையில்
waūḥiya
وَأُوحِىَ
and has been revealed
இன்னும் வஹீ அறிவிக்கப்பட்டது
ilayya
إِلَىَّ
to me
எனக்கு
hādhā l-qur'ānu
هَٰذَا ٱلْقُرْءَانُ
this [the] Quran
இந்த குர்ஆன்
li-undhirakum
لِأُنذِرَكُم
that I may warn you
நான் எச்சரிப்பதற்காக/உங்களை
bihi
بِهِۦ
with it
இதன்மூலம்
waman
وَمَنۢ
and whoever
இன்னும் எவர்
balagha
بَلَغَۚ
it reaches
அது சென்றடைந்தது
a-innakum
أَئِنَّكُمْ
Do you truly
நிச்சயமாக நீங்கள்
latashhadūna
لَتَشْهَدُونَ
testify
சாட்சி கூறுகிறீர்கள்
anna maʿa
أَنَّ مَعَ
that with
நிச்சயமாக
l-lahi
ٱللَّهِ
Allah
அல்லாஹ் உடன்
ālihatan
ءَالِهَةً
(there are) gods
வணங்கப்படும் கடவுள்கள்
ukh'rā
أُخْرَىٰۚ
other?"
வேறு
qul
قُل
Say
கூறுவீராக
lā ashhadu
لَّآ أَشْهَدُۚ
"Not" "(do) I testify"
சாட்சி கூறமாட்டேன்
qul
قُلْ
Say
கூறுவீராக
innamā huwa
إِنَّمَا هُوَ
"Only He
அவனெல்லாம்
ilāhun
إِلَٰهٌ
(is) God
வணங்கப்படும் ஒரு கடவுள்
wāḥidun
وَٰحِدٌ
One
ஒருவன்
wa-innanī
وَإِنَّنِى
and indeed, I am
நிச்சயமாக நான்
barīon
بَرِىٓءٌ
free
விலகியவன்
mimmā tush'rikūna
مِّمَّا تُشْرِكُونَ
of what you associate (with Him)
எவற்றிலிருந்து/இணைவைக்கிறீர்கள்

Transliteration:

Qul ayyu shai'in akbaru shahaadatan qulil laahu shaheedum bainee wa bainakum; wa oohiya ilaiya haazal Qur'aanu li unzirakum bihee wa mam balagh; a'innakum latashhadoona anna ma'al laahi aalihatan ukhraa; qul laaa ashhad; qul innamaa Huwa Ilaahunw Waahidunw wa innanee baree'um mimmaa tushrikoon (QS. al-ʾAnʿām:19)

English Sahih International:

Say, "What thing is greatest in testimony?" Say, "Allah is witness between me and you. And this Quran was revealed to me that I may warn you thereby and whomever it reaches. Do you [truly] testify that with Allah there are other deities?" Say, "I will not testify [with you]." Say, "Indeed, He is but one God, and indeed, I am free of what you associate [with Him]." (QS. Al-An'am, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

(நபியே!) "சாட்சிகளில் மிகப் பெரியது எது?" என நீங்கள் அவர்களைக்) கேளுங்கள். (அவர்களால் என்ன கூறமுடியும்? நீங்களே அவர்களை நோக்கி) "அல்லாஹ்வே! (பெரியவன். அவனே) எனக்கும் உங்களுக்கும் இடையில் சாட்சியாக(வும்) இருக்கின்றான். இந்தக் குர்ஆனைக் கொண்டு உங்களுக்கும், (அது) எட்டியவர்களுக்கும் நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவே இது எனக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறி, நிச்சயமாக வணக்கத்திற்குரிய மற்றெவரும் அல்லாஹ்வுடன் இருப்பதாக (உண்மையாகவே) நீங்கள் உறுதியாகக் கூறுவீர்களா?" என்றும் (அவர்களை) நீங்கள் கேளுங்கள். (இதற்கவர்கள் பதில் கூறுவதென்ன! "அவ்வாறு) நான் சாட்சி கூறமாட்டேன்!" என்று நீங்கள் கூறி "நிச்சயமாக வணக்கத்திற்குரியவன் அவன் ஒருவன்தான்; (அவனுக்கு) நீங்கள் இணைவைப்பதை மெய்யாகவே நான் வெறுக்கின்றேன்" என்றும் கூறுங்கள். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௯)

Jan Trust Foundation

(நபியே!) “சாட்சியத்தில் மிகவும் பெரியது எது?” எனக் கேளும்; “அல்லாஹ்வே எனக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்கின்றான்; இந்த குர்ஆன் எனக்கு வஹீயாக அருளப்பட்டுள்ளது. இதைக் கொண்டு உங்களையும், (இதை அடைந்தவர்களையும் நான் அச்சமூட்டி எச்சரிப்பதற்காக; நிச்சயமாக வணக்கத்திற்குரிய வேறு தெய்வங்களும் அல்லாஹ்வுடன் இருப்பதாக நீங்கள் சாட்சி கூறமுடியுமா? (என்று அவரிடம் கேட்பீராக) “இல்லை! நான் (அவ்வாறு) சாட்சி சொல்ல முடியாது என்றும் கூறுவீராக; வணக்கத்திற்குரியவன் நிச்சயமாக அவன் ஒருவன் தான்; அவனுக்கு நீங்கள் இணைவைப்பதிலிருந்து நான் நிச்சயமாக விலகிக் கொண்டவனே” என்று கூறிவிடும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக: “எந்த ஒரு பொருள் சாட்சியால் மிகப் பெரியது?” (நபியே!) கூறுவீராக: “அல்லாஹ் (சாட்சியால் மிகப் பெரியவன்)! (அவன்) எனக்கும் உங்களுக்குமிடையில் சாட்சியாளன். இந்த குர்ஆன் எனக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டது, இதன் மூலம் உங்களையும், அது சென்றடைந்தவரையும் நான் எச்சரிப்பதற்காக. நிச்சயமாக நீங்கள், அல்லாஹ்வுடன் வணங்கப்படும் வேறு கடவுள்கள் இருப்பதாக சாட்சி கூறுகிறீர்களா?” (நபியே!) கூறுவீராக: “(நான்) சாட்சி கூறமாட்டேன்!” (நபியே நீர்) கூறுவீராக: “அவனெல்லாம் வணங்கப்படும் ஒரே ஒரு கடவுள்தான். நீங்கள் இணைவைப்பவற்றிலிருந்து நிச்சயமாக நான் விலகியவன்.”