Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௫௩

Qur'an Surah Al-An'am Verse 153

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَنَّ هٰذَا صِرَاطِيْ مُسْتَقِيْمًا فَاتَّبِعُوْهُ ۚوَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيْلِهٖ ۗذٰلِكُمْ وَصّٰىكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ (الأنعام : ٦)

wa-anna
وَأَنَّ
And that
நிச்சயமாக
hādhā
هَٰذَا
this
இது
ṣirāṭī
صِرَٰطِى
(is) My path
என் பாதை
mus'taqīman
مُسْتَقِيمًا
straight
நேரானது
fa-ittabiʿūhu
فَٱتَّبِعُوهُۖ
so follow it
அதைப்பின்பற்றுங்கள்
walā tattabiʿū
وَلَا تَتَّبِعُوا۟
And (do) not follow
பின்பற்றாதீர்கள்
l-subula
ٱلسُّبُلَ
the (other) paths
வழிகளை
fatafarraqa
فَتَفَرَّقَ
then they will separate
அவை பிரித்துவிடும்
bikum
بِكُمْ
you
உங்களை
ʿan sabīlihi
عَن سَبِيلِهِۦۚ
from His path
அவனுடைய வழியிலிருந்து
dhālikum
ذَٰلِكُمْ
That
இவை
waṣṣākum bihi
وَصَّىٰكُم بِهِۦ
(He) has enjoined on you [with it]
உபதேசிக்கிறான் /உங்களுக்கு/இவற்றைக் கொண்டு
laʿallakum tattaqūna
لَعَلَّكُمْ تَتَّقُونَ
so that you may become righteous
நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக

Transliteration:

Wa annna haazaa Siraatee mustaqeeman fattabi'oohu wa laa tattabi'us subula fatafarraqa bikum 'an sabeelih; zaalikum wassaakum bihee la'allakum tattaqoon (QS. al-ʾAnʿām:153)

English Sahih International:

And, [moreover], this is My path, which is straight, so follow it; and do not follow [other] ways, for you will be separated from His way. This has He instructed you that you may become righteous. (QS. Al-An'am, Ayah ௧௫௩)

Abdul Hameed Baqavi:

"நிச்சயமாக இதுதான் என்னுடைய நேரான வழியாகும். அதனையே நீங்கள் பின்பற்றுங்கள்; மற்ற வழிகளைப் பின்பற்றாதீர்கள். அவை அல்லாஹ்வுடைய வழியிலிருந்து உங்களைப் பிரித்துவிடும். நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆவதற்காக இறைவன் இவற்றை உங்களுக்கு உபதேசிக்கின்றான்" (என்று கூறுங்கள்). (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௫௩)

Jan Trust Foundation

நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

"நிச்சயமாக இது என் நேரான பாதையாகும். அதைப் பின்பற்றுங்கள்; (மற்ற) வழிகளைப் பின்பற்றாதீர்கள். அவை அவனுடைய வழியிலிருந்து உங்களைப் பிரித்துவிடும். நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக (அவன்) இவற்றைக் கொண்டு உங்களுக்கு உபதேசிக்கிறான்" (என்று கூறுவீராக).