குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஷ்ர் வசனம் ௧௨
Qur'an Surah Al-Hashr Verse 12
ஸூரத்துல் ஹஷ்ர் [௫௯]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَىِٕنْ اُخْرِجُوْا لَا يَخْرُجُوْنَ مَعَهُمْۚ وَلَىِٕنْ قُوْتِلُوْا لَا يَنْصُرُوْنَهُمْۚ وَلَىِٕنْ نَّصَرُوْهُمْ لَيُوَلُّنَّ الْاَدْبَارَۙ ثُمَّ لَا يُنْصَرُوْنَ (الحشر : ٥٩)
- la-in
- لَئِنْ
- If
- ukh'rijū
- أُخْرِجُوا۟
- they are expelled
- அவர்கள் வெளியேற்றப்பட்டால்
- lā yakhrujūna
- لَا يَخْرُجُونَ
- not they will leave
- இவர்கள் வெளியேற மாட்டார்கள்
- maʿahum
- مَعَهُمْ
- with them
- அவர்களுடன்
- wala-in qūtilū
- وَلَئِن قُوتِلُوا۟
- and if they are fought
- அவர்கள் போர் செய்யப்பட்டால்
- lā yanṣurūnahum
- لَا يَنصُرُونَهُمْ
- not they will help them
- இவர்கள் அவர்களுக்கு உதவ மாட்டார்கள்
- wala-in naṣarūhum
- وَلَئِن نَّصَرُوهُمْ
- And if they help them
- இவர்கள் அவர்களுக்கு உதவினாலும்
- layuwallunna l-adbāra
- لَيُوَلُّنَّ ٱلْأَدْبَٰرَ
- certainly they will turn (their) backs;
- இவர்களும் கண்டிப்பாக புறமுதுகுதான் காட்டுவார்கள்
- thumma lā yunṣarūna
- ثُمَّ لَا يُنصَرُونَ
- then not they will be helped
- பிறகு/இவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்
Transliteration:
La'in ukhrijoo laa yakhrujoona ma'ahum wa la'in qootiloo laa yansuroonahum wa la'in nasaroohum la yuwallunnal adbaara summa laa yunsaroon(QS. al-Ḥašr:12)
English Sahih International:
If they are expelled, they will not leave with them, and if they are fought, they will not aid them. And [even] if they should aid them, they will surely turn their backs; then [thereafter] they will not be aided. (QS. Al-Hashr, Ayah ௧௨)
Abdul Hameed Baqavi:
ஏனென்றால், அவர்கள் (தங்கள் இல்லங்களிலிருந்து) வெளியேற்றப்பட்டால், இவர்கள் அவர்களுடன் வெளியேற மாட்டார்கள். அவர்களை எதிர்த்து (எவரும்) போர் புரிந்தால், அவர்களுக்கு உதவி புரிய முன்வரவும் மாட்டார்கள். முன்வந்த போதிலும், நிச்சயமாக புறங்காட்டியே ஓடுவார்கள். பின்னர் (எவராலுமே) அவர்கள் எத்தகைய உதவியும் பெற மாட்டார்கள். (ஸூரத்துல் ஹஷ்ர், வசனம் ௧௨)
Jan Trust Foundation
அவர்கள் வெளியேற்றப்பட்டால், இவர்கள் அவர்களுடன் வெளியேற மாட்டார்கள்; மேலும், அவர்களுக்கெதிராக போர் செய்யப்பெற்றால், இவர்கள் அவர்களுக்கு உதவி செய்யவும் மாட்டார்கள்; அன்றியும் இவர்கள் அவர்களுக்கு உதவி செய்தாலும், நிச்சயமாக புறமுதுகு காட்டிப் பின் வாங்கி விடுவார்கள் - பின்னர் அவர்கள் (எத்தகைய) உதவியும் அளிக்கப்பட மாட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் (நிராகரித்த வேதக்காரர்கள் தங்கள் இல்லங்களில் இருந்து) வெளியேற்றப்பட்டால் இவர்கள் அவர்களுடன் வெளியேற மாட்டார்கள். அவர்கள் போர் செய்யப்பட்டால் இவர்கள் அவர்களுக்கு உதவ மாட்டார்கள். (அப்படியே) இவர்கள் அவர்களுக்கு உதவினாலும் இவர்களும் கண்டிப்பாக புறமுதுகுதான் காட்டுவார்கள். பிறகு, (ஒருக்காலும்) இவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள். (நிராகரித்தவர்களுக்கு உதவிய இந்த நயவஞ்சகர்களும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.)