குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௨௧
Qur'an Surah Al-An'am Verse 121
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَا تَأْكُلُوْا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللّٰهِ عَلَيْهِ وَاِنَّهٗ لَفِسْقٌۗ وَاِنَّ الشَّيٰطِيْنَ لَيُوْحُوْنَ اِلٰٓى اَوْلِيَاۤىِٕهِمْ لِيُجَادِلُوْكُمْ ۚوَاِنْ اَطَعْتُمُوْهُمْ اِنَّكُمْ لَمُشْرِكُوْنَ ࣖ (الأنعام : ٦)
- walā takulū
- وَلَا تَأْكُلُوا۟
- And (do) not eat
- புசிக்காதீர்கள்
- mimmā
- مِمَّا
- of that
- எதிலிருந்து
- lam yudh'kari
- لَمْ يُذْكَرِ
- not has been mentioned
- கூறப்படவில்லை
- us'mu
- ٱسْمُ
- (the) name
- பெயர்
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வுடைய
- ʿalayhi
- عَلَيْهِ
- on it
- அதன் மீது
- wa-innahu
- وَإِنَّهُۥ
- and indeed, it (is)
- நிச்சயமாக அது
- lafis'qun
- لَفِسْقٌۗ
- grave disobedience
- பாவம்தான்
- wa-inna
- وَإِنَّ
- And indeed
- நிச்சயமாக
- l-shayāṭīna
- ٱلشَّيَٰطِينَ
- the devils
- ஷைத்தான்கள்
- layūḥūna
- لَيُوحُونَ
- inspire
- அறிவிக்கின்றனர்
- ilā awliyāihim
- إِلَىٰٓ أَوْلِيَآئِهِمْ
- to their friends
- தங்கள் நண்பர்களுக்கு
- liyujādilūkum
- لِيُجَٰدِلُوكُمْۖ
- so that they dispute with you
- அவர்கள் தர்க்கிப்பதற்காக/உங்களுடன்
- wa-in aṭaʿtumūhum
- وَإِنْ أَطَعْتُمُوهُمْ
- and if you obey them
- நீங்கள் கீழ்ப்படிந்தால்/அவர்களுக்கு
- innakum lamush'rikūna
- إِنَّكُمْ لَمُشْرِكُونَ
- indeed, you (would) be the polytheists
- நிச்சயமாக நீங்கள்/இணைவைப்பவர்கள்தான்
Transliteration:
Wa laa taakuloo mimaa lam yuzkaris mullaahi 'alaihi wa innahoo lafisq; wa innash Shayaateena la yoohoona ilaaa awliyaaa'ihim liyujaadilookum wa in ata'tumoohum innnakum lamushrikoon(QS. al-ʾAnʿām:121)
English Sahih International:
And do not eat of that upon which the name of Allah has not been mentioned, for indeed, it is grave disobedience. And indeed do the devils inspire their allies [among men] to dispute with you. And if you were to obey them, indeed, you would be associators [of others with Him]. (QS. Al-An'am, Ayah ௧௨௧)
Abdul Hameed Baqavi:
(நம்பிக்கையாளர்களே! அறுக்கும்போது) அல்லாஹ்வுடைய பெயர் கூறப்படாதவற்றை நீங்கள் புசிக்காதீர்கள். நிச்சயமாக அது பெரும் பாவமாகும். (இதில்) உங்களுடன் தர்க்கிக்குமாறு நிச்சயமாக ஷைத்தான்கள் தங்களுடைய நண்பர்களைத் தூண்டுகின்றனர். நீங்கள் அவர்களுக்கு வழிப்பட்டால் (கீழ்படிந்தால்) நிச்சயமாக நீங்கள் (அவர்களைப் போல்) இணைவைத்து வணங்குபவர்கள்தான்! (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௨௧)
Jan Trust Foundation
எதன்மீது. (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதைப் புசியாதீர்கள் - நிச்சயமாக அது பாவமாகும்; நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களை உங்களோடு (வீண்) தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள் - நீங்கள் அவர்களுக்கு வழிபட்டால், நிச்சயமாக நீங்களும் முஷ்ரிக்குகள் (இணைவைப்போர்) ஆவீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வுடைய பெயர் கூறப்படாதவற்றிலிருந்து புசிக்காதீர்கள். நிச்சயமாக அது பாவம்தான். உங்களுடன் அவர்கள் தர்க்கிப்பதற்காக நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களுக்கு அறிவிக்கின்றனர். நீங்கள் அவர்களுக்கு கீழ்ப்படிந்தால் நிச்சயமாக நீங்கள் இணை வைப்பவர்கள்தான்!