குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஷ்ர் வசனம் ௫
Qur'an Surah Al-Hashr Verse 5
ஸூரத்துல் ஹஷ்ர் [௫௯]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مَا قَطَعْتُمْ مِّنْ لِّيْنَةٍ اَوْ تَرَكْتُمُوْهَا قَاۤىِٕمَةً عَلٰٓى اُصُوْلِهَا فَبِاِذْنِ اللّٰهِ وَلِيُخْزِيَ الْفٰسِقِيْنَ (الحشر : ٥٩)
- mā qaṭaʿtum
- مَا قَطَعْتُم
- Whatever you cut down
- நீங்கள் வெட்டினாலும்
- min līnatin
- مِّن لِّينَةٍ
- of (the) palm-trees
- பேரித்த மரங்களை
- aw taraktumūhā
- أَوْ تَرَكْتُمُوهَا
- or you left them
- அவர்கள்/அவற்றை நீங்கள் விட்டாலும்
- qāimatan
- قَآئِمَةً
- standing
- நிற்பவையாக
- ʿalā uṣūlihā
- عَلَىٰٓ أُصُولِهَا
- on their roots
- அவற்றின் வேர்களில்
- fabi-idh'ni
- فَبِإِذْنِ
- it (was) by the permission
- உத்தரவின்படிதான்
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- waliyukh'ziya
- وَلِيُخْزِىَ
- and that He may disgrace
- இன்னும் இழிவுபடுத்துவதற்காக
- l-fāsiqīna
- ٱلْفَٰسِقِينَ
- the defiantly disobedient
- பாவிகளை
Transliteration:
Maa qata'tum mil leenatin aw taraktumoohaa qaaa'imatan'alaaa usoolihaa fabi iznil laahi wa liyukhziyal faasiqeen(QS. al-Ḥašr:5)
English Sahih International:
Whatever you have cut down of [their] palm trees or left standing on their trunks – it was by permission of Allah and so He would disgrace the defiantly disobedient. (QS. Al-Hashr, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
நீங்கள் அவர்களுடைய பேரீச்சமரங்களை வெட்டியதும் அல்லது (வெட்டாது) வேருடன் (இருந்தவாறே) அதன் அடிகளின் மீது நின்றிருக்கும்படி நீங்கள் அவைகளைவிட்டு வைத்ததும், அந்தப் பாவிகளை இழிவுபடுத்தும் பொருட்டு, அல்லாஹ்வின் அனுமதிபடியே (நடைபெற்ற காரியமாகும்). (ஸூரத்துல் ஹஷ்ர், வசனம் ௫)
Jan Trust Foundation
நீங்கள் (அவர்களுடைய) பேரீத்த மரங்களை வெட்டியதோ, அல்லது அவற்றின் வேர்களின் மீது அவை நிற்கும்படியாக விட்டு விட்டதோ அல்லாஹ்வின் அனுமதியாலும், அந்த ஃபாஸிக்குகளை(ப் பாவிகளை) அவன் இழிவு படுத்துவதற்காகவுமே தான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் பேரித்த மரங்களை வெட்டினாலும் அல்லது அவற்றின் வேர்களில் நிற்பவையாக அவற்றை நீங்கள் விட்டாலும் (அவை இரண்டும்) அல்லாஹ்வின் உத்தரவின்படிதான் நடந்தன. இன்னும் பாவிகளை இழிவுபடுத்துவதற்காக நடந்தன.