குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௧௯
Qur'an Surah Al-An'am Verse 119
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَا لَكُمْ اَلَّا تَأْكُلُوْا مِمَّا ذُكِرَ اسْمُ اللّٰهِ عَلَيْهِ وَقَدْ فَصَّلَ لَكُمْ مَّا حَرَّمَ عَلَيْكُمْ اِلَّا مَا اضْطُرِرْتُمْ اِلَيْهِ ۗوَاِنَّ كَثِيرًا لَّيُضِلُّوْنَ بِاَهْوَاۤىِٕهِمْ بِغَيْرِ عِلْمٍ ۗاِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِالْمُعْتَدِيْنَ (الأنعام : ٦)
- wamā lakum
- وَمَا لَكُمْ
- And what for you
- உங்களுக்கு என்ன
- allā takulū
- أَلَّا تَأْكُلُوا۟
- that not you eat
- நீங்கள் புசிக்காதிருக்க
- mimmā dhukira
- مِمَّا ذُكِرَ
- of what has been mentioned
- கூறப்பட்டதிலிருந்து
- us'mu
- ٱسْمُ
- (the) name
- பெயர்
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வுடைய
- ʿalayhi
- عَلَيْهِ
- on it
- அதன் மீது
- waqad faṣṣala
- وَقَدْ فَصَّلَ
- when indeed He (has) explained in detail
- விவரித்து விட்டான்
- lakum
- لَكُم
- to you
- உங்களுக்கு
- mā ḥarrama
- مَّا حَرَّمَ
- what He (has) forbidden
- எவற்றை/தடுத்தான்
- ʿalaykum
- عَلَيْكُمْ
- to you
- உங்களுக்கு
- illā
- إِلَّا
- except
- தவிர
- mā uḍ'ṭurir'tum
- مَا ٱضْطُرِرْتُمْ
- what you are compelled
- எது/ நிர்பந்திக்கப்பட்டீர்கள்
- ilayhi
- إِلَيْهِۗ
- to it
- அதன் பக்கம்
- wa-inna
- وَإِنَّ
- And indeed
- நிச்சயமாக
- kathīran
- كَثِيرًا
- many
- அதிகமானோர்
- layuḍillūna
- لَّيُضِلُّونَ
- surely lead astray
- வழி கெடுக்கின்றனர்
- bi-ahwāihim
- بِأَهْوَآئِهِم
- by their (vain) desires
- தங்கள் ஆசைகளைக் கொண்டு
- bighayri ʿil'min
- بِغَيْرِ عِلْمٍۗ
- without knowledge
- கல்வியின்றி
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- rabbaka
- رَبَّكَ
- your Lord
- உம் இறைவன்
- huwa
- هُوَ
- He
- அவன்
- aʿlamu
- أَعْلَمُ
- (is) most knowing
- மிக அறிபவன்
- bil-muʿ'tadīna
- بِٱلْمُعْتَدِينَ
- of the transgressors
- வரம்பு மீறிகளை
Transliteration:
Wa maa lakum allaa taakuloo mimmaa zukirasmul laahi 'alaihi wa qad fassala lakum maa harrama 'alaikum illaa mad turirtum ilaih; wa inna kaseeral la yudilloona bi ahwaaa'ihim bighairi 'ilm; inna Rabbaka Huwa a'lamu bilmu'tadeen(QS. al-ʾAnʿām:119)
English Sahih International:
And why should you not eat of that upon which the name of Allah has been mentioned while He has explained in detail to you what He has forbidden you, excepting that to which you are compelled. And indeed do many lead [others] astray through their [own] inclinations without knowledge. Indeed, your Lord – He is most knowing of the transgressors. (QS. Al-An'am, Ayah ௧௧௯)
Abdul Hameed Baqavi:
(உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவைகளில் அறுக்கும் பொழுது) அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டவற்றை நீங்கள் புசிக்காதிருக்க உங்களுக்கு என்ன (தடை)? நீங்கள் நிர்பந்திக்கப் பட்டாலன்றி (புசிக்க) உங்களுக்குத் தடுக்கப்பட்டவை எவையென அவன் உங்களுக்கு விவரித்துக் கூறியே இருக்கின்றான். (அவற்றைத் தவிர உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட அனைத்தையும் நீங்கள் புசிக்கலாம்.) எனினும், பெரும்பான்மையினர் அறியாமையின் காரணமாக தங்கள் இஷ்டப்படி எல்லாம் (மக்களை) வழி கெடுக்கின்றனர். (நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன் வரம்பு மீறுபவர்களை நன்கறிவான். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௧௯)
Jan Trust Foundation
அல்லாஹ்வின் பெயர் கூறி (உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில்) அறுக்கப்பட்டதை நீங்கள் சாப்பிடாமலிருக்க என்ன (தடை) இருக்கிறது? நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றி சாப்பிட உங்களுக்கு விலக்கப்பட்டவை எவை என்பதை அல்லாஹ் விவரித்துக் கூறியுள்ளான் - ஆனால் பெரும்பாலோர், அறியாமையின் காரணமாகத் தங்களுடைய மன இச்சைகளின் பிரகாரம் (மனிதர்களை) வழி கெடுக்கிறார்கள்; வரம்பு மீறிச்செல்பவர்களை நிச்சயமாக உம் இறைவன் நன்கு அறிகிறான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அறுக்கும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதிலிருந்து நீங்கள் புசிக்காதிருக்க உங்களுக்கு என்ன ஏற்பட்டது? அவன் உங்களுக்கு தடுத்தவற்றை உங்களுக்கு விவரித்துவிட்டான் (ஆனால் தடுக்கப்பட்ட) அதன் பக்கம் நீங்கள் நிர்பந்திக்கப்பட்டால் தவிர (அப்போது அது ஆகுமாகிவிடும்). நிச்சயமாக அதிகமானோர் கல்வியின்றி தங்கள் ஆசைகளைக் கொண்டு (மக்களை) வழி கெடுக்கின்றனர். (நபியே!) நிச்சயமாக உம் இறைவன் வரம்பு மீறிகளை மிக அறிபவன்.