Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹஷ்ர் வசனம் ௧௦

Qur'an Surah Al-Hashr Verse 10

ஸூரத்துல் ஹஷ்ர் [௫௯]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ جَاۤءُوْ مِنْۢ بَعْدِهِمْ يَقُوْلُوْنَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِاِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْاِيْمَانِ وَلَا تَجْعَلْ فِيْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِيْنَ اٰمَنُوْا رَبَّنَآ اِنَّكَ رَءُوْفٌ رَّحِيْمٌ ࣖ (الحشر : ٥٩)

wa-alladhīna
وَٱلَّذِينَ
And those who
எவர்கள்
jāū
جَآءُو
came
வந்தார்கள்
min baʿdihim
مِنۢ بَعْدِهِمْ
from after them
இவர்களுக்கு பின்னர்
yaqūlūna
يَقُولُونَ
they say
கூறுவார்கள்
rabbanā
رَبَّنَا
"Our Lord
எங்கள் இறைவா
igh'fir lanā
ٱغْفِرْ لَنَا
forgive us
எங்களை(யும்) மன்னிப்பாயாக
wali-ikh'wāninā
وَلِإِخْوَٰنِنَا
and our brothers
எங்கள் சகோதரர்களையும்
alladhīna
ٱلَّذِينَ
who
எவர்கள்
sabaqūnā
سَبَقُونَا
preceded us
எங்களை முந்தினார்கள்
bil-īmāni
بِٱلْإِيمَٰنِ
in faith
ஈமானில்
walā tajʿal
وَلَا تَجْعَلْ
and (do) not put
ஆக்கிவிடாதே
fī qulūbinā
فِى قُلُوبِنَا
in our hearts
எங்கள் உள்ளங்களில்
ghillan
غِلًّا
any rancor
குரோதத்தை
lilladhīna āmanū
لِّلَّذِينَ ءَامَنُوا۟
towards those who believed
நம்பிக்கை கொண்டவர்கள் மீது
rabbanā
رَبَّنَآ
Our Lord
எங்கள் இறைவா
innaka
إِنَّكَ
indeed You
நிச்சயமாக நீதான்
raūfun
رَءُوفٌ
(are) Full of Kindness
மகா இரக்கமுள்ளவன்
raḥīmun
رَّحِيمٌ
Most Merciful"
மகா கருணையாளன்

Transliteration:

Wallazeena jaaa'oo min ba'dihim yaqooloona Rabbanagh fir lanaa wa li ikhwaani nal lazeena sabqoonaa bil eemaani wa laa taj'al fee quloobinaa ghillalil lazeena aamanoo rabbannaaa innaka Ra'oofur Raheem (QS. al-Ḥašr:10)

English Sahih International:

And [there is a share for] those who come after them, saying, "Our Lord, forgive us and our brothers who preceded us in faith and put not in our hearts [any] resentment toward those who have believed. Our Lord, indeed You are Kind and Merciful." (QS. Al-Hashr, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

எவர்கள் இவர்களுக்குப் பின் வந்தார்களோ, அவர்கள் "எங்கள் இறைவனே! எங்களையும் நீ மன்னித்தருள்! எங்களுக்கு முன் நம்பிக்கைக் கொண்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னித்தருள்! நம்பிக்கைக் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய உள்ளங்களில் குரோதங்களை உண்டு பண்ணாதே! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிகக் கிருபையுடையவனும், இரக்க முடையவனுமாக இருக்கின்றாய்!" என்று பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கின்றனர். (ஸூரத்துல் ஹஷ்ர், வசனம் ௧௦)

Jan Trust Foundation

அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவர்களுக்கு (-முஹாஜிர், அன்சாரிகளுக்குப்) பின்னர் வந்தவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! எங்களையும் எங்களை ஈமானில் முந்திய எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! நம்பிக்கை கொண்டவர்கள் மீது குரோதத்தை (-பொறாமையை) எங்கள் உள்ளங்களில் ஆக்கிவிடாதே! எங்கள் இறைவா! நிச்சயமாக நீதான் மகா இரக்கமுள்ளவன், மகா கருணையாளன்.