Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஷ்ர் வசனம் ௨

Qur'an Surah Al-Hashr Verse 2

ஸூரத்துல் ஹஷ்ர் [௫௯]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هُوَ الَّذِيْٓ اَخْرَجَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ مِنْ دِيَارِهِمْ لِاَوَّلِ الْحَشْرِۗ مَا ظَنَنْتُمْ اَنْ يَّخْرُجُوْا وَظَنُّوْٓا اَنَّهُمْ مَّانِعَتُهُمْ حُصُوْنُهُمْ مِّنَ اللّٰهِ فَاَتٰىهُمُ اللّٰهُ مِنْ حَيْثُ لَمْ يَحْتَسِبُوْا وَقَذَفَ فِيْ قُلُوْبِهِمُ الرُّعْبَ يُخْرِبُوْنَ بُيُوْتَهُمْ بِاَيْدِيْهِمْ وَاَيْدِى الْمُؤْمِنِيْنَۙ فَاعْتَبِرُوْا يٰٓاُولِى الْاَبْصَارِ (الحشر : ٥٩)

huwa
هُوَ
He
அவன்தான்
alladhī
ٱلَّذِىٓ
(is) the One Who
எவன்
akhraja
أَخْرَجَ
expelled
வெளியாக்கினான்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
those who disbelieved
நிராகரித்தவர்களை
min ahli l-kitābi
مِنْ أَهْلِ ٱلْكِتَٰبِ
from (the) People (of) the Scripture
வேதக்காரர்களில்
min diyārihim
مِن دِيَٰرِهِمْ
from their homes
அவர்களின் இல்லங்களில் இருந்து
li-awwali
لِأَوَّلِ
at (the) first
முதல் முறை
l-ḥashri
ٱلْحَشْرِۚ
gathering
ஒன்று சேர்ப்பதற்காக
mā ẓanantum
مَا ظَنَنتُمْ
Not you think
நீங்கள் எண்ணவில்லை
an yakhrujū
أَن يَخْرُجُوا۟ۖ
that they would leave
வெளியேறுவார்கள்
waẓannū
وَظَنُّوٓا۟
and they thought
அவர்கள் எண்ணினார்கள்
annahum
أَنَّهُم
that [they]
நிச்சயமாக அவர்கள்
māniʿatuhum
مَّانِعَتُهُمْ
would defend them
தங்களை பாதுகாக்கும்
ḥuṣūnuhum
حُصُونُهُم
their fortresses
தங்களது கோட்டைகள்
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
against Allah
அல்லாஹ்விடமிருந்து
fa-atāhumu
فَأَتَىٰهُمُ
But came to them
அவர்களிடம் வந்தான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
min ḥaythu lam yaḥtasibū
مِنْ حَيْثُ لَمْ يَحْتَسِبُوا۟ۖ
from where not they expected
அவர்கள் கணித்துப் பார்க்காத விதத்தில்
waqadhafa
وَقَذَفَ
and He cast
இன்னும் போட்டான்
fī qulūbihimu
فِى قُلُوبِهِمُ
into their hearts
அவர்களின் உள்ளங்களில்
l-ruʿ'ba
ٱلرُّعْبَۚ
[the] terror
திகிலை
yukh'ribūna
يُخْرِبُونَ
they destroyed
நாசப்படுத்தினர்
buyūtahum
بُيُوتَهُم
their houses
தங்கள் வீடுகளை
bi-aydīhim
بِأَيْدِيهِمْ
with their hands
தங்கள் கரங்களினாலும்
wa-aydī
وَأَيْدِى
and the hands
கரங்களினாலும்
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
(of) the believers
முஃமின்களின்
fa-iʿ'tabirū
فَٱعْتَبِرُوا۟
So take a lesson
ஆகவே படிப்பினை பெறுங்கள்!
yāulī l-abṣāri
يَٰٓأُو۟لِى ٱلْأَبْصَٰرِ
O those endowed (with) insight
அகப்பார்வை உடையவர்களே!

