Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௫௫

Qur'an Surah Al-An'am Verse 155

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௫௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَهٰذَا كِتٰبٌ اَنْزَلْنٰهُ مُبٰرَكٌ فَاتَّبِعُوْهُ وَاتَّقُوْا لَعَلَّكُمْ تُرْحَمُوْنَۙ (الأنعام : ٦)

wahādhā
وَهَٰذَا
And this
இது
kitābun
كِتَٰبٌ
(is) a Book
வேதம்
anzalnāhu
أَنزَلْنَٰهُ
We have revealed it -
நாமே இறக்கினோம்/இதை
mubārakun
مُبَارَكٌ
blessed
அருள்வளமிக்கது
fa-ittabiʿūhu
فَٱتَّبِعُوهُ
so follow it
ஆகவே, பின்பற்றுங்கள்/இதை
wa-ittaqū
وَٱتَّقُوا۟
and fear (Allah)
இன்னும் அஞ்சுங்கள்
laʿallakum tur'ḥamūna
لَعَلَّكُمْ تُرْحَمُونَ
so that you may receive mercy
நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக

Transliteration:

Wa haazaa Kitaabun anzalnaahu Mubaarakun fattabi'oohu wattaqoo la'al lakum urhamoon (QS. al-ʾAnʿām:155)

English Sahih International:

And this [Quran] is a Book We have revealed [which is] blessed, so follow it and fear Allah that you may receive mercy. (QS. Al-An'am, Ayah ௧௫௫)

Abdul Hameed Baqavi:

(மனிதர்களே!) இதுவும் வேத நூலாகும். இதனை நாமே இறக்கி வைத்தோம். (இது) மிக்க பாக்கியமுடையது. ஆகவே, இதனையே நீங்கள் பின்பற்றுங்கள். அன்றி (அவனுக்குப்) பயந்து (பாவத்திலிருந்து விலகிக்) கொள்ளுங்கள். அதனால் அவனது அருளுக்குள்ளாவீர்கள். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௫௫)

Jan Trust Foundation

(மனிதர்களே!) இதுவும் வேதமாகும்; இதனை நாமே இறக்கிவைத்துள்ளோம் - (இது) மிக்க பாக்கியம் வாய்ந்தது; ஆகவே இதனைப் பின்பற்றுங்கள் - இன்னும் (அவனை) அஞ்சி (பாவத்தை விட்டு விலகி)க் கொள்ளுங்கள். நீங்கள் (இறைவனால்) கிருபை செய்யப்படுவீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(மனிதர்களே!) இது அருள்வளமிக்க வேதமாகும். இதை நாமே இறக்கினோம். ஆகவே, நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக இதைப் பின்பற்றுங்கள்; (அல்லாஹ்வை) அஞ்சுங்கள்.