குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஷ்ர் வசனம் ௭
Qur'an Surah Al-Hashr Verse 7
ஸூரத்துல் ஹஷ்ர் [௫௯]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مَآ اَفَاۤءَ اللّٰهُ عَلٰى رَسُوْلِهٖ مِنْ اَهْلِ الْقُرٰى فَلِلّٰهِ وَلِلرَّسُوْلِ وَلِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِۙ كَيْ لَا يَكُوْنَ دُوْلَةً ۢ بَيْنَ الْاَغْنِيَاۤءِ مِنْكُمْۗ وَمَآ اٰتٰىكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَمَا نَهٰىكُمْ عَنْهُ فَانْتَهُوْاۚ وَاتَّقُوا اللّٰهَ ۗاِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِۘ (الحشر : ٥٩)
- mā afāa
- مَّآ أَفَآءَ
- What (was) restored
- சண்டையின்றி எதை உரிமையாக்கிக் கொடுத்தானோ
- l-lahu
- ٱللَّهُ
- (by) Allah
- அல்லாஹ்
- ʿalā rasūlihi
- عَلَىٰ رَسُولِهِۦ
- to His Messenger
- தனது தூதருக்கு
- min ahli l-qurā
- مِنْ أَهْلِ ٱلْقُرَىٰ
- from (the) people (of) the towns
- ஊர்களில் உள்ளவர்களிடமிருந்து
- falillahi
- فَلِلَّهِ
- (it is) for Allah
- (அது) அல்லாஹ்விற்கும்
- walilrrasūli
- وَلِلرَّسُولِ
- and His Messenger
- தூதருக்கும்
- walidhī l-qur'bā
- وَلِذِى ٱلْقُرْبَىٰ
- and for those (of) the kindred
- உறவினர்களுக்கும்
- wal-yatāmā
- وَٱلْيَتَٰمَىٰ
- and the orphans
- அனாதைகளுக்கும்
- wal-masākīni
- وَٱلْمَسَٰكِينِ
- and the needy
- ஏழைகளுக்கும்
- wa-ib'ni l-sabīli
- وَٱبْنِ ٱلسَّبِيلِ
- and the wayfarer
- வழிப் போக்கர்களுக்கும்
- kay lā yakūna
- كَىْ لَا يَكُونَ
- that not it becomes
- ஆகாமல் இருப்பதற்காகும்
- dūlatan
- دُولَةًۢ
- a (perpetual) circulation
- சுற்றக்கூடிய பொருளாக
- bayna
- بَيْنَ
- between
- மத்தியில்
- l-aghniyāi
- ٱلْأَغْنِيَآءِ
- the rich
- செல்வந்தர்களுக்கு
- minkum
- مِنكُمْۚ
- among you
- உங்களில் உள்ள
- wamā ātākumu
- وَمَآ ءَاتَىٰكُمُ
- And whatever gives you
- எதை உங்களுக்குக் கொடுத்தாரோ
- l-rasūlu
- ٱلرَّسُولُ
- the Messenger
- தூதர்
- fakhudhūhu
- فَخُذُوهُ
- take it
- அதைப் பற்றிப் பிடியுங்கள்
- wamā nahākum
- وَمَا نَهَىٰكُمْ
- and whatever he forbids you
- எதை உங்களுக்குத் தடுத்தாரோ
- ʿanhu
- عَنْهُ
- from it
- அதை விட்டு
- fa-intahū
- فَٱنتَهُوا۟ۚ
- refrain
- விலகிவிடுங்கள்
- wa-ittaqū
- وَٱتَّقُوا۟
- And fear
- இன்னும் பயந்து கொள்ளுங்கள்
- l-laha
- ٱللَّهَۖ
- Allah
- அல்லாஹ்வை
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- Indeed Allah
- நிச்சயமாக அல்லாஹ்
- shadīdu
- شَدِيدُ
- (is) severe
- கடுமையானவன்
- l-ʿiqābi
- ٱلْعِقَابِ
- (in) penalty
- தண்டிப்பதில்
Transliteration:
Maaa afaaa'al laahu 'alaa Rasoolihee min ahlil quraa falillaahi wa lir Rasooli wa lizil qurbaa wal yataamaa walmasaakeeni wabnis sabeeli kai laa yakoona doolatam bainal aghniyaaa'i minkum; wa maaa aataakumur Rasoolu fakhuzoohu wa maa nahaakum 'anhu fantahoo; wattaqul laaha innal laaha shadeedul-'iqaab(QS. al-Ḥašr:7)
English Sahih International:
And what Allah restored to His Messenger from the people of the towns – it is for Allah and for the Messenger and for [his] near relatives and orphans and the needy and the [stranded] traveler – so that it will not be a perpetual distribution among the rich from among you. And whatever the Messenger has given you – take; and what he has forbidden you – refrain from. And fear Allah; indeed, Allah is severe in penalty. (QS. Al-Hashr, Ayah ௭)
Abdul Hameed Baqavi:
அவ்வூராரிடம் இருந்தவைகளில் அல்லாஹ் தன்னுடைய தூதருக்குக் கொடுத்தவைகள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், அவருடைய உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரித்தானதாகும். செல்வம் உங்களிலுள்ள பணக்காரர்களுக்கிடையில் மட்டுமே சுற்றிக் கொண்டிருக்காமல் (மற்றவர்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, இவ்வாறு பொருளைப் பங்கிடும்படி கட்டளையிடுகின்றான்.) ஆகவே, நம்முடைய தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் (மனமுவந்து) எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதை விட்டும் உங்களை தடுத்தாரோ, அதைவிட்டு நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். (இவ்விஷயத்தில்) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடும் தண்டனை தருபவன். (ஸூரத்துல் ஹஷ்ர், வசனம் ௭)
Jan Trust Foundation
அவ்வூராரிடமிருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு (மீட்டுக்) கொடுத்தவை, அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்குமாகும்; மேலும், உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது); மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ் தனது தூதருக்கு ஊர்களில் உள்ளவர்களிடமிருந்து எதை சண்டையின்றி உரிமையாக்கிக் கொடுத்தானோ அது அல்லாஹ்விற்கும் தூதருக்கும் (அதாவது, தூதர் மற்றும் தூதரின்) உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும். ஏனெனில், செல்வம் உங்களில் உள்ள செல்வந்தர்களுக்கு மத்தியில் மட்டும் சுற்றக்கூடிய பொருளாக ஆகாமல் இருப்பதற்காகும். தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ அதைப் பற்றிப் பிடியுங்கள். அவர் எதை உங்களுக்குத் தடுத்தாரோ அதை விட்டும் விலகிவிடுங்கள். அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன் ஆவான்.