Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஷ்ர் வசனம் ௧௪

Qur'an Surah Al-Hashr Verse 14

ஸூரத்துல் ஹஷ்ர் [௫௯]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَا يُقَاتِلُوْنَكُمْ جَمِيْعًا اِلَّا فِيْ قُرًى مُّحَصَّنَةٍ اَوْ مِنْ وَّرَاۤءِ جُدُرٍۗ بَأْسُهُمْ بَيْنَهُمْ شَدِيْدٌ ۗ تَحْسَبُهُمْ جَمِيْعًا وَّقُلُوْبُهُمْ شَتّٰىۗ ذٰلِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْقِلُوْنَۚ (الحشر : ٥٩)

lā yuqātilūnakum
لَا يُقَٰتِلُونَكُمْ
Not will they fight you
உங்களிடம் போர் புரிய மாட்டார்கள்
jamīʿan
جَمِيعًا
all
எல்லோரும் சேர்ந்து
illā
إِلَّا
except
தவிர
fī quran muḥaṣṣanatin
فِى قُرًى مُّحَصَّنَةٍ
in towns fortified
பாதுகாப்பான ஊர்களில்
aw
أَوْ
or
அல்லது
min warāi
مِن وَرَآءِ
from behind
பின்னால்
judurin
جُدُرٍۭۚ
walls
சுவர்களுக்கு
basuhum
بَأْسُهُم
Their violence
அவர்களின் பகைமை
baynahum
بَيْنَهُمْ
among themselves
அவர்களுக்கு மத்தியில்
shadīdun
شَدِيدٌۚ
(is) severe
கடுமையாக
taḥsabuhum
تَحْسَبُهُمْ
You think they
நீர் அவர்களை எண்ணுகின்றீர்
jamīʿan
جَمِيعًا
(are) united
ஒன்றுசேர்ந்தவர்களாக
waqulūbuhum
وَقُلُوبُهُمْ
but their hearts
அவர்களின் உள்ளங்களோ
shattā
شَتَّىٰۚ
(are) divided
பலதரப்பட்டதாக
dhālika bi-annahum
ذَٰلِكَ بِأَنَّهُمْ
That (is) because they
அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்
qawmun lā yaʿqilūna
قَوْمٌ لَّا يَعْقِلُونَ
(are) a people not they reason
மக்கள்/ நிச்சயமாக அவர்கள் சிந்தித்துப் புரியமாட்டார்கள்

Transliteration:

Laa yuqaatiloonakum jamee'an illaa fee quram muhas sanatin aw minw waraaa'i judur; baasuhum bainahum shadeed; tahsabuhum jamee'anw-wa quloobuhum shatta; zaalika biannahum qawmul laa ya'qiloon (QS. al-Ḥašr:14)

English Sahih International:

They will not fight you all except within fortified cities or from behind walls. Their violence [i.e., enmity] among themselves is severe. You think they are together, but their hearts are diverse. That is because they are a people who do not reason. (QS. Al-Hashr, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

அவர்கள் அனைவருமே ஒன்று சேர்ந்தபோதிலும், பலமான ஒரு கோட்டைக்குள்ளாகவோ அல்லது மதில்களுக்கப்பாலோ இல்லாமல் (நேருக்கு நேராக) உங்களுடன் போர் புரியமாட்டார்கள். அவர்களுக்குள்ளாகவே பெரும் (பகைமையும்) சண்டைகளும் இருக்கின்றன. அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டிருப்பதாக நீங்கள் எண்ணுகின்றீர்கள். (அன்று!) அவர்களுடைய உள்ளங்கள் சிதறிக்கிடக்கின்றன. மெய்யாகவே அவர்கள் (எதனையும்) அறிந்துகொள்ளும் சக்தியற்ற மக்கள் என்பதுதான் இதற்குரிய காரணமாகும். (ஸூரத்துல் ஹஷ்ர், வசனம் ௧௪)

Jan Trust Foundation

கோட்டைகளால் அரண் செய்யப்பட்ட ஊர்களிலோ அல்லது மதில்களுக்கு அப்பால் இருந்து கொண்டோ அல்லாமல் அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து உங்களுடன் போரிட மாட்டார்கள்; அவர்களுக்குள்ளேயே போரும், பகையும் மிகக் கடுமையானவை; (இந்நிலையில்) அவர்கள் யாவரும் ஒன்று பட்டிருப்பதாக நீர் எண்ணுகிறீர்; (ஆனால்) அவர்களுடைய இதயங்கள், சிதறிக் கிடக்கின்றன - இதற்குக் காரணம்| மெய்யாகவே அவர்கள் அறிவற்ற சமூகத்தார் என்பதுதான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் (-அந்த யூதர்கள்) பாதுகாப்பான ஊர்களில் அல்லது சுவர்களுக்கு பின்னால் இருந்தே தவிர, அவர்கள் எல்லோரும் சேர்ந்து (நேரடியாக) உங்களிடம் போர் புரிய மாட்டார்கள். அவர்களின் பகைமை அவர்களுக்கு மத்தியில் கடுமையாக இருக்கிறது. நீர் அவர்களை ஒன்று சேர்ந்தவர்களாக எண்ணுகின்றீர். அவர்களின் உள்ளங்களோ பலதரப்பட்டதாக (பிரிந்து) இருக்கின்றன. அதற்கு காரணம், நிச்சயமாக அவர்கள் சிந்தித்துப் புரியாத மக்கள் ஆவார்கள்