Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௩௯

Qur'an Surah Al-An'am Verse 139

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالُوْا مَا فِيْ بُطُوْنِ هٰذِهِ الْاَنْعَامِ خَالِصَةٌ لِّذُكُوْرِنَا وَمُحَرَّمٌ عَلٰٓى اَزْوَاجِنَاۚ وَاِنْ يَّكُنْ مَّيْتَةً فَهُمْ فِيْهِ شُرَكَاۤءُ ۗسَيَجْزِيْهِمْ وَصْفَهُمْۗ اِنَّهٗ حَكِيْمٌ عَلِيْمٌ (الأنعام : ٦)

waqālū
وَقَالُوا۟
And they say
இன்னும் கூறினர்
mā fī buṭūni
مَا فِى بُطُونِ
"What (is) in (the) wombs
எவை/வயிறுகளில்
hādhihi l-anʿāmi
هَٰذِهِ ٱلْأَنْعَٰمِ
(of) these cattle
இந்த கால்நடைகளின்
khāliṣatun
خَالِصَةٌ
(is) exclusively
தூயது, மட்டும்
lidhukūrinā
لِّذُكُورِنَا
for our males
எங்கள் ஆண்களுக்கு உரியது
wamuḥarramun
وَمُحَرَّمٌ
and forbidden
இன்னும் தடுக்கப்பட்டது
ʿalā azwājinā
عَلَىٰٓ أَزْوَٰجِنَاۖ
on our spouses
எங்கள்பெண்களுக்கு
wa-in yakun
وَإِن يَكُن
But if is
அது இருந்தால்
maytatan
مَّيْتَةً
(born) dead
செத்ததாக
fahum fīhi
فَهُمْ فِيهِ
then they (all) in it"
அவர்களும்/அதில்
shurakāu
شُرَكَآءُۚ
(are) partners"
பங்காளிகள்
sayajzīhim
سَيَجْزِيهِمْ
He will recompense them
கூலி கொடுப்பான்/அவர்களுக்கு
waṣfahum
وَصْفَهُمْۚ
(for) their attribution
அவர்களுடைய வர்ணிப்பிற்கு
innahu
إِنَّهُۥ
Indeed, He
நிச்சயமாக அவன்
ḥakīmun
حَكِيمٌ
(is) All-Wise
ஞானவான்
ʿalīmun
عَلِيمٌ
All-Knowing
நன்கறிந்தவன்

Transliteration:

Wa qaaloo maa fee butooni haazihil an'aami khaalisatul lizukoorinaa wa muharramun 'alaaa azwaajinaa wa iny yakum maitatan fahum feehi shurakaaa'; sa yajzeehim wasfahum; innahoo Hakeemun 'Aleem (QS. al-ʾAnʿām:139)

English Sahih International:

And they say, "What is in the bellies of these animals is exclusively for our males and forbidden to our females. But if it is [born] dead, then all of them have shares therein." He will punish them for their description. Indeed, He is Wise and Knowing. (QS. Al-An'am, Ayah ௧௩௯)

Abdul Hameed Baqavi:

அன்றி, அவர்கள் (வேறு சிலவற்றைக் குறிப்பிட்டு) "இந்த ஆடு, மாடு, ஒட்டகங்களின் வயிற்றிலிருப்பவை எங்களுடைய ஆண்களுக்கு (மட்டும்) சொந்தமானவை. எங்களுடைய பெண்களுக்கு அவை தடுக்கப்பட்டு இருக்கின்றன. அவை செத்துப் பிறந்தால் அவற்றில் அவர்களுக்கும் பங்குண்டு" (அப்போது பெண்களும் புசிக்கலாம்.) என்றும் கூறுகின்றனர். ஆகவே, அவர்களுடைய இக்கூற்றிற்குரிய தண்டனையை (அல்லாஹ்) அவர் களுக்குக் கொடுத்தே தீருவான். நிச்சயமாக அவன் மிக்க ஞானமுடையவனாகவும், (அனைவரையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௩௯)

Jan Trust Foundation

மேலும் அவர்கள், “இந்தக் கால் நடைகளின் வயிற்றில் இருக்கும் குட்டிகள் எங்கள் ஆண்களுக்கு மட்டுமே சொந்தம். அவை எங்கள் பெண்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளன - அவை செத்துப் பிறந்தால், அவற்றில் அவர்களுக்கும் பங்கு உண்டு” என்றும் கூறுகிறார்கள்; அவர்களுடைய (இந்தப் பொய்யான) கூற்றுக்கு அவன் தக்க கூலி கொடுப்பான் - நிச்சயமாக அவன் பூரண ஞானமுடையோனும், (யாவற்றையும்) அறிந்தவனுமாக இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

"இந்த கால்நடைகளின் வயிறுகளில் இருப்பது எங்கள் ஆண்களுக்கு மட்டும் உரியது. (அதை அவர்கள் புசிக்கலாம். அது) எங்கள் பெண்களுக்கு தடுக்கப்பட்டது. அது செத்ததாக இருந்தால் அதில் அவர்களும் பங்காளிகள்" என்று கூறினர். அவர்களுடைய (இவ்)வர்ணிப்பிற்கு அவன் அவர்களுக்கு(த் தகுந்தக்)கூலி கொடுப்பான். நிச்சயமாக அவன் ஞானவான், நன்கறிந்தவன்.