குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஷ்ர் வசனம் ௨௪
Qur'an Surah Al-Hashr Verse 24
ஸூரத்துல் ஹஷ்ர் [௫௯]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
هُوَ اللّٰهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْاَسْمَاۤءُ الْحُسْنٰىۗ يُسَبِّحُ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۚ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ࣖ (الحشر : ٥٩)
- huwa
- هُوَ
- He
- அவன்தான்
- l-lahu
- ٱللَّهُ
- (is) Allah
- அல்லாஹ்
- l-khāliqu
- ٱلْخَٰلِقُ
- the Creator
- படைப்பவன்
- l-bāri-u
- ٱلْبَارِئُ
- the Inventor
- உருவாக்குபவன்
- l-muṣawiru
- ٱلْمُصَوِّرُۖ
- the Fashioner
- உருவம்அமைப்பவன்
- lahu
- لَهُ
- For Him
- அவனுக்கே உரியன
- l-asmāu
- ٱلْأَسْمَآءُ
- (are) the names
- பெயர்கள்
- l-ḥus'nā
- ٱلْحُسْنَىٰۚ
- the beautiful
- மிக அழகிய
- yusabbiḥu
- يُسَبِّحُ
- Glorifies
- துதிக்கின்றன
- lahu
- لَهُۥ
- Him
- அவனையே
- mā fī l-samāwāti
- مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
- whatever (is) in the heavens
- வானங்களில் உள்ளவை
- wal-arḍi
- وَٱلْأَرْضِۖ
- and the earth
- இன்னும் பூமி(யில்)
- wahuwa
- وَهُوَ
- And He
- அவன்தான்
- l-ʿazīzu
- ٱلْعَزِيزُ
- (is) the All-Mighty
- மிகைத்தவன்
- l-ḥakīmu
- ٱلْحَكِيمُ
- the All-Wise
- மகா ஞானவான்
Transliteration:
Huwal Laahul Khaaliqul Baari 'ul Musawwir; lahul Asmaaa'ul Husnaa; yusabbihu lahoo maa fis samaawaati wal ardi wa Huwal 'Azeezul Hakeem(QS. al-Ḥašr:24)
English Sahih International:
He is Allah, the Creator, the Producer, the Fashioner; to Him belong the best names. Whatever is in the heavens and earth is exalting Him. And He is the Exalted in Might, the Wise. (QS. Al-Hashr, Ayah ௨௪)
Abdul Hameed Baqavi:
அந்த அல்லாஹ்தான் படைப்பவன். (அவனே) படைப்புகளை ஒழுங்கு செய்பவன்; (அவனே) படைப்புகளின் உருவத்தையும் அமைப்பவன். அவனுக்கு அழகான பல திருப்பெயர்கள் இருக்கின்றன. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனையே துதி செய்கின்றன. அவனே (அனைவரையும்) மிகைத்தவன்; மிக ஞானமுடையவன். (ஸூரத்துல் ஹஷ்ர், வசனம் ௨௪)
Jan Trust Foundation
அவன்தான் அல்லாஹ்; படைப்பவன்; ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன்; உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன்தான் அல்லாஹ். படைப்பவன், உருவாக்குபவன், உருவம் அமைப்பவன். மிக அழகிய பெயர்கள் அவனுக்கே உரியன. வானங்கள், இன்னும் பூமியில் உள்ளவை அவனையே துதிக்கின்றன. அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.