Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஷ்ர் வசனம் ௮

Qur'an Surah Al-Hashr Verse 8

ஸூரத்துல் ஹஷ்ர் [௫௯]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لِلْفُقَرَاۤءِ الْمُهٰجِرِيْنَ الَّذِيْنَ اُخْرِجُوْا مِنْ دِيَارِهِمْ وَاَمْوَالِهِمْ يَبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًا وَّيَنْصُرُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ ۗ اُولٰۤىِٕكَ هُمُ الصّٰدِقُوْنَۚ (الحشر : ٥٩)

lil'fuqarāi
لِلْفُقَرَآءِ
For the poor
ஏழைகளுக்கு
l-muhājirīna
ٱلْمُهَٰجِرِينَ
emigrants
முஹாஜிர்கள்
alladhīna ukh'rijū
ٱلَّذِينَ أُخْرِجُوا۟
those who were expelled
எவர்கள்/வெளியேற்றப்பட்டார்கள்
min diyārihim
مِن دِيَٰرِهِمْ
from their homes
தங்கள் இல்லங்களை விட்டும்
wa-amwālihim
وَأَمْوَٰلِهِمْ
and their properties
தங்கள் செல்வங்களை விட்டும்
yabtaghūna
يَبْتَغُونَ
seeking
தேடுகிறார்கள்
faḍlan
فَضْلًا
bounty
சிறப்பை(யும்)
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
from Allah
அல்லாஹ்வின்
wariḍ'wānan
وَرِضْوَٰنًا
and pleasure
பொருத்தத்தையும்
wayanṣurūna
وَيَنصُرُونَ
and helping
உதவுகிறார்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்விற்கு(ம்)
warasūlahu
وَرَسُولَهُۥٓۚ
and His Messenger
அவனது தூதருக்கும்
ulāika humu
أُو۟لَٰٓئِكَ هُمُ
Those they
அவர்கள்தான்
l-ṣādiqūna
ٱلصَّٰدِقُونَ
(are) the truthful
உண்மையாளர்கள்

Transliteration:

Lilfuqaraaa'il Muhaaji reenal lazeena ukhrijoo min diyaarihim wa amwaalihim yabtaghoona fadlam minal laahi wa ridwaananw wa yansuroonal laaha wa Rasoolah; ulaaa'ika humus saadiqoon (QS. al-Ḥašr:8)

English Sahih International:

For the poor emigrants who were expelled from their homes and their properties, seeking bounty from Allah and [His] approval and supporting [the cause of] Allah and His Messenger, [there is also a share]. Those are the truthful. (QS. Al-Hashr, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

தங்கள் வீடுகளைவிட்டும், தங்கள் பொருள்களை விட்டும் (அநியாயமாக) வெளிப்படுத்தப்பட்டு (மக்காவிலிருந்து) ஹிஜ்ரத் செய்து வந்த ஏழைகளுக்கும் அதில் பங்குண்டு. அவர்கள் அல்லாஹ்வுடைய அருளையும், அவனுடைய திருப் பொருத்தத் தையும் அடையக்கருதி (தங்கள் உயிரையும் பொருளையும் தியாகம் செய்து) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர். இவர்கள்தாம் ஸாதிகீன் (என்னும் உண்மையான நம்பிக்கையாளர்கள்). (ஸூரத்துல் ஹஷ்ர், வசனம் ௮)

Jan Trust Foundation

எவர்கள் தம் வீடுகளையும், தம் சொத்துகளையும் விட்டு, அல்லாஹ்வின் அருளையும், அவன் திருப் பொருத்தத்தையும் தேடியவர்களாக வெளியேற்றப்பட்டனரோ அந்த ஏழை முஹாஜிர்களுக்கும் (ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் அப்பொருளில் பங்குண்டு); அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர் அவர்கள் தாம் உண்மையாளர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(இன்னும் அந்த செல்வங்கள்) தங்கள் இல்லங்களை விட்டும் தங்கள் செல்வங்களை விட்டும் வெளியேற்றப்பட்ட ஏழை முஹாஜிர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் அல்லாஹ்வின் சிறப்பையும் பொருத்தத்தையும் தேடுகிறார்கள். அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் உதவுகிறார்கள். அவர்கள்தான் உண்மையாளர்கள்.