Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௧௬

Qur'an Surah Al-An'am Verse 116

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنْ تُطِعْ اَكْثَرَ مَنْ فِى الْاَرْضِ يُضِلُّوْكَ عَنْ سَبِيْلِ اللّٰهِ ۗاِنْ يَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَاِنْ هُمْ اِلَّا يَخْرُصُوْنَ (الأنعام : ٦)

wa-in tuṭiʿ
وَإِن تُطِعْ
And if you obey
நீர் கீழ்ப்படிந்தால்
akthara
أَكْثَرَ
most
அதிகமானோருக்கு
man fī l-arḍi
مَن فِى ٱلْأَرْضِ
of (those) in the earth
இப்பூமியில் உள்ளவர்களில்
yuḍillūka
يُضِلُّوكَ
they will mislead you
வழிகெடுப்பார்கள்/ உம்மை
ʿan sabīli
عَن سَبِيلِ
from (the) way
பாதையிலிருந்து
l-lahi
ٱللَّهِۚ
(of) Allah
அல்லாஹ்வுடைய
in yattabiʿūna
إِن يَتَّبِعُونَ
Not they follow
பின்பற்ற மாட்டார்கள்
illā l-ẓana
إِلَّا ٱلظَّنَّ
except [the] assumption
தவிர/யூகம்
wa-in hum
وَإِنْ هُمْ
and not they (do)
இல்லை/அவர்கள்
illā yakhruṣūna
إِلَّا يَخْرُصُونَ
except guess
தவிர/கற்பனை செய்பவர்களாக

Transliteration:

Wa in tuti' aksara man fil ardi yudillooka 'an sabeelil laah; iny yattabi'oona illaz zanna wa in hum illaa yakhrusoon (QS. al-ʾAnʿām:116)

English Sahih International:

And if you obey most of those upon the earth, they will mislead you from the way of Allah. They follow not except assumption, and they are not but misjudging. (QS. Al-An'am, Ayah ௧௧௬)

Abdul Hameed Baqavi:

இப்புவியிலிருப்பவர்களில் பலர் (இவ்வாறே) இருக்கின்றனர். நீங்கள் அவர்களைப் பின்பற்றுவீரானால் அவர்கள் உங்களை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து திருப்பி விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத் தவிர (உண்மையை) அவர்கள் பின்பற்றுவதில்லை. அன்றி, (வெறும் பொய்யான) கற்பனையில்தான் அவர்கள் மூழ்கியிருக்கின்றனர். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௧௬)

Jan Trust Foundation

பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் - இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இப்பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு நீர் கீழ்ப்படிந்தால் (அவர்கள்) உம்மை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து வழிகெடுப்பார்கள். (அதிகமானோர்) யூகத்தைத் தவிர (உண்மையை) பின்பற்றமாட்டார்கள். கற்பனை செய்பவர்களாகவே தவிர (உண்மையை பின்பற்றுவோராக) அவர்கள் இல்லை.