Transliteration:

Huwal lazeee akharajal lazeena kafaroo min ahlil kitaabi min diyaarihim li awwalil Hashr; maa zanantum any yakhrujoo wa zannooo annahum maa ni'atuhum husoonuhum minal laahi faataahumul laahu min haisu lam yahtasiboo wa qazafa fee quloobihimur ru'ba yukhriboona bu yootahum bi aydeehim wa aydil mu'mineena fa'tabiroo yaaa ulil absaar (QS. al-Ḥašr:2)

English Sahih International:

It is He who expelled the ones who disbelieved among the People of the Scripture from their homes at the first gathering. You did not think they would leave, and they thought that their fortresses would protect them from Allah; but [the decree of] Allah came upon them from where they had not expected, and He cast terror into their hearts [so] they destroyed their houses by their [own] hands and the hands of the believers. So take warning, O people of vision. (QS. Al-Hashr, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

வேதத்தை உடையவர்களில் எவர்கள் நிராகரிப்பவர்களாக ஆனார்களோ அவர்களை, அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளிப்படுத்தியவன் அவன்தான். (அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய தண்டனைகளில்) இது முதலாவதாகும். அவர்கள் (தங்கள் வீடுகளிலிருந்து) வெளிப்பட்டு விடுவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்களும் தங்களுடைய கோட்டைக் கொத்தளங்கள், அல்லாஹ்வை விட்டுத் தங்களை தடுத்துக் கொள்ளுமென்று மெய்யாகவே எண்ணிக் கொண்டிருந்தார்கள். எனினும், அவர்கள் எதிர்பார்க்காத வகையில் அல்லாஹ் அவர்களிடம் வந்து, அவர்களுடைய உள்ளங்களில் திகிலைப் போட்டு, அவர்கள் தங்கள் கையைக் கொண்டே தங்களுடைய வீடுகளை அழிக்குமாறு செய்ததுடன், நம்பிக்கையாளர்களுடைய கைகளைக் கொண்டும் அவர்களுடைய வீடுகளை அழித்தான். (அகப்)பார்வையுடையவர்களே! (இதனைக் கொண்டு) நீங்கள் உணர்ச்சி பெறுவீர்களாக! (ஸூரத்துல் ஹஷ்ர், வசனம் ௨)

Jan Trust Foundation

வேதத்தை உடையோரில் எவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தனரோ, அவர்களை அவர்களுடைய வீடுகளிலிருந்து முதல் வெளியேற்றத்தில் வெளியேற்றியவன் அவனே; எனினும் அவர்கள் வெளியேறுவார்கள் என்று நீங்கள் நினைக்கவில்லை; அவர்களும், தங்களுடைய கோட்டைகள் நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் தங்களைத் தடுத்துக் கொள்பவை என்று நினைத்தார்கள்; ஆனால், அவர்கள் எண்ணியிராத புறத்திலிருந்து அவர்கள்பால் அல்லாஹ் (வேதனையைக் கொண்டு) வந்து அவர்களுடைய இதயங்களில் பீதியையும் போட்டான்; அன்றியும் அவர்கள் தம் கைகளாலும் முஃமின்களின் கைகளாலும் தம் வீடுகளை அழித்துக் கொண்டனர்; எனவே அகப்பார்வையுடையோரே! நீங்கள் (இதிலிருந்து) படிப்பினை பெறுவீர்களாக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன்தான் வேதக்காரர்களில் (இந்த நபியை) நிராகரித்தவர்களை அவர்களின் இல்லங்களில் இருந்து முதல் முறை (ஷாம் தேசத்தில் அவர்களை) ஒன்று சேர்ப்பதற்காக வெளியாக்கினான். அவர்கள் வெளியேறுவார்கள் என்று (முஃமின்களே!) நீங்கள் எண்ணவில்லை. தங்களது கோட்டைகள் தங்களை அல்லாஹ்விடமிருந்து பாதுகாக்கும் என நிச்சயமாக அவர்கள் எண்ணினார்கள். ஆனால், அல்லாஹ் (தனது தண்டனை) அவர்கள் கணித்துப் பார்க்காத விதத்தில் அவர்களிடம் (கொண்டு) வந்தான். அவர்களின் உள்ளங்களில் அவன் திகிலைப் போட்டான். தங்கள் வீடுகளை தங்கள் கரங்களினாலும் (முஃமின்களுக்கு பணியாததால்) முஃமின்களின் கரங்களினாலும் நாசப்படுத்தினர். ஆகவே, அகப்பார்வை உடையவர்களே! படிப்பினை பெறுங்கள்!