Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஷ்ர் வசனம் ௧௩

Qur'an Surah Al-Hashr Verse 13

ஸூரத்துல் ஹஷ்ர் [௫௯]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَاَنْتُمْ اَشَدُّ رَهْبَةً فِيْ صُدُوْرِهِمْ مِّنَ اللّٰهِ ۗذٰلِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُوْنَ (الحشر : ٥٩)

la-antum
لَأَنتُمْ
Certainly you(r)
நீங்கள்
ashaddu rahbatan
أَشَدُّ رَهْبَةً
(are) more intense (in) fear
கடுமையான பயதிற்குரியவர்கள்
fī ṣudūrihim
فِى صُدُورِهِم
in their breasts
அவர்களின் நெஞ்சங்களில்
mina l-lahi
مِّنَ ٱللَّهِۚ
than Allah
அல்லாஹ்வை விட
dhālika bi-annahum
ذَٰلِكَ بِأَنَّهُمْ
That (is) because they
அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்
qawmun
قَوْمٌ
(are) a people
மக்கள்
lā yafqahūna
لَّا يَفْقَهُونَ
(who do) not understand
புரிய மாட்டார்கள்

Transliteration:

La antum ashaddu rahbatan fee sudoorihim minal laah; zaalika bi annahum qawmul laa yafqahoon (QS. al-Ḥašr:13)

English Sahih International:

You [believers] are more fearful within their breasts than Allah. That is because they are a people who do not understand. (QS. Al-Hashr, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

அவர்களுடைய உள்ளங்களில் உங்களைப் பற்றிய பயம் அல்லாஹ்வை(ப் பற்றிய பயத்தை)விட அதிகமாகவே இருக்கின்றது! மெய்யாகவே அவர்கள் அறிவில்லா மக்கள் என்பதுதான் இதற்குக் காரணமாகும். (ஸூரத்துல் ஹஷ்ர், வசனம் ௧௩)

Jan Trust Foundation

நிச்சயமாக, அவர்களுடைய இதயங்களில் அல்லாஹ்வை விட உங்களைப் பற்றிய பயமே பலமாக இருக்கிறது; (அல்லாஹ்வை விட்டும் அவர்கள் உங்களை அதிகம் அஞ்சுவதற்கு காரணம்) அவர்கள் (உண்மையை) உணர்ந்து கொள்ளாத சமூகத்தினராக இருப்பதனால்தான் இந்த நிலை!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(முஃமின்களே!) நீங்கள் அவர்களின் நெஞ்சங்களில் அல்லாஹ்வை விட கடுமையான பயத்திற்குரியவர்கள். (-அவர்கள் அல்லாஹ்வை பயப்படுவதை விட உங்களை அதிகம் பயப்படுகின்றனர்.) அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள் (அல்லாஹ்வின் வல்லமையை) புரியாத மக்கள் ஆவார்கள்.