Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௫௪

Qur'an Surah Al-An'am Verse 154

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ تَمَامًا عَلَى الَّذِيْٓ اَحْسَنَ وَتَفْصِيْلًا لِّكُلِّ شَيْءٍ وَّهُدًى وَّرَحْمَةً لَّعَلَّهُمْ بِلِقَاۤءِ رَبِّهِمْ يُؤْمِنُوْنَ ࣖ (الأنعام : ٦)

thumma
ثُمَّ
Moreover
பிறகு
ātaynā
ءَاتَيْنَا
We gave
கொடுத்தோம்
mūsā
مُوسَى
Musa
மூஸாவிற்கு
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Book
வேதத்தை
tamāman
تَمَامًا
completing (Our Favor)
நிறைவாக
ʿalā alladhī
عَلَى ٱلَّذِىٓ
on the one who
மீது/எவர்
aḥsana
أَحْسَنَ
did good
நல்லறம் புரிந்தார்
watafṣīlan
وَتَفْصِيلًا
and an explanation
இன்னும் விவரிப்பதற்காக
likulli shayin
لِّكُلِّ شَىْءٍ
of every thing
எல்லாவற்றையும்
wahudan
وَهُدًى
and a guidance
இன்னும் நேர்வழியாக
waraḥmatan
وَرَحْمَةً
and mercy
இன்னும் கருணையாக
laʿallahum
لَّعَلَّهُم
so that they may -
ஆவதற்காக/அவர்கள்
biliqāi
بِلِقَآءِ
in (the) meeting
சந்திப்பை
rabbihim
رَبِّهِمْ
(with) their Lord
தங்கள் இறைவனின்
yu'minūna
يُؤْمِنُونَ
believe
நம்பிக்கை கொள்வார்கள்

Transliteration:

Summa aatainaa Moosal Kitaaba tammaaman 'alal lazeee ahsana wa tafseelal likulli shai'inw wa hudanw wa rahmatal la'allahum biliqaaa'i Rabbihim yu'minoon (QS. al-ʾAnʿām:154)

English Sahih International:

Then We gave Moses the Scripture, making complete [Our favor] upon the one who did good [i.e., Moses] and as a detailed explanation of all things and as guidance and mercy that perhaps in the meeting with their Lord they would believe. (QS. Al-An'am, Ayah ௧௫௪)

Abdul Hameed Baqavi:

(தங்களின் செயல்களையும் பண்புகளையும்) அழகுபடுத்திக் கொண்டவர் மீது (நம்முடைய அருட்கொடையை) முழுமைபடுத்தி வைப்பதற்காக இதற்கு பிறகும் நாம் மூஸாவுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்தோம். அதில் ஒவ்வொரு விஷயமும் தெளிவாக விவரிக்கப் பட்டுள்ளது. அன்றி, (அது) நேரான வழியாகவும் (இறைவனின்) அருளாகவும் இருக்கிறது. அவர்கள் தங்கள் இறைவனை சந்திப்போமென்று உறுதி கொள்ளும் பொருட்டே (அதனைக் கொடுத்தோம்.) (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௫௪)

Jan Trust Foundation

நன்மை செய்பவர்களின் மீது (நமது அருளைப்) பூர்த்தியாக்கும் பொருட்டு பின்னர் மூஸாவுக்கு நாம் ஒரு வேதத்தைக் கொடுத்தோம் - அதில் ஒவ்வொரு விஷயமும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது; அது நேர் வழியாகவும் அருளாகவும் இருக்கிறது. அவர்கள் தங்கள் இறைவனை சந்திப்போம் என்று உறுதி கொள்ளும் பொருட்டே (அதைக் கொடுத்தோம்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு, நல்லறம் புரிந்தவர் மீது (அருள்) நிறைவாகுவதற்காகவும் எல்லாவற்றையும் விவரிப்பதற்காகவும் நேர்வழியாகவும், கருணையாகவும் மூஸாவிற்கு வேதத்தைக் கொடுத்தோம் அவர்கள் தங்கள் இறைவனின் சந்திப்பை நம்பிக்கை கொள்வதற்காக.