குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௪௩
Qur'an Surah Al-An'am Verse 143
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثَمٰنِيَةَ اَزْوَاجٍۚ مِنَ الضَّأْنِ اثْنَيْنِ وَمِنَ الْمَعْزِ اثْنَيْنِۗ قُلْ ءٰۤالذَّكَرَيْنِ حَرَّمَ اَمِ الْاُنْثَيَيْنِ اَمَّا اشْتَمَلَتْ عَلَيْهِ اَرْحَامُ الْاُنْثَيَيْنِۗ نَبِّئُوْنِيْ بِعِلْمٍ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ (الأنعام : ٦)
- thamāniyata azwājin
- ثَمَٰنِيَةَ أَزْوَٰجٍۖ
- Eight pairs
- எட்டு ஜோடிகளை
- mina l-ḍani
- مِّنَ ٱلضَّأْنِ
- of the sheep
- செம்மறி ஆட்டில்
- ith'nayni
- ٱثْنَيْنِ
- two
- இரண்டை
- wamina l-maʿzi
- وَمِنَ ٱلْمَعْزِ
- and of the goats
- இன்னும் வெள்ளாட்டில்
- ith'nayni
- ٱثْنَيْنِۗ
- two
- இரண்டை
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக
- āldhakarayni
- ءَآلذَّكَرَيْنِ
- "(Are) the two males
- இரு ஆண்களையா?
- ḥarrama
- حَرَّمَ
- He has forbidden
- தடைசெய்தான்
- ami
- أَمِ
- or
- அல்லது
- l-unthayayni
- ٱلْأُنثَيَيْنِ
- the two females
- இரு பெண்களையா
- ammā
- أَمَّا
- or what
- அல்லது/எவை
- ish'tamalat
- ٱشْتَمَلَتْ
- contains
- சுமந்தன
- ʿalayhi
- عَلَيْهِ
- [in it]
- அவற்றை
- arḥāmu
- أَرْحَامُ
- (the) wombs
- கர்ப்பங்கள்
- l-unthayayni
- ٱلْأُنثَيَيْنِۖ
- (of) the two females?
- இரு பெண்கள்
- nabbiūnī
- نَبِّـُٔونِى
- Inform me
- அறிவியுங்கள்/எனக்கு
- biʿil'min
- بِعِلْمٍ
- with knowledge
- கல்வியுடன்
- in kuntum
- إِن كُنتُمْ
- if you are
- நீங்கள் இருந்தால்
- ṣādiqīna
- صَٰدِقِينَ
- truthful"
- உண்மையாளர்களாக
Transliteration:
Samaaniyata azwaaj minad daanis naini wa minal ma'zis nain; qul 'aazzaka raini harrama amil unsaiyayni ammash tamalat 'alaihi arhaamul unsayaini nabbi 'oonee bi'ilmin in kuntum saadiqeen(QS. al-ʾAnʿām:143)
English Sahih International:
[They are] eight mates – of the sheep, two and of the goats, two. Say, "Is it the two males He has forbidden or the two females or that which the wombs of the two females contain? Inform me with knowledge, if you should be truthful." (QS. Al-An'am, Ayah ௧௪௩)
Abdul Hameed Baqavi:
(நபியே! அந்த மூடர்களை நோக்கி நீங்கள் கேளுங்கள்: "புசிக்கக் கூடிய ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில்) எட்டு வகைகள் இருக்கின்றன. (அவையாவன:) செம்மறி ஆட்டில் (ஆண், பெண்) இருவகை; வெள்ளாட்டில் (ஆண், பெண்) இரு வகை (உண்டு.) இவ்விரு வகை ஆண்களையோ அல்லது பெண்களையோ அல்லது இவ்விரு வகைகளிலுள்ள பெண்களின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (இறைவன்) தடுத்திருக்கின்றான்? நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் ஆதாரத்துடன் இதனை நீங்கள் எனக்கு அறிவியுங்கள். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௪௩)
Jan Trust Foundation
(நபியே! அம்மக்களிடம்) “கால்நடைகளில் எட்டு வகைகள் உள்ளன - செம்மறி ஆட்டில் (ஆண், பெண்) இரு வகை வெள்ளாட்டில் (ஆண், பெண்) இரு வகை அவன் (அல்லாஹ்) ஆண் இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது பெட்டை இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது அவ்விரு வகைகளிலுமுள்ள பெண்களின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (அவன் தடுத்திருக்கிறான்?) நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால், (இதனை) ஆதாரத்துடன் எனக்கு அறிவியுங்கள்” என்று கேட்பீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே! கால்நடைகளில்) எட்டு ஜோடிகளை (உற்பத்தி செய்தான்). (அவை:) செம்மறி ஆட்டில் (ஆண், பெண்) இரண்டை; வெள்ளாட்டில் (ஆண், பெண்) இரண்டை (படைத்தான்). இ(வ்வி)ரு (வகை) ஆண்களையா அல்லது இ(வ்வி)ரு (வகை) பெண்களையா அல்லது இ(வ்வி)ரு (வகை) பெண்களின் கர்ப்பங்கள் சுமந்தவற்றையா (அல்லாஹ்) தடை செய்தான்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் கல்வியுடன் (கூடிய ஆதாரத்தை) எனக்கு அறிவியுங்கள்.