Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௦௦

Qur'an Surah Al-An'am Verse 100

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௦௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَجَعَلُوْا لِلّٰهِ شُرَكَاۤءَ الْجِنَّ وَخَلَقَهُمْ وَخَرَقُوْا لَهٗ بَنِيْنَ وَبَنٰتٍۢ بِغَيْرِ عِلْمٍۗ سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يَصِفُوْنَ ࣖ (الأنعام : ٦)

wajaʿalū
وَجَعَلُوا۟
And they make
ஆக்கினர்
lillahi
لِلَّهِ
with Allah
அல்லாஹ்வுக்கு
shurakāa
شُرَكَآءَ
partners -
இணையாளர்களாக
l-jina
ٱلْجِنَّ
jinn
ஜின்களை
wakhalaqahum
وَخَلَقَهُمْۖ
though He has created them
அவன் அவர்களைப் படைத்திருக்க
wakharaqū
وَخَرَقُوا۟
and they falsely attribute
இன்னும் கற்பனைசெய்தனர்
lahu
لَهُۥ
to Him
அவனுக்கு
banīna
بَنِينَ
sons
மகன்களை
wabanātin
وَبَنَٰتٍۭ
and daughters
இன்னும் மகள்களை
bighayri ʿil'min
بِغَيْرِ عِلْمٍۚ
without knowledge
அறிவின்றி
sub'ḥānahu
سُبْحَٰنَهُۥ
Glorified is He
அவன் மகாத்தூயவன்
wataʿālā
وَتَعَٰلَىٰ
and Exalted
அவன் மிக உயர்ந்தவன்
ʿammā
عَمَّا
above what
எதைவிட்டு
yaṣifūna
يَصِفُونَ
they attribute
வருணிக்கிறார்கள்

Transliteration:

Wa ja'aloo lillaahi shurakaaa'al jinna wa khalaqa hum wa kharaqoo lahoo baneena wa banaatim bighairi 'ilm Subhaanahoo wa Ta'aalaa 'amma yasifoon (QS. al-ʾAnʿām:100)

English Sahih International:

But they have attributed to Allah partners – the jinn, while He has created them – and have fabricated for Him sons and daughters without knowledge. Exalted is He and high above what they describe. (QS. Al-An'am, Ayah ௧௦௦)

Abdul Hameed Baqavi:

(இவ்வாறெல்லாமிருந்தும்) அவர்கள் ஜின்களில் பலரை அல்லாஹ்வுக்கு இணையாக்குகின்றனர். எனினும், அந்த ஜின்களையும் அவனே படைத்திருக்கின்றான். இவர்கள் (தங்கள்) அறிவீனத்தால் அல்லாஹ்வுக்கு ஆண், பெண் சந்ததிகளையும் கற்பிக்கின்றனர். அவனோ, இவர்கள் (இவ்வாறு) வர்ணிப்பவற்றில் இருந்து மிக்க பரிசுத்தமானவனும் உயர்ந்தவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௦௦)

Jan Trust Foundation

இவ்வாறிருந்தும் அவர்கள் ஜின்களை அல்லாஹ்வுக்கு இணையானவர்களாக ஆக்குகிறார்கள்; அல்லாஹ்வே அந்த ஜின்களையும் படைத்தான்; இருந்தும் அறிவில்லாத காரணத்தால் இணைவைப்போர் அவனுக்குப் புதல்வர்களையும், புதல்விகளையும் கற்பனை செய்து கொண்டார்கள் - அவனோ இவர்கள் இவ்வாறு வர்ணிப்பதிலிருந்து தூயவனாகவும், உயர்ந்தவனுமாக இருக்கிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் ஜின்களை அல்லாஹ்வுக்கு இணையாளர்களாக ஆக்கினர், அவன் அவர்களைப் படைத்திருக்க. இன்னும் அறிவின்றி அவனுக்கு மகன்களையும், மகள்களையும் கற்பனை செய்தனர். அவன் மகாத் தூயவன். அவர்கள் (தகுதியின்றி) வருணிப்பதை விட்டு அவன் மிக உயர்ந்தவன்.