Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௫௨

Qur'an Surah Al-An'am Verse 152

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا تَقْرَبُوْا مَالَ الْيَتِيْمِ اِلَّا بِالَّتِيْ هِيَ اَحْسَنُ حَتّٰى يَبْلُغَ اَشُدَّهٗ ۚوَاَوْفُوا الْكَيْلَ وَالْمِيْزَانَ بِالْقِسْطِۚ لَا نُكَلِّفُ نَفْسًا اِلَّا وُسْعَهَاۚ وَاِذَا قُلْتُمْ فَاعْدِلُوْا وَلَوْ كَانَ ذَا قُرْبٰىۚ وَبِعَهْدِ اللّٰهِ اَوْفُوْاۗ ذٰلِكُمْ وَصّٰىكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَۙ (الأنعام : ٦)

walā taqrabū
وَلَا تَقْرَبُوا۟
And (do) not go near
நெருங்காதீர்கள்
māla
مَالَ
wealth
செல்வத்தை
l-yatīmi
ٱلْيَتِيمِ
(of) the orphans
அநாதையின்
illā
إِلَّا
except
தவிர
bi-allatī hiya
بِٱلَّتِى هِىَ
with that which
எதைக்கொண்டு/அது
aḥsanu
أَحْسَنُ
(is) best
மிக அழகிய வழி
ḥattā
حَتَّىٰ
until
வரை
yablugha
يَبْلُغَ
he reaches
அவர் அடைவார்
ashuddahu
أَشُدَّهُۥۖ
his maturity
அவருடைய பருவத்தை
wa-awfū
وَأَوْفُوا۟
And give full
இன்னும் முழுமைப்படுத்துங்கள்
l-kayla
ٱلْكَيْلَ
[the] measure
அளவையை
wal-mīzāna
وَٱلْمِيزَانَ
and the weight
இன்னும் நிறுவையை
bil-qis'ṭi
بِٱلْقِسْطِۖ
with justice
நீதமாக
lā nukallifu
لَا نُكَلِّفُ
Not We burden
நாம் சிரமம் (சட்டம்) கொடுப்பதேயில்லை
nafsan
نَفْسًا
any soul
ஓர் ஆன்மாவிற்கு
illā wus'ʿahā
إِلَّا وُسْعَهَاۖ
except (to) its capacity
தவிர/அதன் சக்திக்கு உட்பட்டே தவிர
wa-idhā qul'tum
وَإِذَا قُلْتُمْ
And when you speak
இன்னும் நீங்கள் கூறினால்
fa-iʿ'dilū
فَٱعْدِلُوا۟
then be just
நீதமாக கூறுங்கள்
walaw kāna
وَلَوْ كَانَ
even if he is
அவர் இருந்தாலும்
dhā qur'bā
ذَا قُرْبَىٰۖ
(one of) a near relative
உறவினராக
wabiʿahdi
وَبِعَهْدِ
And (the) Covenant
இன்னும் வாக்குறுதியை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
awfū
أَوْفُوا۟ۚ
fulfil
நிறைவேற்றுங்கள்
dhālikum waṣṣākum
ذَٰلِكُمْ وَصَّىٰكُم
That (He) has enjoined on you
இவை/உபதேசித்தான்/உங்களுக்கு
bihi
بِهِۦ
with it
இவற்றைக் கொண்டு
laʿallakum tadhakkarūna
لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
so that you may remember
நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக

Transliteration:

Wa laa taqraboo maalal yateemi illaa billatee hiyaa ahsanu hattaa yablugha ashuddahoo wa awful kaila walmeezaana bilqisti laa nukallifu nafsan illaa wus'ahaa wa izaa qultum fa'diloo wa law kaana zaa qurbaa wa bi 'ahdil laahi awfoo; zaalikum wassaakum bihee la'allakum tazakkarron (QS. al-ʾAnʿām:152)

English Sahih International:

And do not approach the orphan's property except in a way that is best [i.e., intending improvement] until he reaches maturity. And give full measure and weight in justice. We do not charge any soul except [with that within] its capacity. And when you speak [i.e., testify], be just, even if [it concerns] a near relative. And the covenant of Allah fulfill. This has He instructed you that you may remember. (QS. Al-An'am, Ayah ௧௫௨)

Abdul Hameed Baqavi:

"அநாதைகளின் பொருளை அவர்கள் பருவமடையும் வரையில் நியாயமான முறையிலன்றி தொடாதீர்கள். அளவை (சரியான அளவுகொண்டு) முழுமையாக அளங்கள். எடையை நீதமாக நிறுத்துங்கள். யாதொரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நாம் நிர்ப்பந்திப்பதேயில்லை. நீங்கள் எதைக் கூறியபோதிலும் (அதனால் பாதிக்கப்படுபவர்கள்) உங்கள் உறவினர்கள் ஆயினும் (சரியே!) நீதத்தையே கூறுங்கள். நீங்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுங்கள். நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவே இவற்றை அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௫௨)

Jan Trust Foundation

அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்; அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள்; நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை; நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்; அல்லாஹ்வுக்கு (நீங்கள் கொடுத்த) உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைவு (கூர்ந்து நடந்து கொள்ளும் பொருட்டே அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அநாதையின் செல்வத்தை அவர் அவருடைய பருவத்தை அடையும் வரை மிக அழகிய வழியில் தவிர நெருங்காதீர்கள். அளவையையும் நிறுவையையும் நீதமாக முழுமைப்படுத்துங்கள். ஓர் ஆன்மாவிற்கு அதன் சக்திக்கு உட்பட்டே தவிர நாம் சிரமம் கொடுப்பதேயில்லை. நீங்கள் (தீர்ப்பு) கூறினால் (அதனால் பாதிக்கப்படுபவர்) உறவினராக இருந்தாலும் நீதமாக கூறுங்கள். அல்லாஹ்வின் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். இவை, நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகவே இவற்றைக் கொண்டு (அல்லாஹ்) உங்களுக்கு உபதேசித்தான்.