Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஷ்ர் வசனம் ௧௫

Qur'an Surah Al-Hashr Verse 15

ஸூரத்துல் ஹஷ்ர் [௫௯]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَمَثَلِ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ قَرِيْبًا ذَاقُوْا وَبَالَ اَمْرِهِمْۚ وَلَهُمْ عَذَابٌ اَلِيْمٌۚ (الحشر : ٥٩)

kamathali
كَمَثَلِ
Like (the) example
உதாரணத்தைப் போன்றுதான்
alladhīna
ٱلَّذِينَ
(of) those
எவர்கள்
min qablihim
مِن قَبْلِهِمْ
from before them
இவர்களுக்கு முன்னர்
qarīban
قَرِيبًاۖ
shortly
சற்று
dhāqū
ذَاقُوا۟
they tasted
அனுபவித்தார்களே
wabāla
وَبَالَ
(the) evil result
கெடுதியை
amrihim
أَمْرِهِمْ
(of) their affair
தங்கள் காரியத்தின்
walahum
وَلَهُمْ
and for them
இன்னும் இவர்களுக்கு உண்டு
ʿadhābun
عَذَابٌ
(is) a punishment
தண்டனை
alīmun
أَلِيمٌ
painful
வலி தரக்கூடியது

Transliteration:

Kamasalil lazeena min qablihim qareeban zaaqoo wabaala amrihim wa lahum 'azaabun aleem (QS. al-Ḥašr:15)

English Sahih International:

[Theirs is] like the example of those shortly before them: they tasted the bad consequence of their affair, and they will have a painful punishment. (QS. Al-Hashr, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

(இவர்களுக்கு உதாரணமாவது:) இவர்களுக்குச் சிறிது காலத்திற்கு முன்னர் தங்களுடைய கெட்ட செயல்களின் பலனை (பத்ரு யுத்தத்தில்) அனுபவித்தவர்களின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. (மறுமையில்) இவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு. (ஸூரத்துல் ஹஷ்ர், வசனம் ௧௫)

Jan Trust Foundation

இவர்களுக்கு முன்னர் (காலத்தால்) நெருங்கி இருந்த சிலரைப் போன்றே (இவர்களும் இருக்கின்றனர்) அவர்கள் தம் தீய செயல்களுக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையுமுண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(இந்த யூதர்களுக்கு உதாரணம்) இவர்களுக்கு சற்று முன்னர் தங்கள் (தீய) காரியத்தின் கெடுதியை அனுபவித்தார்களே அவர்களின் உதாரணத்தைப் போன்றுதான். இன்னும் இவர்களுக்கு (இதை விட) வலி தரக்கூடிய தண்டனை (மறுமையில்) உண்டு.