Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஷ்ர் வசனம் ௧௬

Qur'an Surah Al-Hashr Verse 16

ஸூரத்துல் ஹஷ்ர் [௫௯]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَمَثَلِ الشَّيْطٰنِ اِذْ قَالَ لِلْاِنْسَانِ اكْفُرْۚ فَلَمَّا كَفَرَ قَالَ اِنِّيْ بَرِيْۤءٌ مِّنْكَ اِنِّيْٓ اَخَافُ اللّٰهَ رَبَّ الْعٰلَمِيْنَ (الحشر : ٥٩)

kamathali
كَمَثَلِ
Like (the) example
உதாரணத்தைப் போன்றுதான்
l-shayṭāni
ٱلشَّيْطَٰنِ
(of) the Shaitaan
அந்த ஷைத்தானின்
idh qāla
إِذْ قَالَ
when he says
அவன் கூறியபோது
lil'insāni
لِلْإِنسَٰنِ
to man
மனிதனுக்கு
uk'fur
ٱكْفُرْ
"Disbelieve"
நீ நிராகரித்து விடு
falammā kafara
فَلَمَّا كَفَرَ
But when he disbelieves
அந்த மனிதன் நிராகரித்துவிடவே
qāla
قَالَ
he says
கூறிவிடுகிறான்
innī
إِنِّى
"Indeed I am
நிச்சயமாக நான்
barīon
بَرِىٓءٌ
disassociated
நீங்கியவன்
minka
مِّنكَ
from you
உன்னை விட்டு
innī
إِنِّىٓ
Indeed [I]
நிச்சயமாக நான்
akhāfu
أَخَافُ
I fear
பயப்படுகிறேன்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
rabba
رَبَّ
(the) Lord
இறைவனாகிய
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
(of) the worlds"
அகிலங்களின்

Transliteration:

Kamasalish shaitaani izqaala lil insaanik fur falammaa kafara qaala innee bareee'um minka inneee akhaaful laaha rabbal 'aalameen (QS. al-Ḥašr:16)

English Sahih International:

[The hypocrites are] like the example of Satan when he says to man, "Disbelieve." But when he disbelieves, he says, "Indeed, I am disassociated from you. Indeed, I fear Allah, Lord of the worlds." (QS. Al-Hashr, Ayah ௧௬)

Abdul Hameed Baqavi:

(இன்னும், இவர்களுடைய உதாரணம்:) ஒரு ஷைத்தானுடைய உதாரணத்தையும் ஒத்திருக்கின்றது. அவன் மனிதனை நோக்கி "நீ (அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும்) நிராகரித்துவிடு" என்று கூறுகின்றான். அவ்வாறே அவனும் நிராகரித்துவிட்டான். (பின்னர், ஷைத்தான் அவனை நோக்கி) "நிச்சயமாக நான் உன்னைவிட்டு விலகிவிட்டேன். ஏனென்றால், உலகத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு மெய்யாகவே நான் பயப்படு கின்றேன்" என்று கூறுவான். (ஸூரத்துல் ஹஷ்ர், வசனம் ௧௬)

Jan Trust Foundation

(இன்னும் இவர்கள் நிலை) ஷைத்தானுடைய உதாரணத்தைப் போன்றிருக்கிறது; (அவன்) மனிதனை நோக்கி| “நீ (இறைவனை) நிராகரித்து விடு” என்று கூறுகிறான். அவ்வாறு மனிதன் நிராகரித்ததும் “நான் உன்னை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன்; (ஏனெனில்) நான் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுகிறேன்” என்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபிக்கு எதிராக யூதர்களைத் தூண்டிய நயவஞ்சகர்களின் உதாரணம்) அந்த ஷைத்தானின் உதாரணத்தைப் போன்றுதான். அவன் மனிதனுக்கு, “நீ நிராகரித்து விடு” என்று கூறினான். அந்த மனிதன் நிராகரித்துவிடவே, “உன்னை விட்டு நிச்சயமாக நான் நீங்கியவன், நிச்சயமாக அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வை நான் பயப்படுகின்றேன்” என்று கூறி (அந்த மனிதனை விட்டும் அவன் விலகி) விடுகின்றான்.